டுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டப் போட்டியுடன் இணைந்த நிதி சேகரிப்புக்கான சைக்கிள் பிரசல்ஸில் திருடப்பட்டது

திருப்பிக் கொடுக்குமாறு நகர மேயர், முன்னாள் சம்பியன் உட்பட பலரும் கோரிக்கை

0 139

உலகப் பிர­சித்தி பெற்ற டுவர் டி பிரான்ஸ் சைக்­கி­ளோட்டப் போட்­டி­யுடன் இணைந்த நிதி சேக­ரிப்­புக்­காக பெல்­ஜி­யத்தின் தலை நகர் பிர­சல்ஸில் நகரில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த சைக்­கி­ளொன்று திரு­டப்­பட்­டதால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.திரு­டப்­பட்ட சைக்­கிளை மீட்கும் முயற்­சியில் நகர மேயர் உட்­பட பலரும் ஈடு­பட்­டுள்­ளனர்.

106 ஆவது டுவர் டி பிரான்ஸ் சைக்­கி­ளோட்டப் போட்டி பெல்­ஜி­யத்தின் தலை­நகர் பிர­சல்ஸில் கடந்த சனிக்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­யது. 21 கட்­டங்­க­ளாக நடை­பெறும் இப்­போட்டி எதிர்­வரும் 28 ஆம் திகதி பிரான்ஸின் பாரிஸ் நகரில் நிறை­வ­டை­ய­வுள்­ளது.இப்­போட்­டி­யுடன் தொடர்­பு­டை­ய­தாக, நிதி சேக­ரிப்புத் திட்­ட­மொன்­றுக்­கான ஏல விற்­ப­னை­யொன்று பிரசல்ஸ் நகரில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

பின்­தங்­கிய பெண்கள், மற்றும் சிறு­மி­க­ளுக்கு சைக்­கிள்கள், தலைக்­க­வ­சங்கள், சைக்­கி­ளோட்டப் பயற்­சி­களை வழங்­கு­வ­தற்­காக ‘குபேக்கா’ எனும் தொண்டர் நிறு­வ­ன­மொன்று இந்­நிதி சேக­ரிப்பு நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­தது. இதற்­காக மஞ்சள், பச்சை, வெள்ளை, கறுப்பு வெள்ளை நிறங்­களைக் கொண்ட 4 சைக்­கிள்கள் ஏலத்தில் விற்­பனை செய்­யப்­ப­ட­வி­ருந்­தன.

இந்த சைக்­கிள்கள் கண்­காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், மிகப் பெறு­ம­தி­யா­ன­தாக கரு­தப்­படும் மஞ்சள் நிற சைக்கிள் திரு­டப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த நிலை­யிலும் இந்த சைக்கிள் திரு­டப்­பட்டு;ள்ளது என குபேக்கா நிறு­வ­னத்தன் பேச்­சாளர் ஜெரமி போர்ட் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில், இந்த சைக்­கிளை திருப்­பிக்­கொ­டுக்­கு­மாறு பிரச்­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.  உள்ளூர் மேயர், பெல்ஜியத்தைச் சேர்ந்த முன்னாள் டுவர் டி பிரான்ஸ் சம்பியன் எடி மேர்க்ஸ் உட்பட பலரும் மேற்படி சைக்கிளை திருப்பிக் கொடுக்குமாறு கோரியுள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!