நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 25

0 407

“கலாபூஷணம்” பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன்

(சென்ற வாரத் தொடர்ச்சி)
சுரேஷ், நிவே­தாவை ஆட்­டு­வித்துக் கொண்­டி­ருந்தான். சுரேஷின் செவி­களில் மிஸ்டர் சத்­தி­யன என் டெடி எனக்கு டிசைட் பண்­ணிட்டார் ! என காரில் வரும் போது நிவேதா கூறிய வார்த்­தைகள் ஒலித்துக் கொண்­டி­ருந்­தன.

இனி அதி­லி­ருந்து..

ட­னத்தின் இசையின் வேகம் அதி­க­ரிக்க, அதி­க­ரிக்க நடனம் ஆடு­ப­வர்­களின் வேகமும் அதி­க­ரித்­தது. அதனால் நடனம் ஆடு­ப­வர்­களின் வேகமும் அதி­க­ரித்­தது.  ஆனாலும் நிவேதா நடைப் பிண­மாக மாறி விட்­டி­ருந்­ததால் சுரேஷின் நடன வேகத்­திற்கு நிவே­தாவால் அவ­ளது நடன வேகத்தை அதி­க­ரிக்க இயல வில்லை.

அருகில் வந்த பழ­ரசம் பரி­மா­று­ப­வனை அழைத்த சுரேஷ், அவன் காதுக்குள் நிவே­தா­வுக்கு கேட்­காமல் ஏதோ இர­க­சியம் சொன்னான். அவனும் வேக­மாக தலை­ய­சைத்து விட்டு உள்ளே சென்றான். நடனம் மேலும் சூடு பிடித்­தது.

பரி­சா­ரகன் பழ ரசத்தில் மதுவைக் கலந்து சுரே­ஷிடம் கொண்டு வந்து கொடுத்தான். அதில் ஒரு மிடறு அருந்­திய சுரேஷ், எஞ்­சி­யதை நிவே­தா­வுக்கு நீட்­டினான். களைப்பில் இருந்த நிவே­தாவும் அதை மள மள­வென அருந்­தினாள்.

சற்று நேரத்தில் மது மயக்கம் நிவே­தாவை உணர்­வற்­ற­வ­ளாக்­கி­யது. சுரேஷின் பிடியில் இருந்து தரையில் சரியப் போன நிவே­தாவை அள்ளி அணைத்த சுரேஷ், அவளை அலாக்­காகத் தூக்கி எடுத்தான். எல்­லோரும் போல் மது மயக்­கத்­திலும் நடனக் களைப்­பிலும் இருந்­ததால் இதனை யாரும் காண­வில்லை.

தப்பித் தவறி யாரும் காணா­த­வாறு சுரேஷ், நட­ன­மாடும் பாவ­னையில் நிவே­தாவை உள்ளே நடத்திச் சென்றான்.
காலைப் பொழுது புலர்ந்­தது. புள்ளி­னங்­களின் இனிய குரல்­களின் இசை கேட்­டது.சுரேஷ் தங்கி இருந்த அறையின் கதவு தட்­டப்­பட்­டது.

சுரேஷ் கதவைத் திறந்து பார்த்த போது எதிரே நின்ற சத்­தியன் சுரேஷை தள்ளிக் கொண்டு அறை­யினுள் நுழைந்து, பதற்­ற­முடன் நம்ம சீனியர் லோயர் கோபால லாஸ்ட் நைட் யாரோ சூட் பண்­ணிட்­டாங்­களாம் என்றான். அது கேட்டு சுரேஷ் கலக்­க­ம­டைந்தான்.

நான் இப்­பவே கௌம்­புறேன். ஆ யு கமிங் வித் மீ ? என சத்­தியன் கேட்ட போது, அதற்கு பதி­லேதும் சொல்­லாத சுரேஷின் பார்வை அறை­யினுள் இருந்த கட்­டிலின் மேல் சென்­றது. இரவு பார்ட்­டிக்கு அணிந்த கலைந்த ஆடை­யுடன் கட்­டிலில் கால்­க­ளுக்கு இடையில் முகத்தைப் புதைத்­த­வாறு நிவேதா அமர்ந்துக் கொண்­டி­ருந்தாள்.

அந்தக் காட்­சியைக் கண்ட சத்­தியன் திடுக்­கிட்டு சுய நினைவு அற்­ற­வ­னாக நிவே­தா­வையே பார்த்­த­வாறு சிலை­யாக நின்றான். மன­மு­டைந்த சத்­தியன் அறையை விட்டு வெளியே­றினான்.

சத்­தியன் அறைக்கு வெளியே சென்­றதும் அறைக் கதவை மெது­வாக சாத்திக் கொண்டு சத்­தி­யனை நோக்­கிய சுரேஷ், சத்­தியா ! என சத்­தி­யனைக் கூப்­பிட்டான். நின்று சுரேஷை திரும்பிப் பார்த்தான், சத்­தியன்.

சுரேஷ் தன்னை நெருங்கி வந்­ததும் சுரேஷை நோக்­கிய சத்­தியன், சுரேஷ் ! யுவர் பி ஹெவ் வெரி பேட். சுகந்தி சந்­தேகப் பட்­ட­துல எந்த வித­மான சந்­தே­கமும் இல்ல. நீ ஒரு குழந்­தைக்கு தகப்பன். இப்­படி வேலி தாண்டி நடந்­துட்­டியே என கடும் வேதனைப் பட்டான்.

யெஸ் இட் ஈஸ் ட்ரூ ! உல­கத்­துல யாரும் பண்­ணா­த­தையா நான் பண்­ணிட்டேன்? எனக் கேட்டான், சுரேஷ். இரு­வ­ரி­னதும் சம்­பா­ஷணை அறை­யினுள் இருந்த நிவே­தா­வுக்கு தெளிவாகக் கேட்­டது.

சத்­தியன் (குரல்): தவறு செய்­கி­ற­வங்­க­ளுக்கு தண்­டணை வாங்கிக் கொடுக்­கிற நாங்­களே தவறு செய்­கி­றதா?

சுரேஷ் ( குரல் ) : நான் பலாத்­காரம் செய்ய இல்­லையே ! நிவே­தாவும் விரும்­பினா, தெட்ஷ் ஓல் !

சத்­தியன் ( குரல் ) : அப்போ நிவே­தா­வோட பியுச்சர் ?

சுரேஷ் ( குரல் ) : ஐ ஏம் நொட் வொரி எபௌட் தட் !

சத்­தியன் ( குரல் ) : இது சுகந்­திக்கு துரோகம் இல்­லையா ?

சுரேஷ் (குரல்): சத்­தியா! ஆம்­புல சேத்தக் கண்டா மிதிப்பான், தண்­ணியெக் கண்டா கழு­வுவான்

சத்­தியன் ( குரல் ) : ஓ மை கார்ட் ! எனக்கு அதக் கேட்­கவே கஷ்­டமா இருக்கு. நான் இப்­பவே கொழும்­புக்கு கௌம்­புறேன். நீங்க எப்­ப­வா­வது வாங்க.

சத்­தியன் முன் நோக்கி நடக்கும் ஒலி. நிவே­தா­வுக்கு கேட்­டது. நிவேதா கண்ணீர் ஊற்­றெ­டுக்கும் கண்­களைத் துடைத்துக் கொண்டாள்.  சுரேஷ் அறை­யினுள் நுழைந்தான்.

மெது­வாகச் சென்று கட்­டிலில் நிவேதா அருகே அமர்ந்து நம்ம சீனியர் லோயர் கோபால லாஸ்ட் நைட் யாரோ சுட்டுக் கொன்­னுட்­டாங்­களாம் என்றான்.அதைக் கேட்ட நிவேதா கடும் ஆத்­தி­ர­முடன் அவுனும் இது போல எத்தன பெண்களோட வாழ்க்கையெ நாசமாக்கினானோ ? என்றாள்.

நிவேதா! நீ சத்தியன மெரி பண்ணிடுவியோங்கிற பயத்துலதான் நான் இப்படி பண்ணிட்டேன். நான் உன்னை மெரி பண்ணிக்கிறேன். கவலைப் படாதே நிவேதா ! என்ற சுரேஷ், அவள் கையைப் பற்றினான்.

                                                                                                                                                                                                            (அடுத்த வாரம் தொடரும்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!