வரலாற்றில் இன்று: ஜூலை 4: 1776-அமெரிக்கா சுதந்திரப் பிரகடனம் செய்தது

0 188

1569: போலந்­தையும் லித்­து­வே­னி­யா­வையும் இணைத்து போலந்து லித்­து­வே­னிய பொது­ந­ல­வாயம் என புதிய நாட்டை உரு­வாக்­கு­வ­தற்­கான ஒப்­பந்­தத்தில் இரு நாடு­களின் ஆட்­சி­யா­ளர்­களும் கையெ­ழுத்­திட்­டனர்.

1776: பிரித்­தா­னிய ராஜ்­ஜி­யத்­தி­லி­ருந்து தனி நாடாக பிரி­வ­தாக அமெ­ரிக்கா சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது. அமெ­ரிக்க சுதந்­திரத் தினம் இன்­றாகும்.

1810: நெதர்­லாந்தின் ஆம்ஸ்­டர்டம் நகரை பிரெஞ்சுப் படைகள் கைப்­பற்­றின.

1827: அமெ­ரிக்­காவின் நியூயோர்க் மாநி­லத்தில் அடிமை முறை ஒழிக்­கப்­பட்­டது.

1837: உலகின் முத­லா­வது நீண்­ட­தூர ரயில் சேவை பிரிட்­டனின் லிவர்பூல், பேர்­மிங்ஹாம் நக­ரங்­க­ளுக்­கி­டையில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1879: தென் ஆபி­ரிக்­காவில் ஸுலுலாண்ட் எனும் ஸுலு இனத்­த­வர்­களின் ராஜ்­ஜி­யத்தின் தலை­நகர் உலுன்­டியை பிரித்­தா­னிய படைகள் கைப்­பற்றி எரித்­தன. மன்னர் செட்ஸ்­வாயோ நாட்­டை­விட்டு தப்­பி­யோ­டினார்.

1886: அமெ­ரிக்க சுதந்­திரச் சிலையை அமெ­ரிக்­கா­வுக்கு பிரான்ஸ் அன்­ப­ளிப்புச் செய்­தது.

1910: அமெ­ரிக்­காவில் நடை­பெற்ற குத்­துச்­சண்டை போட்­டி­யொன்றில் வெள்ளையின வீர­ரான ஜிம் ஜெப்­ரியை கறுப்­பின வீரான ஜக் ஜோன்ஸன் தோற்­க­டித்­ததால் பாரிய இன வன்­மு­றைகள் மூண்­டன.

1941: யுக்­ரைனில் கைது செய்­யப்­பட்ட போலந்து விஞ்­ஞா­னி­க­ளையும் எழுத்­தா­ளர்­க­ளையும் ஜேர்மன் படைகள் படு­கொலை செய்­தன.

1943: உலகின் மிகப்­பெ­ரிய இரா­ணுவத் தாங்கிச் சமர் ரஷ்­யாவின் புரோ­க­ரோவ்கா கிரா­மத்தில் ஆரம்­ப­மா­கி­யது.

1946: 381 வரு­டங்­க­ளாக பல்­வேறு கால­னித்­துவ நாடு­களின் ஆட்­சிக்­கு­பட்­டி­ருந்த பிலிப்பைன்ஸ், அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து முழு­மை­யான சுதந்­திரம் பெற்­றது.

1947: இந்­திய சுதந்­தி­ரத்­துக்­கான சட்­ட­மூலம் பிரித்­தா­னிய நாடா­ளு­மன்ற பொதுச்­ச­பையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

1966: அமெ­ரிக்க ஜனா­தி­பதி லிண்டன் பி. ஜோன்ஸன் தகவல் அறியும் சுதந்­தி­ரத்­துக்­கான சட்­ட­மூ­லத்தில் கையெ­ழுத்­திட்டார்.

1976: பலஸ்­தீன கிளர்ச்­சி­யா­ளர்­களால் கடத்­தப்­பட்ட விமா­னத்­தி­லி­ருந்த பய­ணி­களில் நால்­வரைத் தவிர ஏனைய அனை­வ­ரையும், உகண்­டாவின் என்­டபே விமான நிலை­யத்தில் நடத்­திய அதி­ரடி முற்­று­கையின் மூலம் இஸ்­ரே­லிய படை­யினர் மீட்­டனர்.

1982: ஈரா­னிய ராஜ­தந்­தி­ரிகள் நால்வர் லெப­னானில் கடத்­தப்­பட்­டனர்.

1998: செவ்வாய் கிர­கத்தை ஆராய்­வ­தற்­கான விண்­க­ல­மொன்றை ஜப்பான் விண்ணில் செலுத்­தி­யது.

இதன்­மூலம் ரஷ்யா, அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்­த­தாக விண்­வெளி ஆராய்ச்­சியில் ஈடு­படும் நாடா­கி­யது ஜப்பான்.

2016: வியாழன் கிரகத்தை ஆராய்வதற்காக நாசாவினால் 2011 ஓகஸ்ட் மாதம் அனுப்பப்பட்ட ஜூனோ விண்கலம் வியாழன் கிரகத்தை சென்றடைந்தது.

2017: இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப். ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!