வரலாற்றில் இன்று ஜூன் 28: 2016 துருக்கி விமான நிலையத்தில் பாரிய தாக்குதல்

0 169

1651 : 17ஆம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் யூக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது.

1776 : ஜோர்ஜ் வோஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த தோமஸ் ஹின்க்கி தூக்கிலிடப்பட்டார்.

1838: பிரிட்டனில் விக்டோரியா ராணிக்கு முடிசூடப்பட்டது.

1881 : ஆஸ்திரியாவூம் சேர்பியாவூம் இரகசிய உடன்பாட்டை எட்டின.

1894: தொழிலாளர் தினத்தை உத்தியோகபூர்வ விடுமுறை தினமாக அமெரிக்கா பிரகடனப்படுத்தியது.

1904 : “நோர்ஜ்” என்ற டென்மார்க் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் சமுத்திரத்தில் சிறு திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.

1914 : ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்இ மற்றும் அவரது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு வழிவகுத்தது.

1919 : முதலாம் உலகப் போர்: பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் முடிவூக்கு வந்தது.

1922 : ஐரிஷ் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1940 : பெசராபியாவை (தற்போதைய மோல்டோவா) ருமேனியாவிடம் இருந்து சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.

1942: சோவியத் ய+னியனுக்கு எதிராக பாரிய படை நடவடிக்கையை ஜேர்மனி ஆரம்பித்தது.

1950 : தென்கொரிய தலைநகர் சியோலை வட கொரியா கைப்பற்றியது.1967 : கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1981: ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 73 பேர் பலியாகினர்.

1994 : ஓம் ஷின்றிக்கியோ என்ற மதவழிபாட்டுக் குழுவினர் ஜப்பானில் மட்சுமோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயூவைப் பரவச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டு 660 பேர் காயமடைந்தனர்.

1997: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக அதிபார குத்துச்சண்டைப் போட்டியில் இவான்டர் ஹொலிபீல்ட்டின் காதைக் கடித்தார் மைக் டைசன், தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

2004 : ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஈராக்கியர்களிடம் ஐக்கிய அமெரிக்கா ஒப்படைத்தது.

2009: ஹொண்டுராஸில் இராணுவப் புரட்சியின் மூலம் ஜனாதிபதி மனுவெல் ஸெலாயா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

2016: துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள அதாதுர்க் விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய பாரிய தாக்குதலில், 3 தாக்குதல்தாரிகள் உட்பட 48 பேர் பலியானதுடன் 230 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!