என்னைக் கைவிடு (சிறுகதை- நிர்மலா ராகவன்)

0 147

-நிர்மலா ராகவன்-

நல்லா யோசிச்சுப் பாத்­தியா, சியா­மளா? தந்­தையின் குரலில் கவலை மிகுந்­தி­ருந்­தது. மூன்று வரு­டங்­களோ…. இல்ல… ஐந்து வரு­டங்­களோ சேர்ந்து வாழ்­வ­தற்கா கல்­யாணம்? ஆயி­ரங்­கா­லத்துப் பயிர் என்­பார்­களே!

பெற்ற ஒரே பெண்­ணுக்குத் தன் முயற்­சியால் ஒரு கண­வனைத் தேடித்­தர முடி­ய­வில்­லையே என்ற அவ­ரு­டைய நீண்­ட­கால வேதனை இன்னும் மிகுந்­தது. “சதீஷ் காண்ட்­ராக்­டிலே வந்­தவன்! அது முடிஞ்­சதும் வந்த ஊருக்கே திரும்பிப் போயி­ட­ணு­மேம்மா!”

கட்­டட வேலை செய்து கொண்­டி­ருந்­த­போது ஒரு விபத்தில் முதுகில் பலத்த அடி­பட சில ஆயிரம் நஷ்­ட ­ஈடு பெற்று, வீட்­டி­லேயே நிரந்­த­ர­மாக இருக்­க­வேண்­டிய நிலை தனக்கு ஏன் வந்­தது என்று மீண்டும் மீண்டும் குமை­வதைத் தவிர உருப்­ப­டி­யாக என்ன செய்ய முடிந்­தது தன்னால்?

எட்டு வகுப்­புடன் படிப்பை நிறுத்­திக்­கொண்ட சியா­மளா தொழிற்­சா­லையில் வேலை செய்­வ­தால்தான் குடும்­பமே ஓடு­கி­றது. இந்த நிலையில் பேச தனக்கு என்ன அரு­கதை? “சதீஷ் தான், “நாம்ப ரெண்டு பேரும் கல்­யாணம் பண்­ணிக்­கிட்டா என்ன?’ ன்னு கேட்­டா­ருப்பா” அவ­ரு­டைய அனு­ம­தியை வேண்டி நின்ற மகளைப் பார்த்து மெல்லச் சிரித்தார் சுப்­பையா.

“ஒனக்குச் சரின்னு பட்டா, சரிதான்!” சதீஷ் அவர்கள் வீட்­டுக்கு வந்­த­போதே இப்­படி ஓர் எண்ணம் அவ­னுக்குள் இருக்கும் என்று அவர் பயந்­தி­ருந்­தது நிஜ­மாகப் போயிற்றே!

பங்­களா தேஷி­க­ளுக்கே உரிய கவர்ச்­சி­யான கண்­களும் நீண்ட மூக்கும் எவ­ரையும் கவர்ந்­து­விடும். அத்­துடன் அவ­னுயை கடு­மை­யான உழைப்பும் சேமிக்கும் திறனும்! இதை­விட அரு­மை­யான துணை சியா­ம­ளா­வுக்குக் கிடைக்க முடி­யாது என்ப தென்­னவோ உண்மை என்று ஒரு சிறு கசப்­புடன் ஒத்­துக்­கொண்டார் சுப்­பையா.

ஆனால், இரு­வ­ருக்கும் இடையே ஒரு பெரிய வித்­தி­யாசம் இருந்­ததே! இரு­பத்­தெட்டு வயது இளைஞன் சதீஷ். சியா­ம­ளாவோ இரு­பத்­தெட்டு வய­தா­கியும் பல வரன்கள் பெண் பார்க்க வந்­து­விட்டு பெண் கறுப்பு என்று தட்டிக் கழிக்க பார்த்து பின் சற்று இறங்கி வந்து எவ்­வ­ளவு பவண் நகை போடு­வீங்க? என்று பெரி­ய­ம­னது பண்ணி பேரம் பேசி­விட்டு ‘வியா­பாரம்” படி­யா­ததால் ஒதுங்கிப் போனதன் பல­னாக உள்­ளுக்­குள்­ளேயே மறு­கிக்­கொண்­டி­ருப்­பவள்.

பிறர் அவளை நிரா­க­ரித்­து­விட்­டுப்­போகும் ஒவ்­வொரு முறையும் தன் ஏமாற்­றத்தை மறைத்­துக்­கொண்டு ‘‘வய­சான காலத்­திலே ஒங்­க­ளுக்கு துணை­யாதான் இருந்­துட்டுப் போறே­னேப்பா! என்று சமா­தா­னப்­ப­டுத்­துவாள் சியா­மளா. இவ்­வ­ளவு பேசிட்டு கட்டிக் கிட்­டதும் குடிப்பான் அடிப்பான் நான் சம்­பா­திக்­கி­ற­தையும் பிடுங்­கிப்பான்.

அதான் அன்றாடம் பாக்­க­றேனே அந்தக் கண்­ரா­வியை! மூஞ்­சி­யெல்லாம் ரத்தக் காயமா வர்­றா­ளுங்க ஒவ்­வொ­ருத்­தியும்! நான் சுதந்­தி­ரமா இருந்­துட்டுப் போறேனே! வெளியில் வீறாப்­பாகப் பேசி­னாலும் பழைய தோழி­களை அவர்கள் பிள்ளை குட்­டி­க­ளுடன் பார்க்­கும்­போது அவள் மனம் பொரு­மத்தான் செய்­தது.

இப்­போது அவ­ளையும் ஒருவன் மணக்க விரும்பி வேண்­டு­கிறான்! பெரு­மை­யாக உணர்ந்தாள்.“அப்பா! கல்­யா­ணத்­துக்கு அப்­புறம் அவரும் நம்ப கூட இங்­கதான் வந்து தங்கப் போறாரு. ஒங்­க­ளை­விட்டு எங்­கேயும் வர­மாட்­டேன்னு கண்­டி­சனா சொல்­லிட்­டேன்ல!”

தன் நன்­றியை ஒரு புன்­மு­றுவல் மூலம் வெளிப்­ப­டுத்­தினார் சுப்­பையா. “சாயந்­திரம் ஸ்டூடி­யோ­வுக்குப் போய், நான் ஒரு போட்டோ எடுக்­கணும். அவ­ரோட அம்­மா­வுக்கு அனுப்ப! ‘‘மற்­ற­வங்­களை கேவ­ல­மாக  பேசு­ற­தா­லேயே அவங்க என்­னமோ ஒரு­படி ஒசந்து இருக்­கி­றதா நிலைக்­கிற சின்­னப்­புத்தி சதீ­ஷுக்குக் கிடை­யாது’’!

சுப்­பை­யாவின் சந்­தேகம் முழு­வ­தாக மாற­வில்லை என்­பதை அவ­ரு­டைய கவலை தோய்ந்த முகமே காட்­டிக்­கொ­டுக்க, சியா­மளா மேலும் சொன்னாள். “நான் ஏன் இன்னும் கல்­யாணம் ஆகாம இருக்­கேன்னு எல்­லாத்­தையும் அவர்­கிட்டே சொல்­லிட்டேன். அவர் செல்­றாரு, ‘ஒன்­னோட நிஜ அழகு புரி­யாம ஒதுக்­கிட்டுப் போன­வங்க அடி­முட்­டா­ளுங்க! அப்­ப­டின்னு சொல்­றா­ருப்பா சதீஷ்!”

வார்த்­தைக்கு வார்த்தை அவன் பெயரை உச்­ச­ரிப்­ப­தி­லேயே ஆனந்தம் காணும் மகளின் உற்­சா­கத்­திற்கு முட்­டுக்­கட்­டை­யாக இருக்க விரும்­ப­வில்லை சுப்­பையா. அவன் நிரந்­த­ர­மாக இந்த மலே­சிய மண்ணில் கால் பதித்து இருக்க முடி­யுமோ?’ என்று ஆரம்­பத்தில் எழுந்த உறுத்தல் கூட, ‘இந்த ஒல­கத்­திலே எதுதான் நிரந்­தரம்! என்ற வேதாந்­தத்தில் மறைந்­தது.

மாலையும் கழுத்­து­மாக சதீஷின் பக்­கத்தில் அமர்ந்­தி­ருந்த சியா­மளா மகிழ்ச்­சியின் எல்­லை­யி­லி­ருந்தாள். ‘இவ­னுங்­களை எல்லாம் நம்­பவே கூடாது. கையி­லேயே பிள்­ளையைக் குடுத்­துட்டு ஓடி­டுவான்” என்று தோழிகள் எச்­ச­ரிக்கை செய்­ததைப் பெரி­தாக எடுத்துக் கொள்­ளா­தது எத்­தனை நல்­ல­தாகப் போயிற்று!

அவன் மனத்துள் இருக்கும் அன்பு பிறர் கண்­ணுக்குத் தெரி­ய­வில்லை. ஏழை, அயல் நாட்­டுக்­காரன் அதிலும் அழகன் என்­பதில் விளைந்த அலட்­சியம், பொறாமை! தன்னைப் பற்றி தரக்­கு­றை­வாகப் பேசி­ய­வர்­களைப் பொய்­யர்­க­ளாக்­கி­விட்டு இப்­போது தாலி கட்டி மனை­வி­யாக ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கிறான்!

மாதங்கள் நிமி­டங்­க­ளாகிப் பறக்க தன்­னை­விட பாக்­கி­ய­சாலி எவ­ரு­மில்லை என்று எண்ணி எண்ணி சியா­மளா இறு­மாந்து போனாள். மேலே போனால் கீழே விழவும் கூடும் என்று அவள் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.

‘‘வேலைக்கு வந்த மலே­சிய நாட்டில் இந்­த­நாட்டுப் பெண்­களைத் திரு­மணம் புரிந்து கொள்­ளக்­கூ­டாது என்ற விதியை மீறிய அந்­நிய நாட்டுத் தொழி­லா­ளிகள் நாடு கடத்­தப்­ப­டு­வார்கள்!’’ புதிய சட்­ட­மொன்று அமு­லுக்கு வர சதீஷின் குறும்புப் பேச்சும் பெரிய கண்­களின் மின்னல் வெட்டும் போன இடம் தெரி­ய­வில்லை.

சியா­ம­ளா­வுக்கோ இனி என்ன என்ற கேள்வி மட்டும் விஸ்­வ­ரூபம் எடுத்து பயங்­க­ர­மாகத் தெரிந்­தது. இப்­படி அகா­ல­மாக முடி­வ­தற்கா அவ்­வ­ளவு இன்பம் நிறைந்த மண­வாழ்வு கிட்­டி­யது? அடுத்த பத்து நாட்கள் நகர முடி­யாது நகர்ந்­தன. வீட்டில் அசா­தா­ரண மௌனம் நில­வி­யது.

அடுத்த அறிக்கை ‘உள்­நாட்டுப் பெண்­களை மணந்­த­வர்கள் அவ்­வப்­போது குறு­கிய வருகை மேற்­கொண்டு தம் மனைவி மக்­களைப் பார்த்துப் போகலாம்! என்று சிறிது கரு­ணை­யுடன் வெளி­வந்­தது. “சதீஷ்! நீங்க திரும்பிப் போக விட­மாட்டேன்!” கண­வனைக் கட்­டிக்­கொண்டு கத­றினாள் சியா­மளா.

தன்னை மணந்த செயல் ஒரு குற்­றமா ? அதற்குத் தண்­டனை போல் மீண்டும் பிறந்த நாட்டில் ஏழ்­மை­யி­லேயே உழல, திருப்பி அனுப்பி வைக்­கப்­ப­டுவார் என்ற நினைவே அவளை வாட்­டி­யது.தன் உடலைச் சுற்­றி­யி­ருந்த அவ­ளு­டைய கரங்­களை மெல்ல விலக்­கினான் சதீஷ்.

“நான் திரும்பிப் போனா, அங்கே என்ன இருக்கு? எவ்­வ­ளவு படிச்­சி­ருந்­தாத்தான் என்ன! பசி, பட்­டி­னிதான்! அங்கே நல்ல வேலை கிடைச்­சி­ருந்தா, இங்கே எதுக்கு வந்து தொலைச்­சி­ருக்கப் போறேன்!” சியா­மளா அவன் முகத்­தையே பார்த்தாள். என்ன சொல்ல வரு­கிறான்?

“நல்ல வேளை, நம்ப கல்­யாணம் கோயில்ல நடந்­திச்சு. இன்னும் பதிவு செய்­யலே!” அவள் திடுக்­கிட்டாள். கல்­யா­ணமே நடக்­க­வில்லை என்று சாதிக்கப் போகி­றானா? அதற்­கா­கத்தான் அவள் எவ்­வ­ளவோ வற்­பு­றுத்­தியும் அவ­ளுடன் சேர்ந்து புகைப்­படம் எடுத்துக் கொள்­ள­ வில்­லையோ?

“நாங்க ஏழைதான்’ அதுக்­காக வந்த இடத்­திலே சன்­னி­யாசி மாதிரி இருங்க! அப்­ப­டின்னா முடி­யுமா ஒன்னைப் பிடிச்­சுத்தான் கல்­யாணம் செய்­துக்­கிட்டேன் சியா­மளா. ஆனா என் சுய­ந­லத்­துக்­காக மத்­த­வங்க கஷ்­டப்­ப­ட­ணுமா?” “என்ன சொல்­றீங்க?” ஈனஸ்­வ­ரத்தில் கேட்டாள் சியா­மளா.

“நான் சம்­பா­திச்சு அனுப்­புற பணத்­தா­லேதான் எங்­கப்பா, அம்மா, தங்­கச்­சிங்க எல்­லாரும் நல்லா சாப்­பி­ட­றாங்க….. தம்­பி­களும் பள்­ளிக்­கூ­டத்­துக்குப் போக முடி­யுது. நான் திரும்பிப் போறதா இல்லே!” சியா­ம­ளா­வுக்குச் சற்று தெம்பு பிறந்­தது. வந்த வேகத்­தி­லேயே அது தொலைந்­தது. அடுத்து அவன் கூறி­யதைக் கேட்டு…..

“நாம்ப ஒண்ணா இருந்தா. ஏதா­வது தக­றாறு வரும். அத­னால வேற வேலை தேடிக் கிட்டேன் வேற ஊரிலே”
அவன் தன்னை விட்டுப் போகப் போகிறான்! அந்த அதிர்ச்­சியைத் தாங்க முடி­யாது அவ­ளு­டைய வாய் பிளந்­தது. மூச்சு கன­வே­க­மாக இரைப்­ப­துபோல் வெளி­வந்­தது.

முகத்தை வேறு பக்கம் திருப்­பிக்­கொண்டான். “நான் என்ன செய்­ய­றது! எனக்கு வேற வழி தெரி­யலே!” மன்­னிப்பு வேண்டும் தொனி. சதீஷ் சற்றும் எதிர்­பா­ராத ஒரு காரி­யத்தைச் செய்தாள் சியா­மளா. அவனைக் கையெ­டுத்துக் கும்­பிட்டாள்.“என்­னையும் ஒரு பொண்ணா மதிச்சு ஏத்­துக்­கிட்­டீங்­களே.

அதுவே போதும் நன்­றின்னு வாய் வார்த்­தையா சொன்னா நல்­லா­யி­ருக்­காது. அப்பா மொதல்­லேயே சந்­தே­கப்­பட்­டாரு. இந்த ஒறவு நிலைக்க முடியுமான்னு… ஆனா கல்யாணம். கணவன் குடும்பம் எல்லாம் வேணும்கிற வெறிதான் அப்போ இருந்திச்சு எனக்கு…. இப்போ! மேலே பேசத் தெரியாது விக்கினாள்.

குற்ற உணர்வும் வேதனையும் உலுக்க “சியாமா” என்று அவளை நெருங்கினான் சதீஷ். சரேலென விலகிக்கொண்டாள். “சொல்ல இன்னும் என்ன இருக்கு! என் வேதனையை அதிகப்படுத்தாதீங்க! ப்ளீஸ், இப்பவே இந்த வீட்டை விட்டுப் போயிடுங்க! இனிமே வராதீங்க!” பெரிதாக அழ ஆரம்பித்தாள் சியாமளா.

அவள் கெஞ்சுவாள்… இல்லை ஆத்திரப்படுவாள்…. என்றெல்லாம் எதிர்பார்த்து எல்லாவற்றிற்கும் விடை தேடி வைத்திருந்தவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தலை குனிந்த நிலையில் தனது சொற்ப உடைமைகளைத் திரட்ட ஆரம்பித்தான்.

நன்றி: freetamilebooks.com

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!