வரலாற்றில் இன்று: ஜூலை 8: 1988-இந்திய ஏரியில் ரயில் வீழ்ந்ததால் 105 பேர் பலி

0 166

1497: ஐரோப்­பா­வி­லி­ருந்து இந்­தி­யா­வுக்­கான முதல் நேரடி கடல்­வழி பய­ணத்தை போர்த்­துக்­கேய மாலுமி வாஸ் கொட காமா ஆரம்­பித்தார்.

1730: சிலியில் ஏற்­பட்ட 8.7 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் மற்றும் சுனா­மி­யினால் சிலியின் கரை­யோ­ரத்தில் 1000 கிலோ­மீற்­றர்­க­ளுக்கும் அதி­க­மான கரை­யோரப் பகுதி அழிந்­தது.

1859: சுவீ­டனில் 15 ஆம் சார்ள்ஸ் மன்னர் முடி­சூ­டினார்.

1889: வேல் ஸ்ட்ரீட் ஜேர்னல் முதல் பதிப்பு வெளி­வர ஆரம்­பித்­தது.

1892: கன­டாவின் சென் ஜோன்ஸ் நகரின் பெரும் பகுதி தீயினால் அழிந்­தது.

1933: முத­லா­வது றக்பி யூனியன் டெஸ்ட் போட்டி அவுஸ்­தி­ரே­லிய, தென் ஆபி­ரிக்க அணி­க­ளுக்­கி­டையில் கேப் டவுன் நகரில் நடை­பெற்­றது.

1937: துருக்கி, ஈரான், ஈராக், ஆப்­கா­னிஸ்தான் ஆகி­யன சாதாபாத் உடன்­ப­டிக்­கையில் கையெ­ழுத்­திட்­டன.

1947: மெக்­ஸி­கோவில் பறக்கும் தட்­டொன்று நொறுங்கி விழுந்­த­தாக செய்தி வெளி­யா­னது.

1948: அமெ­ரிக்க விமானப் படையில் முதல்­த­ட­வை­யாக பெண்கள் சேர்க்­கப்­பட்­டனர்.

1966: புரூண்­டியில் 4 ஆம் எம்­வம்­புட்­ஸாவை அவரின் மகன் சார்ள்ஸ் என்­டிஸி ஆட்­சி­யி­லி­ருந்து அகற்றி தானே மன்­ன­ரானார்.

1982: ஈராக் ஜனா­தி­பதி சதாம் ஹுஸைனை டுஜெய்ல் நகரில் படு­கொ­லை­செய்ய முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.

1988: இந்­தி­யாவின் பெங்களூ­ரி­லி­ருந்து கன்­னி­யா­கு­மரி நோக்கி சென்ற பய­ணிகள் ரயில் பால­மொன்­றி­லி­ருந்து ஏரியில் விழுந்­ததால் 105 பய­ணிகள் பலி­யா­கினர்.

1985: – இலங்கை அர­சுக்கும் தமிழர் போரா­ட்ட அமைப்­பு­க­ளுக்கும் இடையில் திம்பு பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­ப­மா­யின.

1990: – உலகக் கிண்ண கால்­பந்­தாட்டத் தொடரின் இறு­திப்­போட்­டியில் ஆர்­ஜென்­டீ­னாவை வென்று ஜெர்­மனி உல­கக்­கிண்­ணத்தை கைப்­பற்­றி­யது.

1994: வட­கொ­ரிய ஜனா­தி­பதி கிம் இல் சுங் கால­மா­ன­தை­ய­டுத்து அவரின் மகன், கிம் ஜோங் இல் ஆட்­சிக்கு வந்தார்.

2003: – சூடான் விமானம் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 117 பேர் கொல்­லப்­பட்­டனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்­பி­யது.

2011: நாசாவின் அட்­லாண்டிஸ் விண்­கலம் தனது கடைசிப் பய­ண த்தை ஆரம்பித்தது.

2014: இஸ்ரேலிய இளைஞர்கள் மூவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தின் மீது பாரிய தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்தது.

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!