ஸ்பெய்னில் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சியில் ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை சிறார்கள்

0 45

கெஸ்ப்ரொம் சர்­வ­தேச சிறுவர் சமூகத் திட்­டத்­தின்கீழ் ஏழா­வது தட­வை­யாக வெற்­றி­க­ர­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நட்­பு­ற­வுக்­கான கால்­பந்­தாட்ட நிகழ்ச்­சியில் இலங்­கை­யி­லி­ருந்து றினோன் கால்­பந்­தாட்ட பயிற்­சி­ய­கத்தைச் சேர்ந்த நான்கு பாட­சாலை மாண­வர்கள் கலந்­து­கொண்டு திற­மை­களை வெளிப்­ப­டுத்தி பாராட்டைப் பெற்­றனர்.

ஸ்பெய்னின் தலை­நகர் மெட்­றிடடில் அண்­மையில்    நடை­பெற்ற இந் நிகழ்ச்­சியில் ஐரோப்பா, ஆசியா, ஆபி­ரிக்கா தென் மற்றும் வட அமெ­ரிக்கா ஆகிய கண்­டங்­க­ளி­லி­ருந்து 50க்கும் மேற்­பட்ட நாடு­களைச் சேர்ந்த 800க்கும் மேற்­பட்ட சிறு­வர்­களும் அதி­கா­ரி­களும் கலந்­து­கொண்டு சிறந்த அனு­ப­வங்­களைப் பெற்­றுக்­கொண்­டனர்.

இலங்­கை­யி­லி­ருந்து ராகுல் இம்­மா­னுவேல் (மரு­தானை புனித சூசை­யப்பர்), ரவிந்து டயஸ் (கேட்வே), தரிந்த்ர பெரேரா (கொட்­டாஞ்­சேனை புனித ஆசீர்­வா­தப்பர்), முஹம்மத் சாத் (விச்­சர்லி சர்­வ­தேச பாட­சாலை) ஆகிய நான்கு சிறு­வர்கள் நீண்ட தேர்வு செயல்­முறை மூலம் தெரிவு செய்­யப்­பட்டு றினோன் கால்­பந்­தாட்ட பயிற்­சி­யகத்­தினால் இந் நிகழ்ச்­சிக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

நட்­பு­ற­வுக்­கான கால்­பந்­தாட்ட உலக வல்­லவர் போட்­டியில் ரவிந்து டயஸ் (முன்­கள வீரர்), முத­லா­வது இலங்­கை­ய­ராக கோல் போட்­ட­துடன் அவர் மொத்­த­மாக இரண்டு கோல்­களைப் போட்­டி­ருந்தார். ரவிந்த டயஸ் விளை­யா­டிய சுண்டா பெங்­கோலின் என்ற பெய­ரைக்­கொண்ட அணியில் ரஷ்யா, கிரேக்கம், ஜப்பான், பாகிஸ்தான் ஆகிய நாடு­களைச் சேர்ந்த சிறு­வர்கள் பங்­கு­பற்­றினர். இவ்­வணி கால் இறு­தி­வரை முன்­னே­றி­யது.

இபே­ரியன் லின்க்ஸ் அணியில் தரிந்த்ர பெரேரா, ஸ்னோ லெப்பர்ட் அணியில் முஹம்மத் சாத் ஆகியோர் இடம்­பெற்­ற­துடன் அவர்­க­ளது அணிகள் லீக் சுற்றில் இரண்டாம் இடங்­களைப் பெற்­றன. பிலிப்பீன் க்ரொக்­கடைல் அணியின் இளம் பயிற்­று­ந­ராக ராகுல் இம்­மா­னுவேல் செயற்­பட்டார். இவ் வணியில் ரஷ்யா, சுவீடன், சைப்ரஸ், லிது­வே­னியா, எஸ்­டோ­னியா, உஸ்­பெ­கிஸ்தான் ஆகிய நாடு­களைச் சேர்ந்த சிறு­வர்கள் இடம்­பெற்­றனர்.

ஸ்பெய்ன் பய­ண­மான இலங்கை குழு­வுக்கு றினோன் கால்­பந்­தாட்ட பயிற்­சி­ய­கத்தின் ஸ்தாப­கரும் கனிஷ்ட மற்றும் பாட­சா­லைகள் கால்­பந்­தாட்ட ஊக்­கு­விப்­பா­ள­ரு­மான வின்சென்ட் பீரிஸ் தலைமை தாங்­கி­ய­துடன் பயிற்­சி­யகத்தின் தலைமை பயிற்­று­நரும் முன்னாள் தேசிய வீர­ரு­மான நிசல் நிலங்­கவும் குழுவில் இடம்­பெற்றார்.

ஆபத்­துக்­களை எதிர்­கொள்ளும் விலங்­கு­களின் பெயர்­களைக் கொண்ட 32 சர்­வ­தேச அணி­களில் 50 நாடு­களைச் சேர்ந்த சிறு­வர்கள் இணைக்­கப்­பட்டு நட்­பு­ற­வுக்­கான கால்­பந்­தாட்ட உலக வல்­லவர் போட்­டிகள் நடத்­தப்­பட்­டன.

அத்­துடன் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட நட்­பு­றவுத் திட்ட நிகழ்ச்சி, சர்­வ­தேச நட்­பு­றவு முகாம், ஒன்­பது பெறு­ம­திகள் சார்ந்த கல்வி, கால்­பந்­தாட்டம் மற்றும் நட்­பு­ற­வுக்­கான சர்­வ­தேச தினம் ஆகிய நிகழ்ச்­சி­களில் சிறு­வர்கள் கலந்து பயன்­பெற்­றனர்.

மேலும் நட்­பு­றவு, சமத்­துவம், நேர்மை, சுகா­தாரம், அமைதி, பற்­று­றுதி, வெற்றி, மர­புகள் மற்றும் மரி­யாதை ஆகிய ஒன்­பது மானுட பெறு­ம­திகள் தொடர்­பாக சிறு­வர்­க­ளுக்கு விளக்­கப்­ப­ட­டது. இத் திட்­டத்­துக்கு பீபா, ஐரோப்­பிய கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் ஒன்­றியம், ஐக்­கிய நாடுகள் சபை, சர்­வ­தேச ஒலிம்பிக் மற்றும் பரா­லிம்பிக் குழுக்­களும் ஒத்­து­ழைப்பு நல்­கி­யி­ருந்­தன.

மேலும் கால்­பந்­தாட்ட பயிற்சி முகாமில் அதி­க­ள­வி­லான நாடு­களைச் சேர்ந்த சிறு­வர்கள் பங்­கு­பற்­றி­யதன் மூலம் நட்­பு­ற­வுக்­கான கால்­பந்­தாட்ட நிகழ்ச்சித் திட்டம் கின்னஸ் சாதனை ஏடு­களில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பதிவானதுடன் அந்த சாதனையில் இலங்கையர் நால்வர் இடம்பெற்றதன் மூலம் தேசத்திற்கு பெருமை சேர்த்துக்கொடுத்தனர்.

பி.ஜே.எஸ்.சி. கெஸ்ப்ரொம் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபைத் தலைவர் விக்டர் சுப்கோவ், சர்வதேச கால்பந்தாட்ட முன்னாள் நட்சத்திரம் ரொபர்ட்டோ கார்லோஸ் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். (என்.வீ.ஏ.)

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!