அணிக்கு எழுவர் டயலொக் கிண்ண றக்பியில் 16 அணிகள்

0 119

(நெவில் அன்தனி)

நடப்பு மற்றும் முன்னாள் சம்பியன் கழகங்கள் உட்பட 8 முதல்தர கழகங்ளுடன் இரண்டாம் பிரிவு கழகங்களையும் சேர்ந்த 16 அணிகள் பங்குபற்றும் அணிக்கு எழுவர் டயலொக் கிண்ண றக்பி போட்டிகள் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நாளையும் நாளைமறுதினமும் நடைபெறவுள்ளன.

கடந்த வருடம் முதலாம் கட்டத்தில் கண்டி விளையாட்டுக் கழகமும் இரண்டாம் கட்டத்தில் சீ.ஆர். அண்ட் எவ்.சி.யும் சம்பியன்களாகின. இரண்டு கட்டங்கள் நிறைவில் சீ.ஆர். ஒட்டுமொத்த சம்பியனானது.

இவ் வருடம் சீ.எச். அண்ட் எவ்.சி., கடற்படை, பொலிஸ், விமானப்படை, இராணுவம் ஆகியன தலா இரண்டு அணிகளை (ஏ மற்றும் பி அணிகள்) களம் இறக்கவுள்ளன.

நடப்பு சம்பியன் சீ.ஆர். அண்ட் எவ்.சி., முன்னாள் சம்பியன் கண்டி விளையாட்டுக் கழகம், ஹெவ்லொக்ஸ் ஆகியவற்றுடன் பிராந்திய அல்லது பி பிரிவு கழகங்களான பீட்டர்சன், காலி றக்பி கால்பந்தாட்டக் கழகம், மலே சி.சி. ஆகியன தலா ஒரு அணியையும் களம் இறக்கவுள்ளன. இந்த 16 அணிளும் நான்கு குழுக்களில் விளையாடும்.

லீக் சுற்று முடிவில் முதல் இடங்களைப் பெறும் அணிகள் பிரதான கிண்ணப் பிரிவிலும் இரண்டாம் இடங்களைப் பெறும் அணிகள் கோப்பை பிரிவிலும் மூன்றாம் இடங்களைப் பெறும் அணிகள் குவளைப் பிரிவிலும் கடைசி இடங்களைப் பெறும் அணிகள் கேடயப் பிரிவிலும் நொக் அவுட் அடிப்படையில் மோதும்.

கடந்த காலங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வந்த இப் போட்டியை இவ் வருடம் ஒரே கட்டமாக நடத்துவதற்கு இலங்கை றக்பி ஒன்றியமும் அனுசாரணையாளர்களான டயலொக் ஆசியாட்டா நிறுவனமும் தீர்மானித்துள்ளன.

டயலொக் டெலிவிஷன் மற்றும் திபப்பரே.கொம் என்பன உத்தியோகபூர்வ பங்காளிகளாக இணைந்துள்ளன.

அணிக்கு எழுவர் டயலொக் றக்பி போட்டிக்கான பிரதான அனுசரணைக்குரிய ஆவணத்தை டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் குறியீடு மற்றும் ஊடக சிரேஷ்ட முகாமையாளர் ஹர்ஷா சமரநாயக்க, இலங்கை றக்பி ஒன்றிய பிரதித் தலைவர் ரிஸ்லி இலியாஸிடம் கையளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!