சவூதியில் இம்மாதம் பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி

Nicki Minaj to perform in Saudi Arabia this month

0 1,578

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பிர­பல பாடகி நிக்கி மினாஜ் சவூதி அரே­பி­யாவில் இம்­மாதம் இசை நிகழ்ச்சி நடத்­த­வுள்ளார்.ஜெத்தா நகரில் எதிர்­வரும் 18 ஆம் திகதி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி நடை­பெறும் என சவூதி அரே­பிய இசை நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்கள் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தனர்.

நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சியில் (வைப்பகப் படம் )

 

சவூதி அரே­பி­யாவின் ஜெத்தா நகரில் நடை­பெறும் ஜெத்தா கோடைப் பரு­வ­கால கலா­சார விழாவின் ஒரு பகு­தி­யாக பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி நடை­பெ­ற­வுள்­ளது.

பொழு­து­போக்­குத்­துறை மீதான பல தசாப்­த­கால கட்­டுப்­பா­டு­களை சவூதி அரே­பியா தளர்த்­து­கின்­றமையின் ஒரு அறி­கு­றி­யாக இது கரு­தப்­ப­டு­கி­றது.

கரீ­பியன் பிராந்­திய நாடு­களில் ஒன்­றான ட்ரினிடாட் அன்ட் டுபாக்­கோவில் பிறந்த நிக்கி மினாஜ், தற்­போது அமெ­ரிக்­காவில் வசிக்­கிறார்.

2004 ஆம் ஆண்டு முதல் நிக்கி மினாஜ் இசைத்­து­றையில் ஈடு­பட்டு வரு­கிறார்.

இசைத்­து­றையில் ஏரா­ள­மான விரு­து­களை வென்­றவர் அவர். 36 வய­தான ரெப் இசையின் ராணி எனவும் அவர் வர்­ணிக்­கப்­ப­டு­கிறார்.

நிக்கி மினாஜ் தனது இசை நிகழ்ச்­சி­களில் மிக கவர்ச்­சி­யான ஆடை அலங்­கா­ரங்­களை செய்­து­கொள்­பவர்.

தனது இடுப்பை வளைத்து, சுழற்றி ஆடு­வ­திலும் அவர் பெயர் பெற்­றவர்.

இந்­நி­லையில், சவூதி அரே­பி­யாவில் நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி நடை­பெ­ற­வுள்­ளது எனும் அறி­விப்பு பல­ருக்கு வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த நிகழ்ச்­சியின் ஏற்­பாட்­டா­ள­ரான ரொபர்ட் குயர்க் இது தொடர்­பாக அராப் நியூஸ் பத்­தி­ரி­கைக்கு அளித்த செவ்­வியில், ‘நிக்கி மினாஜ் சமூக ஊட­கங்­களில் மிகத் தீவி­ர­மாக செயற்­ப­டு­பவர்.

அவர் ஜெத்­தாவில் ஹோட்­ட­லிலும், இசை நிகழ்ச்சி மேடை­யிலும் இருந்­து­கொ­ண்டு சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வு­களை வெளி­யிடப் போகிறார்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

சவூதி அரே­பி­யாவின் மூன்றில் இரு பங்கு பேர் 30 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி சவூதி அரே­பி­யாவில் நடை­பெ­ற­வுள்­ளது என்ற அறி­விப்­புக்கு அங்­குள்ள பலர் வர­வேற்புத் தெரி­வித்­துள்­ளார்.

நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சியில் (வைப்பகப் படம் )

 

”எனது கனவு நன­வா­கி­றது’ என ஒருவர் டுவிட்­டரில் தெரி­வித்­துள்­ளார். ஆனால், சிலர் இந்­நி­கழ்ச்­சிக்கு எதிர்ப்­பையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சியில் (வைப்பகப் படம் )

 

பெண்­ணொ­ருவர் இது தொடர்­பாக டுவிட்டரில் வெளி­யிட்­டுள்ள வீடி­யோ­வொன்றில், ‘அவர் தனது பின்புறத்தை குலுக்கி ஆடப்போகிறார். அவரின் பாடல்கள் அனைத்தும் செக்ஸ் தொடர்பானவை. பின்னர், அபாயா அணிந்துகொள்ளுமாறு என்னிடம் எல்லோரும் கூறுவார்கள்’  எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!