நியூ­யோர்க்கில் ஹொட்டோக்ஸ் உண்ணும் போட்டி

0 551

அமெ­ரிக்­காவின் நெதன்ஸ் நிறு­வ­னத்­தினால் நடத்­தப்­படும், ஹொட்டோக் உண்ணும் வரு­டாந்தப் போட்டி நியூயோர்க் நகரில் கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்­றது.

    

1916 ஆம் ஆண்டு முதல் இப்­போட்டி நடத்­தப்­ப­டு­கி­றது.இம்­முறை ஆண்கள் பிரிவில் 35 வய­தான ஜோய் செஸ்னட் 71 ஹொட்டோக்ஸ் உட்­கொண்டு முத­லிடம் பெற்றார்.

இவர் 12 ஆவது தட­வை­யாக இப்­போட்­டியில் சம்­பி­ய­னா­கி­யுள்ளார். கடந்த வருடம் இவர் 74 ஹொட்டோக்ஸ் உட்­கொண்டு சாதனை படைத்­தி­ருந்தார்.

பெண்கள் பிரிவில் 33 வயதான மிக்கி சுடோ முத­லிடம் பெற்றார். இவர் 31 ஹொட்­டோக்­கு­களை உட்­கொண்டார். பெண்கள் பிரிவில் 6 ஆவது தடவையாக மிக்கி சுடோ சம்பியனாகியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!