உலகக் கிண்ண அரை இறுதிப் போட்­டிகள்: இந்­தியா எதிர் நியூ­ஸி­லாந்து, ஆஸி எதிர் இங்­கி­லாந்து

0 110

(இங்­கி­லாந்­தி­லி­ருந்து நெவில் அன்­தனி)

இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸில் நடை­பெற்­று­வரும் 12ஆவது உலகக் கிண்ண அத்­தி­யா­யத்தில் லீக் சுற்று (45 போட்­டிகள்) பூர்த்தி அடைந்­ததை அடுத்து ஓர் அரை இறுதிப் போட்­டியில் முன்னாள் சம்­பியன் இந்­தி­யாவை நியூ­ஸி­லாந்து எதிர்த்­தா­ட­வுள்­ளது. மற்­றைய அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்­பியன் அவுஸ்­தி­ரே­லி­யாவை வர­வேற்பு நாடான இங்­கி­லாந்து சந்­திக்­க­வுள்­ளது.

இந்­தி­யா­வுக்கும், நியூ­ஸி­லாந்­துக்கும் இடை­யி­லான போட்டி மென்­செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்ட் விளை­யாட்­ட­ரங்கில் நாளை 9ஆம் திக­தியும், சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் மிகப் பழை­மை­வாய்ந்த வைரி­க­ளான அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும், இங்­கி­லாந்­துக்கும் இடை­யி­லான போட்டி பேர்­மிங்­ஹாமில் எதிர்­வரும் 11ஆம் திக­தியும் நடை­பெ­ற­வுள்­ளன.

இப் போட்­டி­களில் வெற்­றி­பெறும் அணிகள் உலக சம்­பி­யனைத் தீர்­மா­னிக்கும் இறுதிப் போட்­டியில் லோர்ட்ஸ் அரங்கில் எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை ஒன்­றை­யொன்று எதிர்த்­தாடும். இந்த நான்கு அணி­களில் அவுஸ்­தி­ரே­லி­யாவும் இந்­தி­யாவும் உலக சம்­பியன் பட்­டங்­களை வென்ற அணி­க­ளாகும்.

நடப்பு உலக சம்­பி­யனும், ஐந்து தட­வைகள் உலக சம்­பி­ய­னு­மான அவுஸ்­தி­ரே­லி­யா­வுடன் நியூ­ஸி­லாந்தும் எட்­டா­வது தட­வை­யாக உலகக் கிண்ண அரை இறு­தியில் விளை­யா­ட­வுள்­ளன. இந்த இரண்டு அணி­களும் கடை­சி­யாக மெல்­பர்னில் நடை­பெற்ற 2015 உலகக் கிண்ண இறுதிப் போட்­டியில் விளை­யா­டி­ய­போது அவுஸ்­தி­ரே­லியா 7 விக்­கெட்­களால் வெற்­றி­பெற்று ஐந்­தா­வது தட­வை­யாக உலகக் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தி­ருந்­தது.

இரண்டு தட­வைகள் உலக சம்­பி­ய­னான இந்தியா மூன்­றா­வது நேரடித் தட­வை­யா­கவும் ஒட்­டு­மொத்­தத்தில் ஏழா­வது தட­வை­யா­கவும் அரை இறு­தியில் விளை­யாட தகு­தி­பெற்­றுள்­ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியை ஐந்­தா­வது தட­வை­யாக நடத்தும் இங்­கி­லாந்து ஆறா­வது தட­வை­யாக அரை இறு­தியில் விளை­யா­ட­வுள்­ளது. 1992க்குப் பின்னர் இங்­கி­லாந்து விளை­யா­ட­வுள்ள முத­லா­வது அரை இறுதி இது­வாகும்.

லீக் சுற்று முடிவில் 15 புள்­ளி­க­ளுடன் முத­லி­டத்தில் உள்ள இந்­தியா, 14 புள்­ளி­க­ளுடன் இரண்டாம் இடத்­தி­லுள்ள அவுஸ்­தி­ரே­லியா, 12 புள்­ளி­க­ளுடன் மூன்றாம் இடத்­தி­லுள்ள இங்­கி­லாந்து, 11 புள்­ளி­க­ளுடன் நான்காம் இடத்­தி­லுள்ள நியூ­ஸி­லாந்து ஆகிய நான்கு அணி­களும் சக­ல­து­றை­க­ளிலும் பிர­கா­சிக்­க­வல்ல அணி­க­ளாகும்.

இந்­தியா மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணி­களில் முன்­வ­ரிசை துடுப்­பாட்ட வீரர்கள் மற்றும் வேகப்­பந்­து­வீ­ச­்சா­ளர்கள் வெகு­வாக பிர­கா­சித்­துள்­ளனர். இந்­திய அணியில் சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­களும் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­வ­ரு­வது அவ்­வ­ணிக்கு மேலும் பலம் சேர்க்­கின்­றது.

இங்­கி­லாந்து சக­ல­து­றை­க­ளிலும் பிர­கா­சித்த போதிலும் எதிர்­பா­ராத வித­மாக பாகிஸ்­தா­னி­டமும், இலங்­கை­யி­டமும் தோல்வி அடைந்ததால் சற்று பின்னடைவு கண்டது. எனினும் கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதால் அரை இறுதிக்குள் நுழைந்தது.

1992இல் போன்றே இம்முறையும் ஆரம்பப் போட்டிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றிபெற்றுவந்த நியூஸிலாந்து, பின்னர் தோல்விகளைத் தழுவி கடும் சவாலுக்கு மத்தியில் அரை இறுதி வாய்ப்பை பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!