வரலாற்றில் இன்று: ஜூலை 3: 1988: 290 பேருடன் பயணித்த ஈரானிய பயணிகள் விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டுவீழ்த்தியது

0 252

1608: கன­டாவின் கியூபெக் நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1767: நோர்­வேயில் தற்­போதும் வெளி­வரும் மிகப்­ப­ழை­மையான பத்­தி­ரி­கை­யான அட்­ரெ­ஸா­வி­செனின் முதல் பதிப்பு வெளி­யா­கி­யது.

1819: அமெ­ரிக்­காவின் முத­லா­வது சேமிப்பு வங்கி நியூ­யோர்க்கில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1886: மோட்­டாரில் இயங்கும் முதல் பென்ஸ் காரை ஜேர்­ம­னியின் மன்ஹெய்ம் நகரில் கார்ல் பென்ஸ் காட்­சிப்­ப­டுத்­தினார்.

1938: இங்­கி­லாந்தில் நீராவி ரயி­லொன்று 203 கிலோ­மீற்றர் வேகத்தில் பயணம் செய்து புதிய சாதனை படைத்­தது.

1940: 2 ஆம் உலக யுத்­தத்­தின்­போது பிரெஞ்சு கடற்­படை கப்பல் அணி­யொன்று பிரித்­தா­னிய படை­களின் எதிர்­பா­ராத குண்­டு­வீச்­சுக்­குள்­ளா­னது. இதனால் 1297 பிரெஞ்சு படை­யினர் உயி­ரி­ழந்­தனர். பிரான்ஸும் பிரிட்­டனும் நேச­நா­டு­க­ளாக விளங்­கி­ய­போ­திலும் ஜேர்­ம­னி­யிடம் பிரான்ஸ் சர­ண­டைந் ­த­தை­ய­டுத்து இத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

1944: பெலா­ரஸின் தலை­நகர் மின்ஸ்கை நாஸி ஜேர்­ம­னி­யி­ட­மி­ருந்து சோவியத் யூனி­யனின் படைகள் கைப்­பற்­றின.

1962: பிரான்­ஸுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட அல்­ஜீ­ரிய சுதந்­திரப் போர் முடி­வுற்­றது. 132 வரு­ட­கால பிரெஞ்சு ஆட்­சி­யி­லி­ருந்து அல்­ஜீ­ரியா சுதந்­திரம் பெற்­றது.

1969: சோவியத் யூனி­யனின் விண்­வெளி ரொக்கெட் ஏவு­த­ளத்தில் ஏற்­பட்ட பாரிய வெடிப்பின் கார­ண­மாக அந்த ஏவு­தளம் அழிந்­தது.

1979: ஆப்­கா­னிஸ்­தானில் சோவியத் ஆத­ரவு அர­சாங்­கத்தின் எதி­ர­ணி­யி­ன­ருக்கு இர­க­சிய உத­வி­ய­ளிக்கும் முதல் பணிப்­புரை ஆவ­ணத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜிம்மி கார்ட்டர் கையெ­ழுத்­திட்டார்.

1988: பார­சீக வளை­கு­டா­வுக்கு மேல் பறந்­து­கொண்­டி­ருந்த ஈரானின் “ஈரான் எயார்” நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான பய­ணிகள் விமா­ன­மொன்றை அமெ­ரிக்க யுத்தக் கப்­ப­லான யூ.எஸ்.எஸ்.வின்சென்ஸ் சுட்­டு­வீழ்த்­தி­யது. இதனால் விமா­னத்­தி­லி­ருந்த 290 பேரும் உயி­ரி­ழந்­தனர்.

2001: ரஷ்­யாவின் இர்குட்ஸ்க் நகரில் இடம்­பெற்ற விமான விபத்தில் 145 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2006: ஸ்பெய்னின் வலென்­சியா நகரில் இடம்­பெற்ற ரயில் விபத்­தினால் 43 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2013: எகிப்தில் ஜன­நா­யக ரீதி­யாக தெரி­வு­செய்­யப்­பட்ட முத­லா­வது ஜனாதிபதியான மொஹமட் முர்ஸி, ஆர்ப்பாட்டங்களையடுத்து இராணுவத்தினரால் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

2018: மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக், ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!