வரலாற்றில் இன்று ஜூன் 26: 1906 முத­லா­வது க்றோன் ப்றீ மோட்டார் பந்­தயம் நடை­பெற்­றது

0 128

363: ரோமப் பேர­ரசன் ஜூலியன் கொல்­லப்­பட்டார்

1483: மூன்றாம் ரிச்சார்ட் இங்­கி­லாந்தின் மன்­ன­னாக முடி சூடினார்.

1541: தென் அமெ­ரிக்­காவில் இன்கா பேர­ரசை முடி­வுக்குக் கொண்டு வந்த பிரான்­சிஸ்கோ பிசாரோ கொல்­லப்­பட்டார்

1690: தென்­மேற்கு இங்­கி­லாந்தின் நக­ரான டெயின்­மவுத் நகரை பிரான்ஸ் முற்­று­கை­யிட்­டது.

1718: தனது தந்தை மன்னர் முத­லா­வது பியோத்­தரை கொல்லச் சதி செய்­த­தாக மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்ட ரஷ்­யாவின் இள­வ­ரசர் அலெக்ஸி பெட்­ரோவிச் மர்­ம­மான முறையில் இறந்தார்.

1723 : அசர்­பைஜான் தலை­நகர் பாக்கூ, ரஷ்­யா­விடம் வீழ்ந்­தது.

1906: முத­லா­வது க்றோன் ப்றீ மோட்டார் வாகனப் போட்­டி­யான, பிரெஞ்சு க்றோன் ப்றீ போட்டி ஆரம்­ப­மா­கி­யது.

1924 : அமெ­ரிக்கப் படை டொமி­னிக்கன் குடி­ய­ரசை விட்டு வில­கி­யது.

1936 : முத­லா­வது ஹெலி­கொப்­ட­ராக கரு­தப்­படும் AFocke-Wulf Fw 61 வான் கலத்தின் முத­லா­வது பறப்பு ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றது.

1941: ஹங்­கேரி மீது சோவியத் விமா­னங்கள் குண்­டு­வீ­சின. மறுநாள் ஹங்­கேரி போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1945: ஐக்­கி­ய­நா­டுகள் அமைப்பை ஸ்தாபிப்­ப­தற்­கான ஐ.நா. பட்­ட­யத்தில் அமெ­ரிக்­காவின் சான் பிரான்­சிஸ்கோ நகரில் வைத்து 50 நாடுகள் கையெ­ழுத்­திட்­டன.

1960: பிரித்­தா­னி­யா­விடம் சோமா­லி­லாந்து சுதந்­திரம் பெற்­றது.

1960: பிரான்­ஸி­ட­மி­ருந்து மட­கஸ்கார் சுதந்­திரம் பெற்­றது.

1974: அமெ­ரிக்­காவின் மார்ஷ் சுப்­பர்­மார்க்­கெட்டில் விற்­பனை செய்­யப்­படும் பொருட்­க­ளுக்கு முதல் தட­வை­யாக “பார்கோட்” அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

1976: உலகின் மிக உய­ர­மான கட்­ட­ட­மான கன­டாவின் சி.என் கோபுரம் பொது­மக்கள் பயன்­பாட்­டிற்­காக திறக்­கப்­பட்­டது.

2006: கிழக்குத் திமோரின் முது­லா­வது பிர­தமர் மெரி அல்­கத்ரி, உள்­நாட்டு அர­சியல் பதற்­ற­நிலை கார­ண­மாக ராஜி­னாமா செய்தார்.

2013: சீனாவின் சியான்­ஜியாங் பிராந்­தி­யத்தில் ஏற்­பட்ட வன்­முறை கார­ண­மாக 36 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2013: கத்­தாரின் பிர­த­ம­ராக அப்­துல்லா பின் நஸீர் பின் கலீபா அல் தானி பத­வி­யேற்றார்.

2015: ஒரு பாலின ஜோடிகள் திரு­மணம் செய்­து­கொள்­வ­தற்கு அமெ­ரிக்க அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக உரிமை உள்­ளது என அந்­நாட்டு உயர்­நீ­தி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

2015: சிரியா, பிரான்ஸ், குவைத், துனீஷியா, சோமாலியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ் மற்றும் அல் ஷபாப் அமைப்புகளால் நடத்தப்பட்ட வெவ்வேறு தாக்குதல்களில் 403 பேர் பலியானதுடன் 336 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!