40 குடியேறிகளை ஏற்றி வந்த இத்தாலிய மீட்புக் கப்பலின் கெப்டனான பெண் கைது!

Sea-Watch 3 Rescue ship captain Carola Rackete arrested at Lampedusa port

0 3,873

ஆபிரிக்க கரையோரத்திலிருந்து மீட்கப்பட்ட 40 குடியேறிகளை இத்தாலிக்கு ஏற்றிவந்த கப்பலின் கெப்டனான பெண் இத்தாலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீ வோட்ச் 3 எனும் குடியேறிகள் மீட்புக் கப்பலின் கெப்டனான கரோலா ரெக்கெட் எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

லிபிய கரையோரத்திலிருந்து மேற்படி கப்பல் மூலம், 53 குடியேறிகள் கடந்த 12 ஆம் திகதி மீட்கப்பட்டனர்.

மேற்படி குடியேற்றவாசிகளுடன் இத்தாலிக்கு மேற்படி கப்பல் வருவதற்கு இத்தாலிய அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்தனர்.

இதனால் சுமார் 2 வாரங்கள் கடலில் இழுபறி நிலை நீடித்தது. சுகவீனமடைந்த 13 குடியேறிகளை இத்தாலிய அதிகாரிகள் பொறுப்பேற்றனர். ஏனைய 40 பேர் கப்பலில் இருந்தனர்.

இக்கப்பல் இத்தாலிய துறைமுகத்துக்குள் வருவதை இத்தாலிய அதிகாரிகள் தடை செய்தனர்.

எனினும், நேற்று இரவு இக்பப்பல் இத்தாலியின் லம்பேதுசா துறைமுகத்துக்குள் நுழைந்தது.

அனுமதி இல்லாதபோதிலும் துறைமுகத்துக்குள் நுழைய கெப்டன் ரெக்கெட் தீர்மானித்தார்.

அதன்பின் கப்பலின் கெப்டன் கரோலா ரெக்கெட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

31 வயதான கரோலா ரெக்கெட் ஜேர்மனியர் அவார். அவரை இத்தாலிய பொலிஸார் கைவிலங்கிட்டு கப்பலிலிருந்து அழைத்துச் சென்றனர்.

போர் கப்பலை எதிர்த்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என இத்தாலிய அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!