பெண்களின் கழிவறைகளில் அடைப்புகளை ஏற்படுத்தியஇளைஞருக்கு 150 நாட்கள் சிறை

0 234

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெண்­களின் கழி­வ­றை­களில் தொடர்ச்­சி­யாக அடைப்­பு­களை ஏற்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ளார்.

விஸ்­கொன்சின் மாநி­லத்தைச் சேர்­ந்த பற்றிக் டி பீமன் என்னும் 26 வய­தான இளை­ஞ­ருக்கே இத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இவர் விஸ்­கொன்சின் மாநி­லத்தின் ஷெபோய்கன் நகரில் தான் பணி­யாற்றும் இடத்­திலும், பூங்­கா­வொன்­றிலும் பெண்­களின் கழி­வ­றை­களில் வேண்­டு­மென்றே அடைப்­பு­களை ஏற்­ப­டுத்தி வந்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டது.

இது தொடர்­பான வழக்கை விசா­ரித்த நீதி­மன்றம் பற்றிக் டி பீம­னுக்கு 150 நாள் சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது.

அத்­துடன், சேத­ம­டைந்த கழி­வ­றை­க­ளுக்­காக 5500 டொலர்­களை இழப்­பீ­டாக செலுத்த வேண்டும் எனவும், 100 மணித்­தி­யா­லங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் பற்றிக் டி பீமனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!