வரலாற்றில் இன்று: ஜூலை 1: 1997- ஹொங்கொங்கின் ஆட்சி சீனாவிடம் ஒப்படைப்பு

0 146

1798: நெப்­போ­லி­யனின் படைகள் எகிப்தை அடைந்­தன.

1825: ஐக்­கிய இராச்­சிய நாண­யங்கள் இலங்­கையில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நாண­யங்கள் ஆக்­கப்­பட்­டன.

1851: அவுஸ்­தி­ரே­லி­யாவில் விக்­டோ­ரியா குடி­யேற்றப் பகுதி நியூ சௌத் வேல்ஸ் பிராந்­தி­யத்தில் இருந்து பிரிக்­கப்­பட்­டது.

1862: உலகின் 4 ஆவது மிகபபெரிய நூல­க­மான ரஷ்­யாவின் அரச நூலகம் அமைக்­கப்­பட்­டது.

1867: பிரித்­தா­னிய வட அமெ­ரிக்கச் சட்டம், 1867 கன­டாவின் அர­ச­மைப்புச் சட்­ட­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. ஜோன் மாக்­டொனால்ட் பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­றார்.

1873: பிரின்ஸ் எட்­வேர்ட் தீவு கனடாக் கூட்­ட­மைப்பில் இணைந்­தது.

1876: சேர்பியா துருக்கி மீது போரை அறி­வித்­தது.

1878: சர்வதேச தபால் ஒன்­றி­யத்தில் கனடா இணைந்­தது.

1881: உலகின் முத­லா­வது சர்வதேச தொலை­பேசி அழைப்பு கன­டாவின் நியூ பிரன்ஸ்விக் மாநி­லத்­துக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் மேய்ன் மாநி­லத்­திற்கும் இடையில் மேற்கொள்ளப்­பட்­டது.

1916: முதலாம் உலகப் போர்: பிரான்ஸில் சொம் என்ற இடத்தில் இடம்­பெற்ற சண்­டையின் முதல் நாளில் 20,000 பிரித்­தா­னிய வீரர்கள் கொல்­லப்­பட்­ட­னர், 40,000 பேர் காய­ம­டைந்­த­னர்.

1921: சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1932: ஏபிசி (அவுஸ்­தி­ரே­லிய ஒலி­ப­ரப்புச் சேவை) ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1947: இந்­தி­யா­வுக்கு முழு சுதந்­தி­ரத்தை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்­கு­வ­தற்கு பிரித்­தா­னிய நாடா­ளு­மன்றம் தீர்மானித்­தது.

1960: இத்­தாலி, பிரிட்­ட­னி­ட­மி­ருந்து சோமா­லியா சுதந்­திரம் பெற்­றது

1960: கானா குடி­ய­ர­சா­னது.

1962 : பெல்­ஜி­யத்­தி­ட­மி­ருந்து ருவாண்டா சுதந்­திரம் பெற்­றது.

1962: பெல்­ஜி­யத்­திடம் இருந்து புருண்டி சுதந்­திரம் பெற்­றது.

1967: ஐரோப்­பிய சமூகம் உரு­வாக்­கப்­பட்­டது.

1968: அணு­வா­யுத பரவல் தடை ஒப்­பந்­தத்தல் 62 நாடுகள் கையெ­ழுத்­திட்­டன.

1970: பாகிஸ்தான் ஜனா­தி பதி யாஹ்யா கான், மேற்கு பாகிஸ்­தானில் மாகா­ணங்­களை மீள ஸ்தாபித்­தார்.

1976: மடெய்ரா தீவு­க­ளுக்கு போர்த்துக்கல் சுயாட்­சியை வழங்­கி­யது.

1978: அவுஸ்­தி­ரே­லி­யாவின் வட மண்­டலம் அவுஸ்­தி­ரே­லிய பொது­ந­ல­வா­யத்­துக்குக் கீழ் சுயாட்சி பெற்­றது.

1979: சோனி நிறு­வ­னத்­தினால் ”வோக்மன்” அறி­முகம் செய்­யப்­பட்­டது.

1990: மேற்கு ஜேர்மனியின் டொச் மார்க் நாண­யத்தை கிழக்கு ஜெர்மனி தனது நாணய அல­காக ஏற்றுக் கொண்­டது. இதன் மூலம் இரு ஜேர்மனி­க­ளி­னதும் பொரு­ளா­தாரம் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டது.

1991: செக் குடி­ய­ரசின் தலை­ந­கர் பிராக்கில் இடம்­பெற்ற கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட முடிவில் வார்சா ஒப்­பந்தம் அதி­கா­ரபூர்வமாகக் கலைக்­கப்­பட்­டது.
1997: ஹொங்­கொங்கில் சீனா தனது ஆட்­சியை ஆரம்­பித்­தது. 156 ஆண்டு கால பிரித்­தா­னிய குடி­யேற்ற ஆட்சி முடி­வ­டைந்­தது.

2002: சர்வதேச குற்­ற­வியல் நீதி­மன்றம் உரு­வாக்­கப்­பட்­டது.

2002: தெற்கு ஜேர்மனியில் இரண்டு விமா­னங்கள் வானில் மோதி­யாதில் 71 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

2004: காசி­னி-­ஹியூஜென்ஸ் விண்­கலம் சனிக் கோளின் சுற்று வட்­டத்­திற்குள் சென்றது.

2013: ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 ஆவது அங்கத்தவராக குரோஷியா இணைந்தது.

2015: எகிப்தின் சினாய் பிராந்தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எகிப்திய படையினர் 21 பேரும் தீவிரவாதிகள் 21 பேரும் கொல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!