பிரித்தானிய பிரதமர் பதவிக்கான இறுதிக்கட்ட போட்டிக்கு போரிஸ் ஜோன்சன் ஜெரெமி ஹன்ட் தெரிவு

Boris Johnson, Jeremy Hunt in runoff for UK prime minister

0 245

பிரித்தானிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியின் இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற ஐந்தாம்கட்ட வாக்கெடுப்பிலும் போரிஸ் ஜோன்சன் 160 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஜெரெமி ஹன்ட் 77 வாக்குகளைப் பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவானதுடன், மைக்கேல் கோவ் 75 வாக்குகளை மட்டுமே பெற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.

போரிஸ் ஜோன்சன் மற்றும் ஜெரெமி ஹன்ட் ஆகியோர் 160,000 பேர் அளவிலான கன்சர்வேடிவ் கட்யின் உறுப்பினர்களின் வாக்குகளுக்காக மோதவுள்ளனர். வெற்றியாளர் ஜூலை 22ஆம் திகதி அறிவிக்கப்படுவார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!