வரலாற்றில் இன்று ஜூன் 27: 1980 இத்தாலிய விமானமொன்று நடுவானில் மர்மமாக வெடித்ததில் 81 பேர் பலி

0 141

1709 : ரஷ்­யாவின் முதலாம் பியோத்தர், பொல்­டாவா என்ற இடத்தில் சுவீ­டனின் 12 ஆம் சார்ள்ஸின் படை­களை வென்றான்.

1801 : எகிப்தின் கெய்ரோ நகரம் பிரித்­தா­னியப் படை­யி­ன­ரிடம் வீழ்ந்­தது.

1806 : ஆர்­ஜன்­டீனா, புவனஸ் அய­ர்சை பிரித்­தா­னியர் கைப்­பற்­றினர்.

1896 : ஜப்­பானின் சன்­ரிக்கு என்­னு­மி­டத்தில் நில­ந­டுக்கம் மற்றும் சுனாமி கார­ண­மாக 27,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1898: அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஜோசுவா ஸ்லோக்கம் என்­பவர் முதன் முதலில் தனி­யாக படகில் உலகை சுற்றி வந்து சாதனை படைத்தார்.

1950 : கொரியப் போரில் பங்கு பற்­று­வ­தற்கு தனது படை­களை அனுப்ப ஐக்­கிய அமெ­ரிக்கா முடிவு செய்­தது.

1954 : உலகின் முத­லா­வது அணு­சக்தி மின் உற்­பத்தி மையம் மொஸ்­கோ­வுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்­கப்­பட்­டது.

1957 : அமெ­ரிக்­காவின் லூசி­யானா, மற்றும் டெக்ஸாஸ் மாநி­லத்தில் நிகழ்ந்த சூறாவ­ளியில் 500 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர்.

1967 : உலகின் முத­லா­வது ஏ.ரி.எம் லண்டன் என்ஃ­பீல்டில் அமைக்­கப்­பட்­டது.

1974 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரிச்சார்ட் நிக்சன் சோவியத் ஒன்­றி­யத்­துக்கு பயணம் மேற்­கொண்டார்.

1976: இஸ்­ரேலில் இருந்து பிரான்ஸ் நோக்கிச் சென்ற விமான­மொன்று கடத்­தப்­பட்டு உகண்­டா­வுக்கு திசை திருப்­பப்­பட்­டது.

1979 : குத்­துச்­சண்­டையில் இருந்து ஓய்வுபெறு­வ­தாக முஹம்மட் அலி அறி­வித்தார்.

1980: இத்­தா­லியில் விமான­மொன்று நடு­வானில் மர்­ம­மாக வெடித்­ததால் விமா­னத்­தி­லி­ருந்த 81 பேரும் உயி­ரிழந்­தனர்.

1988: பிரான்ஸில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 56 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1991 : ஸ்லோவே­னியா தனது விடு­த­லையை அறி­வித்த இரண்டாம் நாளில் யூகோஸ்­லா­வியா அதன் மீது படை­யெ­டுத்­தது.

2007 : டோனி பிளேயர் பிர­தமர் பத­வியைத் துறந்­ததைத் தொடர்ந்து கோர்டன் பிரவுண் ஐக்­கிய இராச்­சி­யத்தின் பிர­த­ம­ரானார்.

2008: ஸிம்­பாப்வே ஜனா­தி­ப­தி­யாக ரொபர்ட் முகாபே மீண்டும் தெரிவானார்.

2015: தாய்வானிலுள்ள உல்லாச நீரியல் பூங்காவொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் காரணமாக 510 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!