வரலாற்றில் இன்று: ஜூலை 5 : 1977- பாகிஸ்­தானில் பிர­தமர் சுல்­பிகார் அலி பூட்­டோவின் அர­சாங்கம், ஜெனரல் ஸியா உல் ஹக் தலை­மை­யி­லான இரா­ணு­வத்­தினால் கவிழ்க்­கப்­பட்­டது

0 220

1295: இங்­கி­லாந்­துக்கு எதி­ராக ஸ்கொட்­லாந்தும் பிரான்ஸும் கூட்­டணி அமைத்­தன.

1594: கண்டி ராஜ்­ஜி­யத்தின் மீது, பெடலோ லோபஸ் டி சொய்ஸாவின் தலை­மையில் போர்த்­துக்-­கேய படைகள் படை­யெ­டுப்பை ஆரம்­பித்­தன. இப்­ப­டை­யெ­டுப்பு தோல்­வி­ய­டைந்­தது.

1811: ஸ்பெய்­னி­ட­மி­ருந்து பிரி­வ­தாக வெனி­சூலா பிர­க­டனம் செய்­தது.

1865: இரட்­ச­ணிய சேனை இங்­கி­லாந்தின் லண்டன் நகரில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1884: கெம­ரூனை ஜேர்­மனி கைப்­பற்­றி­யது.

1945: ஜப்­பா­னி­ட­மி­ருந்து பிலிப்பைன்ஸ் விடு­விக்­கப்­பட்­ட­தாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

1950: கொரிய யுத்­தத்தில் அமெ­ரிக்க மற்றும் வட­கொ­ரிய படை­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது சமர் நடை­பெற்­றது.

1954: பி.பி.சி. தொலைக்­காட்­சியில் முத­லா­வது செய்தி அறிக்கை ஒளி­ப­ரப்­பா­கி­யது.

1970: கன­டாவின் டொரண்டோ நகரில் இடம்­பெற்ற விமான விபத்தில் 109 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1971: அமெ­ரிக்­காவில் வாக்­கு­ரி­மைக்­கான வயது 21 இலி­ருந்து 18 ஆக குறைக்­கப்­பட்­டது.

1975: அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ், விம்­பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்­றையர் போட்-­டியில் சம்­பி­ய­னான முத­லா­வது கறுப்­பின வீர­ரானார்.

1977: பாகிஸ்­தானில் பிர­தமர் சுல்­பிகார் அலி பூட்­டோவின் அர­சாங்­கம், ஜெனரல் ஸியா உல் ஹக் தலை­மை­யி­லான இரா­ணு­வத்­தினால் கவிழ்க்­கப்­பட்­டது.

1987: தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்­பினால் முத­லா­வது தற்­கொலை குண்டுத் தாக்­குதல் யாழ். நெல்­லி­ய­டியில் நடத்­தப்­பட்­டது.

1996: டோலி எனும் செம்­மறி ஆடு முதல் தட­வை­யாக குளோனிங் முறையில் உரு­வாக்­கப்­பட்ட முலை­யூட்­டி­யா­கி­யது.

1999: தலி­பான்­களின் ஆட்­சி­யி­லி­ருந்து ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளின்டன் பொரு­ளா­தார, வர்த்­தக தடை­களை விதித்தார்.

2004: இந்­தோ­னே­ஷி­யாவின் முத­லா­வது ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­பட்­டது.

2009: சீனாவின் ஸின்­ஜியாங் உய்குர் பிராந்­தி­யத்தில் பாரிய வன்­மு­றைகள் மூண்­டன.

2009: விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டியில் சம்­பி­ய­னா­கி­யதன் மூலம் 15 கிராண்ட்ஸ்லாம் பட்­டங்­களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் எனும் சாத­னைக்­கு­ரி­ய­வ­ரானார் ரோஜர் பெடரர்.

2012: ஐரோப்­பாவின் மிக உயரமான கட்டிடமான ‘ஷார்ட்’ லண்டனில் திறக்கப்பட்டது. இதன் உயரம் 310 மீற்றர்கள். (1020 அடி).

2016: வியாழன் கிரகத்தை ஆராய்வதற்காக நாசாவினால் அனுப்பப்பட்ட ஜூனோ விண்கலம், அக்கிரகத்தை வலம்வர ஆரம்பித்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!