உலகக் கிண்ண இறுதிப் போட்­டிக்கு தெரி­வாகும் முதல் அணி எது? முதல் அரை இறு­தியில் இந்­தியா, நியூ­ஸி­லாந்து இன்று மோதல்

0 1,084

(மென்­செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்­டி­லி­ருந்து நெவில் அன்­தனி)

இரண்டு தட­வைகள் உலக சம்­பி­ய­னான இந்­தி­யா­வுக்கும் நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூ­ஸி­லாந்­துக்கும் இடை­யி­லான 2019 உலகக் கிண்ண கிரிக்­கெட்டின் முத­லா­வது அரை இறுதிப் போட்டி மென்­செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்ட் விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

இலங்கை நேரப்­படி பிற்­பகல் 3.00 மணிக்கு போட்டி ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்த இரண்டு அணி­க­ளுக்கும் இடையில் முழு­மை­யாக நிறை­வு­பெற்ற கடைசி ஏழு சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் ஆறில் இந்­தியா வெற்­றி­பெற்­றுள்­ளது.  உலகக் கிண்ண வர­லாற்றில் ஏழு தட­வைகள் இந்த இரண்டு அணி­களும் சந்­தித்­துடன் அவற்றில் 4 – 3 என்ற வெற்­றிகள் அடிப்­ப­டையில் முன்­னிலை வகிக்­கின்­றது.

இவ் வருட உலகக் கிண்ணப் போட்­டியில் இந்த இரண்டு அணி­களும் ஒன்­றை­யொன்று சந்­திப்­பது இதுவே முதல் தட­வை­யாகும். இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான லீக் போட்டி சீரற்ற கால­நி­லையால் கைவி­டப்­பட்­டது.  2019 ஐ.சி.சி. உலகக் கிண்ண அத்­தி­யா­யத்தில் இந்­தியா 7 வெற்­றி­களை ஈட்­டி­ய­துடன் ஒரே ஒரு தோல்­வியை இங்­கி­லாந்­து­ட­னான போட்­டியில் தழு­வி­யது. நியூ­ஸி­லாந்து தனது ஆரம்பப் போட்­டி­களில் வெற்­ற­பெற்ற போதிலும் கடைசி 3 போட்­டி­களில் தொடர்ச்­சி­யாக பாகிஸ்தான், அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து ஆகிய நாடு­க­ளிடம் தோல்­வி­களைத் தழு­வி­யது.

இந்த இரண்டு அணி­களும் ஒல்ட் ட்ரபோர்ட் விளை­யாட்­ட­ரங்கில் 1975 உலகக் கிண்ணப் போட்­டியில் சந்­தித்­துக்­கொண்­ட­போது நியூ­ஸி­லாந்து 4 விக்­கெட்­களால் வெற்­றி­யீட்­டி­யி­ருந்­தது. இரண்டு அணி­களும் உலகக் கிண்ண வர­லாற்றில் 7 தட­வைகள் சந்­தித்­துள்­ளன. இதில் நியூ­ஸி­லாந்து 4 – 3 என முன்­னிலை வகிக்­கின்­றது.

இந்­தி­யா­வுக்கும் நியூ­ஸி­லாந்­துக்கும் இடையில் நடை­பெற்­றுள்ள 101 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் இந்­தியா 55 – 45 என்ற அடிப்­ப­டையில் இந்­தியா முன்­னிலை வகிக்­கின்­றது. சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் உத­ய­மான ஆரம்ப காலத்தில் இந்­தியா பல­வீ­ன­மா­ன­தாக இருந்­த­போ­திலும் 1983இல் உலக சம்­பி­ய­னான பின்னர் இந்­தியா, குறிப்­பாக கடந்த பல வரு­டங்­க­ளாக பலம்­வாய்ந்த அணி­யாக பரி­ண­மித்­துள்­ளதை அவ­தா­னிக்­கலாம்.

இம்­முறை உலகக் கிண்ணப் கிரிக்கெட் போட்­டி­களில் ரோஹித் ஷர்மா சாத­னை­மிகு 5 சதங்­க­ளுடன் 647 ஓட்­டங்­களைக் குவித்து இந்­திய துடுப்­பாட்­டத்தில் தூணாக இருக்­கின்றார். கடைசி மூன்று போட்­டி­களில் தொடர்ச்­சி­யாக சதம் குவித்­துள்ள ரோஹித் ஷர்மா, குமார் சங்­கங்­கா­ரவின் தொடர்ச்­சி­யான 4 சதங்­களை (2015இல்) இன்­றைய போட்­டியில் சமப்­ப­டுத்­தி­னாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. இவர் இம்­முறை நான்கு ஆட்­ட­நா­யகன் விரு­து­களை வென்­றுள்ளார்.

விராத் கோஹ்லி 5 அரைச் சதங்­க­ளுடன் 442 ஓட்­டங்­க­ளையும் லோக்கேஷ் ராகுல் ஒரு சதத்துடன் 360 ஓட்­டங்­க­ளையும் எம்.எஸ். தோனி ஒரு அரைச் சதத்­துடன் 223 ஓட்­டங்­க­ளையும் பெற்­றுள்­ளனர்.  பந்­து­வீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 17 விக்­கெட்­க­ளையும் மொஹமத் ஷமி 14 விக்­கெட்­க­ளையும் யுஸ்­வேந்த்ர சஹால் 11 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இவர்கள் அனை­வரும் இந்­தி­யாவின் வெற்­றி­களில் பெரும் பங்­காற்­றி­ய­துடன் இன்­றைய போட்­டி­யிலும் அணியின் வெற்­றிக்கு பிர­தான பங்­க­ளிப்பர் என நம்­பப்­ப­டு­கின்­றது. நியூ­ஸி­லாந்து அணி துடுப்­பாட்­டத்தில் கேன் வில்­லி­யம்சன் 2 சதங்­க­ளுடன் 481 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார்.

இவரை விட ரொஸ் டெய்லர் (261), ஜேம்ஸ் நீஷாம் (201) ஆகிய இரு­வரே 200 ஓட்­டங்­க­ளுக்கு மேல் பெற்­றுள்­ளனர். பந்­து­வீச்சில் லொக்கி பெர்­குசன் (17 விக்­கெட்கள்), ட்ரென்ட் போல்ட் (15), ஜேம்ஸ் நீஷாம் (11), மெட் ஹென்றி (1)) ஆகியோர் பிர­கா­சித்­துள்­ளனர்.
ஒட்டுமொத்தத்தில் இந்த இரண்டு அணிகளையும் ஒப்பிடுகையில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகத் தென்படுகின்றது.

ஆனால் நியூஸிலாந்து அணி எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம.
எது எவ்வாறாயினும் இது நொக் அவுட் போட்டி என்பதால் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்த முயற்சிக்கும் என்பது நிச்சயம்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!