நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 26

0 117

“கலாபூஷணம்” பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன்.

( சென்றவாரத் தொடர்ச்சி )
நிவேதா ! நீ சத்­தி­யன மெரி பண்­ணி­டு­வி­யோங்­கிற பயத்­துலத் தான் நான் இப்­படி பண்­ணிட்டேன். நான் உன்னை மெரி பண்­ணிக்­கிறேன். கவலைப் படாதே நிவேதா ! என்ற சுரேஷ், அவள் கையைப் பற்­றினான்.

இனி அதி­லி­ருந்து..

ன்னைப் போல ஒரு அயோக்­கி­ய­னையும் துரோ­கி­யையும் மெரி பண்ண எனக்கு என்ன பைத்­தி­ய­மாடா ! போடா ரூம விட்டு வெளியே, நாயே எனக் கத்­தினாள், நிவேதா. ம் சரி ! சரி ! புறப்­படு வந்­த­மா­தி­ரியே நான் உன்னைக் கொண் போய் உன் வீட்­டுல விட்­டு­டுறேன் என்­ற­வாறே சுரேஷ் ஆயத்­த­மானான்.

நான் வர்ர நேரம் எனக்கு பாது­காப்பு தேவையா இருந்­திச்சு இப்போ எனக்கு எதுக்­குடா பாது­காப்பு? நீ ரூம விட்டு போடா வெளிய என மீண்டும் கத்­தினாள், நிவேதா.

சுரேஷ் கல­வ­ர­மின்றி தான் நினைத்­ததை சாதித்த வீர­னாக தலை நிமிர்ந்து, ஒரு சாதனை வீர­னாக வீறாப்­புடன் நின்றான்.
நிவேதா மீண்டும் வெறித்­த­ன­மாக யு கெட் அவுட் புரம் திஸ் ரூம். ஐ நோ ஹௌ டு கோ டு மை ஹவுஸ் ! எனக் கத்­தினாள்.

நிவே­தாவின் அசுரத் தன்­மையைக் கண்ட சுரேஷ் இதற்கு மேல் தான் அங்கு நின்றால், நிவே­தாவின் இரைச்­சலைக் கேட்டு அக்கம் பக்­கத்து அறை­க­ளி­லுள்­ள­வர்கள் வந்தால் தனது அட்­டூ­ழியம் வெளிப்­பட்டு விடும் என நினைத்து இதுவே தான் இந்த அறையை விட்டு வெளியேற அரி­ய­தொரு சந்­தர்ப்பம் என நினைத்து அதனைப் பயன் படுத்திக் கொண்டு தனது ஆடை­க­ளையும் பிரீவ் கேஷையும் எடுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே­றினான்.

சுரேஷ் வீடு. சுகந்தி குழந்­தையை அணைத்துக் கொண்டு மிக அமை­தி­யாகத் தூங்கிக் கொண்­டி­ருக்­கிறாள்.
வராந்­தாவில் நீண்ட நேர­மாக கோலிங் பெல் ஒலிக்­கி­றது. சுகந்தி நித்­திரை கலைந்து கண் விழிக்­கிறாள்.
தொடர்ந்து கோலிங் பெல் ஒலிக்­கி­றது.

சுகந்தி சுவர்க் கடி­கா­ரத்தைப் பார்க்­கிறாள். நேரம் நடு நிசி பன்­னி­ரண்டு பதி­னெட்டு. தூக்கக் கலக்­கத்­துடன் வராந்­தா­வுக்கு வந்து கதவைத் திறந்து விட்டு வந்­தி­ருப்­பது யார் எனத் திரும்பிப் பாரா­ம­லேயே சுகந்தி உள்ளே போகிறாள்.

நிறை குடி வெறியில், மழையில் நனைந்­த­வாறே வீட்­டினுள் நுழையும் சுரேஷ், கதவைத் தாழி­டு­கிறான்.
வெளியே கடும் இடி, காற்று, மின்­ன­லுடன் கூடிய மழை பேய்­கி­றது. கதவத் திறந்­துட்டு வந்­தது யார்ன்னு பார்க்­கா­மயே போறி­யேடி என்றான், சுரேஷ் மது வெறியில் தள்­ளா­டி­ய­வாறே.

கோலிங் பெல் அடிச்ச லட்­ச­ணத்­து­லேயே எனக்குத் தொரியும், வந்­தி­ருக்­கி­றது யார்ன்னு.. என்று சொல்­லி­ய­வாறே சுகந்தி அறை­யினுள் நுழைந்தாள்.

வேறு எவ­னா­வது நுழைஞ்­சான்னா?  அப்­படி எவ­னா­வது நுழைஞ்­சாலும் வீட்­டுக்­குள்ளத் தான் நுழைய முடி­யுமே தவிர, என் மன­சுக்­குள்ள நுழைய முடி­யாது என்றாள் சுகந்தி, உறு­தி­யாக.

ஆமா ! இவ பெரிய பத்­தினி!! புரு­ஷ­னையும் புள்­ளைங்­க­ளையும் தவிக்க விட்­டுட்டு இன்­னொ­ருத்­த­னோட ஓடின பொண்­டாட்டி மாரப் பத்தி நீங்க கேள்வி பட்­ட­தில்­லையா? இல்ல நீங்க தான் அப்­படி வழக்­கு­க­ளப்­பே­சி­ன­தில்­லையா ?

ஆமா ! உன்ன ஒருத்தன் கூட்டிக் கிட்டு ஓட அழ­குல நீ என்ன பெரிய ரதியா ? என்ற சுரேஷின் வார்த்தைகள் சுகந்தியை கடுமையாகத் தைத்தன. சுகந்தியின் மனக் கண் முன் அவளது அழகிய பழைய முகம் தோன்றி மறைந்தது.

                                                                                                                                                               (அடுத்த வாரம் தொடரும்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!