கோபா அமெரிக்கா கிண்ண கால்பந்தாட்டத்தில் பெரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் வீரர்களுக்கு முத்தம் வழங்குவதாக அறிவித்த நடிகை

0 303

கோபா அமெ­ரிக்கா கிண்ண கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் பெரு நாட்டின் அணியை இறு­திப்­போட்­டிக்கு அழைத்துச் செல்­வ­தற்கு பங்­காற்றும் வீரர்­க­ளுக்கு தான் முத்தம் வழங்க விரும்­பு­வ­தாக பெருவின் பிர­பல நடிகை ஸ்டெபானி கயோ தெரி­வித்­துள்ளார்.

கோபா அமெ­ரிக்கா கிண்ண கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்டி தற்­போது பிரே­ஸிலில் நடை­பெ­று­கி­றது.

பெரு அணி­ இம்­முறை  அரை­யி­றுதிப் போட்­டிக்குத் தகுதி பெற்­றுள்­ளது.

நடப்புச் சம்­பி­ய­னான சிலி அணி­யுடன் அரை­யி­றுதிப் போட்­டியில் பெரு அணி மோத­வுள்­ளது.

இந்­நி­லையில், இப்­போட்­டியில் பெரு அணி வெற்றி பெற்று அவ்­வ­ணியை இறு­திப்­போட்­டிக்கு தகுதி பெறச் செய்யும் வீரர்கள் அனை­வ­ருக்கும் தான் முத்தம் வழங்கத் தயார் என நடிகை ஸ்டெபானி கயோ தெரி­வித்­துள்ளார்.

31 வய­தான ஸ்டெபானி கயோ, தொலைக்­காட்சித் தொடர்கள் மூலம் பெரு மற்றும் கொலம்­பி­யாவில் மிகப் பிர­ப­ல­மா­னவர்.

பெரு, சிலி அணிகள் மோதும் அரை­யி­றுதிப் போட்டி புதன்­கி­ழமை இரவு (வியாழன்இலங்கை , இந்திய நேரப்­படி வியாழன்  காலை 6.00 மணிக்கு) நடை­பெ­ற­வுள்­ளது.

பெரு அணி இதற்­குமுன் 1939 மற்றும் 1975 ஆம் ஆண்­டு­களில் கோபா அமெரிக்கா கிண்ணத்தை வென்றுள்ளது. இம்முறை 3 ஆவது தடவையாக அரையிறுதிக்கு முன்னேறி யுள்ளது

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!