வரலாற்றில் இன்று ஜூன் 25: 1950 கொரிய யுத்தம் ஆரம்பமாகியது

0 126

1658: பிரிட்­ட­னுக்கும் ஸ்பெய்­னுக்கும் இடை­யி­லான யுத்­தத்தில் ஜமைக்­காவை மீளக் கைப்­பற்­று­வ­தற்கு ஸ்பெய்ன் தவ­றி­யது.

1678: எலேனா பிஸ்­கோ­பியா தத்­து­வ­வி­யலில் டாக்டர் பட்டம் பெற்ற முத­லா­வது பெண்­மணி என்ற பெரு­மையைப் பெற்றார்.

1938: அயர்­லாந்தின் முதல் ஜனா­தி­ப­தி­யாக டக்ளஸ் ஹைட் பத­வி­யேற்றார்.

1935: சோவியத் யூனி­ய­னுக்கும் கொலம்­பி­யா­வுக்கும் இடை­யி­லான ராஜ­தந்­திர உற­வுகள் ஆரம்­ப­மா­கின.

1940: ஜேர்­ம­னி­யிடம் பிரான்ஸ் சர­ண­டைந்­தது.

1944: இரண்டாம் உலகப் போரில் நோர்டிக் நாடு­களின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்­றி­யத்­துக்கு எதி­ராக பின்­லாந்தில் ஆரம்­ப­மா­னது.

1950: தென் கொரியா மீதான வட கொரி­யாவின் படை­யெ­டுப்பை அடுத்து கொரிய யுத்தம் ஆரம்­ப­மா­னது.

1967: உலகின் முத­லா­வது செய்­மதித் தொலைக்­காட்சி நிகழ்ச்சி நம் உலகம் (Our World) 30 நாடு­களில் காண்­பிக்­கப்­பட்­டது.

1975: இந்­தி­யாவில், பிர­தமர் இந்­திரா காந்­தி­அ­வ­ச­ர­காலச் சட்­டத்தை பிறப்­பித்தார்.

1975: போர்த்­துக்­கல்­லி­ட­மி­ருந்து மொஸாம்பிக் சுதந்­திரம் பெற்­றது.

1982: இரா­ணு­வத்தில் புதி­தாக சேர்க்­கப்­ப­டு­வோ­ருக்கு தலையை மொட்­டை­ய­டிக்கும் வழக்­கத்தை கிறீஸ் நிறுத்­தி­யது.

1983: லண்­டனில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்­டியில் மேற்­கிந்­தியத் தீவு­களை 43 ஓட்­டங்­களால் தோற்­க­டித்து இந்­திய அணி சம்­பி­ய­னா­கி­யது.

1991: குரோ­ஷியா, ஸ்லோவே­னியா ஆகி­யன யூகோஸ்­லா­வி­யா­வி­ட­மி­ருந்து பிரி­வ­தாக சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தன.

1993: கன­டாவின் முதல் பெண் பிர­த­ம­ரான கிம் கெம்பல் பதவிப் பிர­மாணம் செய்தார்.

1996: சவூதி அரே­பி­யாவில் கோபார் கோபு­ரத்தில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 19 அமெ­ரிக்க இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர்.

1997: புரோ­கிரஸ் எனும் ஆளில்லா விண்­கலம் ரஷ்ய விண்­வெளி ஆய்­வுக்­கூ­ட­மான மீருடன் மோதியது.

2007: கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.

2013: தமீம் பின் ஹமட் அல் தானி, கத்தாரின் 8 ஆவது அமீரானார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!