உலகக் கிண்ணத்துடன் ஓய்வுபெறுகிறார் தோனி?

0 1,303

இங்­கி­லாந்தில் நடை­பெற்­று­வரும் உலகக் கிண்ண கிரிக்­கெட்டில் இந்­தி­யாவின் கடைசிப் போட்டி மஹேந்த்ர சிங் தோனியின் பிரி­யா­விடை போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது.

2019 ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் அதி­க­பட்ச ஆற்­றலை வெளிப்­ப­டுத்­து­வதில் தடு­மா­று­கிறார் என விமர்­ச­னத்­துக்­குள்­ளா­கி­வரும் இந்­திய அணியின் முன்னாள் தலைவர் தோனி, உலகக் கிண்ணப் போட்டி முடிவில் சர்­வ­தேச கிரிக்­கெட்­டி­லி­ருந்து முற்­றி­லு­மாக ஓய்வு பெற­வுள்ளார்.

பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ரான போட்டி வெற்­றி­யுடன் அரை இறு­தியில் நுழைந்­துள்ள இந்­தியா, இறுதிப் போட்­டிக்கும் முன்­னேறும் என எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது. 

1983இல் கபில் தேவுக்குப் பின்னர் 2011இல் இந்­திய அணியை உலக சம்­பி­ய­னா­வ­தற்கு வழி­ந­டத்­திய தோனிக்கு, இம்­முறை வெற்­றி­வா­கை­யுடன் பிரியாவிடை கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!