‘தெரண – லக்ஸ் திரைப்பட விருது விழா: சிறந்த நடிகராக தர்ஷன் தர்மராஜ் தெரிவு

Derana - Lux Film Awards 2019

0 716

தெரண -லக்ஸ் திரைப்­பட விருது விழாவில்’ சிறந்த நடி­க­ருக்­கான விருதை தர்ஷன் தர்­மராஜ் வென்­றுள்ளார். சிறந்த நடி­கைக்­கான விருதை அனோமா ஜனா­தரி வென்றார்.

7 ஆவது தெரண -லக்ஸ் திரைப்­பட விருது  விழா, (Derana – Lux Film Awards 2019) கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு நடை­பெற்­றது.

இவ்­வி­ழாவில் சிறந்த நடி­க­ருக்­கான விருது ‘போரி­சா­தயா’ படத்தில் நடித்­த­மைக்­காக தர்ஷன் தர்­ம­ரா­ஜுக்கு வழங்­கப்­பட்­டது. தெவன விஹகுன் படத்தில் நடித்த அனோமா ஜனா­த­ரிக்கு சிறந்த நடி­கைக்­கான விருது வழங்­கப்­பட்­டது.

இவ்­வி­ழாவில், சிறந்த திரைப்­ப­ட­மாக, புகழ்­பெற்ற இயக்­குநர் சந்­திரன் ரட்ணம் இயக்­கிய ‘அக்­கோர்டிங் டூ மெத்­தியூ’ எனும் ஆங்­கில திரைப்­படம் தெரி­வா­கி­யது. சிறந்த எடி­டிங்­குக்­கான விருதும் சந்­திரன் ரட்ணத்­துக்கு வழங்­கப்­பட்­டது.

சிறந்த தமிழ்த் திரைப்­ப­டத்­துக்­கான விருதை ‘கோமாளி கிங்ஸ்’ வென்­றது.

சிறந்த திரைக்­க­தைக்­கான விருது ஜயந்த சந்­தி­ர­சி­றிக்கு வழங்­கப்­பட்­டது. சிறந்த இயக்­கு­ந­ருக்கான விருது, தெவன விஹகுன் படத்தின் இயக்­குநர் சஞ்­சீவ புஷ்­ப­கு­மா­ர­வுக்கு வழங்­கப்­பட்­டது.

சிறந்த துணை நடி­கைக்­கான விருதை சம­னலி பொன்­சேகா வென்றார். சிறந்த துணை நடி­க­ருக்­கான விருதை மஹேந்­திர பெரேரா வென்­றார்.

சிரேஷ்ட நடிகர் ஜக்சன் அன்­டனி மிகப் பிர­ப­ல­மான நடி­க­ருக்­கான விரு­தையும் உதாரி வர்­ண­கு­ல­சூ­ரிய மிகப் பிர­ப­ல­மான நடி­கைக்­கான விரு­தையும் வென்­றனர்.
சிறந்த நகைச்­சுவை நடி­க­ருக்­கான விருதை பந்து சம­ர­சிங்க வென்றர்.

நாளைய சினிமா மிகவும் நம்­பிக்­கைக்­கு­ரிய இயக்­குநர் விருதை ‘ஹவுஸ் ஒவ் மை பாதர்’ படத்தை இயக்­கிய சுபா சிவ­கு­மாரன் வென்றார்.

வளர்ந்­து­வரும் சிறந்த நடி­கருக்­கான விருதை நய­ன­தாரா விக்­கி­ர­ஆ­ரச்சி வென்றார். லக்ஸ் கிள­மரஸ் ஸ்டார் விருதை ஷாலினி தாரகா வென்றார்.

தேவக்க கோஜே, கெவின் லுடே­விகே ஆகியோர் சிறந்த அறி­மு­கங்­க­ளுக்­கான விருதை வென்­றனர்.

சிரேஷ்ட நடிகர் அமர­சிறி கலன்­சூ­ரி­ய­வுக்கு ஆயுட்­கால சாத­னை­யாளர் விருது வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!