ஜேர்மனியில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர்; அதிக உஷ்ணம் காரணம் என பொலிஸாரிடம் தெரிவிப்பு

0 330

நபர் ஒருவர் நிர்­வாண கோலத்தில், வீதி­யொன்றில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற நிலையில் பொலி­ஸாரால் தடுத்து நிறுத்­தப்­பட்ட சம்­பவம் ஜேர்­ம­னியில் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

ஜேர்­ம­னியின் வட பிராந்­திய நக­ரான, பிரண்­டன்­பேர்க்கில் ஆண் ஒருவர் நிர்­வா­ண­மாக மோட்டார் சைக்­கிளை செலுத்திச் சென்றார்.

அவர் தலைக்­க­வ­சமும் செருப்­பு­களும் மாத்­தி­ரமே அணிந்­தி­ருந்தார். அவ்­வீ­தியில் சென்ற பலரும் மேற்­படி நபரைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

இறு­தியில், அந்­ந­பரை பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் தடுத்து நிறுத்­தினார்.

அந்­ந­ப­ரிடம் பொலிஸார் விசா­ரணை நடத்­தி­ய­போது, அதிக உஷ்ணம் கார­ண­மாக தான் ஆடை எதுவும் அணி­யாமல் நிர்­வா­ண­மாக மோட்டார் சைக்­கிளில் சென்­ற­தாக தெரி­வித்­துள்ளார்.

அதிக உஷ்ணம் நில­வு­கி­றது என்­பதை தாம் ஏற்­றுக்­கொண்ட போதிலும், அதற்­காக நிர்­வா­ண­மாக வீதியில் செல்­வது ஏனை­யோ­ருக்கு இடை­யூ­றாக இருக்கும் எனவும், இது தொடர்­பாக முறைப்­பா­டொன்று கிடைத்­துள்­ள­தா­கவும் அந்­ந­ப­ரிடம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இறு­தியில், காற்­சட்­டை­யொன்றை அணிந்­து­கொள்­ளு­மாறு அந்­ந­ப­ருக்குப் பொலிஸார் அறி­வு­றுத்­தி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஐரோப்பாவின் பல பகுதிகளில் சுமார் 40 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!