வர்த்தகரின் வீட்டில் 2 வருடங்களாக விசுவாசமாக பணியாற்றியவர் 12,000,000 ரூபா பெறுமதியான நகைகள், பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது

0 3,282

(ஹனபி எம்.தாஸீம்)

களனி பட்­டி­வில பிர­தே­சத்தில் பிர­பல வர்த்­தகர் ஒரு­வரின் வீடொன்­றி­லி­ருந்து ஒரு கோடி இரு­பது இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகைகள், ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் இரண்டு கைய­டக்கத் தொலை­பே­சி­களை திருடி தப்­பி­யோ­டிய அதே வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்த நபர் ஒரு­வரை சப்­பு­கஸ்­கந்த பொலிஸார் சனிக்­கி­ழமை அதி­காலை வெலி­மட வீரா­வத்த பிர­தே­சத்தில் சந்­தேக நபரின் உற­வினர் வீட்டில் தலை­மறை­வா­­கியிருந்த நிலையில் கைது செய்­துள்­ளனர்.

அத்­துடன் குறித்த நபரால் திரு­டப்­பட்ட தங்க நகை­களில் 75,00,000 ரூபா பெறு­ம­தி­யான நகைகள் உற­வினர் வீட்டின் பின் பகு­தியில் குழி­யொன்றில் புதைத்து வைத்­தி­ருந்த நிலையில் கைப்­பற்­ற­பட்­டுள்­ளன.

மேலும் இந்­ந­பரால் திரு­டப்­பட்ட ஒரு இலட்­சத்து முப்­ப­தா­யிரம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகைகள் ராஜ­கி­ரிய பிர­தே­சத்தில் தங்க நகைகள் அடகு வைக்கும் நிலையம் ஒன்றில் அடகு வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

சந்­தேக நபரால் திரு­டப்­பட்ட ஏனைய நகைகள் அவ­ரது நண்பர் ஒரு­வ­ரிடம் சந்­தேக நபர் வழங்­கி­யுள்ள நிலையில் அவர் தற்­போது தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாகப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சப்­பு­கஸ்­கந்த பொலிஸ் புல­னாய்வுத் துறையைச் சேர்ந்த தஹ­நா­யக்­க­வுக்கு (71335) கிடைத்த தக­வ­ல­ய­டுத்து சப்­பு­கஸ்­கந்த பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் அத்­தி­யட்­சகர் துசித ஜய­கொ­டியின் தலை­மை­யி­லான குழு­வி­னரே சந்­தேக நபரைக் கைது செய்து ஒரு தொகுதி நகை­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

சந்­தேக நபர் இரண்டு வருட கால­மாக தாம் வேலை செய்த வீட்டு குடும்­பத்­தி­ன­ருடன் மிகவும் விசு­வா­ச­மாக இருந்து இந்தத் திருட்டை மேற்­கொண்­டுள்­ளமை பொலிஸ் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்துள்ளது.

அதே­வேளை குறித்த சந்­தேக நபரால் திரு­டப்­பட்ட பணம் மற்றும் நகைகள் அடகு வைக்­கப்­பட்டு பெறப்­பட்ட பணம் போதை­வஸ்து பாவ­னைக்கும் அழ­கான பெண்­களின் சுகத்தை அனு­ப­விக்­கவும் செல­வி­டப்­பட்­டுள்­ள­மையும் விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

கடந்த 17 ஆம் திகதி பிற்­பகல் வீட்­டி­லுள்­ள­வர்கள் வெளியே சென்­றி­ருந்த நிலை­யி­லேயே சந்­தேக நபர் தங்க நகை­க­ளையும் பணத்­தையும் திருடி தப்பிச் சென்று தலை­ம­றை­வா­கி­யி­ருந்­துள்ளார்.

புத்­தளம் நுரைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இந்நபர் இந்த திருட்டை களனி பொலிஸ் பிரிவில் மேற்கொண்டுள்ளதால் திருடப்பட்ட பொருட்களோடு மேலதிக விசாரணைகளுக்காக களனி பொலிஸ் நிலையத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!