தெஹிவளையில் வர்த்தகர் குத்திக் கொலை!

0 1,319

                                                                                                (அஸ்ரப் ஏ சமத்)
தெஹிவளையில் உள்ள ஹார்ட்வெயார் ஒன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவரால், அதன் உரிமையாளர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான சுபியான் (60) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது அவர் தனியாகவே வர்த்தக நிலையத்தில் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!