நொக் அவுட் என்பது மற்றொரு ஆரம்பமாகும் -நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லயம்சன்

0 1,134

(மென்செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்டிலிருந்து நெவில் அன்தனி)

“இந்தியா ஒரு வெற்றிகரமான அணி மாத்திரமல்ல, மிகப் பெரிய சனத்தொகை அவர்கள் பின்னால் இருக்கின்றது. போதாக் குறைக்கு கெமராக்களும் அவர்களைத்தான் பின்தொடர்கின்றன. கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் அது மகத்தானது. அதில் நாங்களும் பங்காளிகளாக இருந்தாலும் நாங்கள் விளையாடப் போவது மிக முக்கியமான கிரிக்கெட் போட்டியாகும்.

ஏனெனில் நொக் அவுட் என்பது மறறொரு ஆரம்பமாகும்” என நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நியூஸிலாந்து அணி கடைசி கட்டத்திலேயே அரை இறுதிப் போட்டிக்கு தெரிவானது. எந்த அணியை அரை இறுதியில் எதிர்கொள்ள நேரிடும் என்பது இரண்டு தினங்களுக்கு முன்னரே தெரியவந்தது. இது மனோரீதியாக குழப்பத்தை தோற்றுவித்ததா? என அவரிடம் கேட்டபோது,

“எந்த அணியை எதிர்கொள்வதாக இருந்தாலும் அது உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியாகும். அது கடினமான போட்டியாகத்தான் அமையும். திறமையான கிரிக்கெட் ஆற்றல்களை வெளிப்படுத்தி முதல் நான்கு அணிகள் அரை இறுதி;க்கு முன்னேறியுள்ளன. நாங்கள் கடும் போட்டியை எதிர்கொள்ளவுள்ளோம் என்பதை அறிவோம்.

யார் யாரை எதிர்த்தாடினாலும் ஒவ்வொரு அணியும் தத்தம் மீது நம்பிக்கை வைத்துள்ளன. மற்றைய அணியை வெற்றிகொள்ள வேண்டும் என்ற மனோபக்குவம் அடிப்படையில் இருக்கவேண்டும்” என்றார். பொதுவாக உலகக் கிண்ணம் என்று வந்துவிட்டால் அழுத்தங்களும் அணிகளைத் தொற்றிக்கொள்ளும். அதுபோன்ற நிலை நியூஸிலாந்து அணியிலும் இருக்கின்றதா எனக் கேட்கப்பட்டபோது, 

ஷஷஇருக்கலாம். ஆனால் அறுதியிட்டு கூறமுடியாது. எதுவும் நடக்கலாம், எப்படியும் நடக்கலாம். குறிப்பிட்ட நாளில் அதீத திறமையை வெளிப்படுத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எல்லா அணிகளும் தங்களாலான அதிகப்பட்ச பயிற்சியில் கடுமையாக ஈடுபடுகின்றன.  

அத்தகைய சூழ்நிலைகளில் அழுத்தங்கள் எழுகின்றது. ஆனால் சிறப்பாக விளையாடுவது முக்கியம்|| என பதிலளித்தார்.ஒரு குறிப்பிட்ட விடயத்தில் வெற்றியும் தோல்வியும் தங்கியிருக்கின்றன என கருதுகின்றீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த வில்லியம்சன்,

“குறிப்பிட்டு சொல்வதற்கில்லை. அது நிச்சயமாக தெரியாது. எம்மைப் பொறுத்தமட்டில் திறமையாக கிரிக்கெட் விளையாடவேண்டும் என்பதாகும். எங்களது திறமைக்கேற்ப விளையாட முடிந்தால் எத்தகைய அணியையும் எம்மால் வெற்றிகொள்ள முடியும. இம்முறை முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ள அணிகள் சர்வதேச அரங்கில் ஒன்றையொன்று வெற்றிகொண்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன.

எந்த அணியும் தோல்வி அடையாமல் இருந்ததில்லை. எனவே இந்த நான்கு முன்னணி அணிகளும் பரபரப்பை ஏற்படுத்துவல்லவை. எமது நோக்கமெல்லாம் அர்ப்பணிப்புடன் விளையாடி எமது வாய்ப்பை அதிகரித்துக்கொள்வதாகும்” என்றார்.

இரண்டு அணிகளினதும் பந்தவீச்சுபற்றி கருத்து வெளியிட்ட வில்லியம்சன்,  “வெவ்வேறு ஆடுகளங்களில் எமது பந்துவீச்சு பிரகாசித்துள்ளது. அதுதான் முக்கியம். லீக் சுற்றில் எமது பந்துவீச்சாளர்கள் அந்தந்த ஆடுகளங்களுக்கேற்ப தங்களைத் தயார்படு;த்தி திறமையை வெளிப்படுத்தினர். அடுத்த போட்டியிலும் அதனை நாங்கள் சாதிக்க வேண்டும். இதனை முன்னிட்டு ஆடுகளத்தின் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப செயற்படுவோம்.

இந்திய பந்துவீச்சும் அதீத திறமைவாய்ந்தது. அவ்வணியில் உலகத் தரம்வாய்;ந்த பந்துவீச்சாளர்கள்; இருக்கின்றனர். இந்திய அணியைப் பொறுத்தமட்டில் தரம் வாய்ந்த வீரர்களைக்கொண்ட சமபலம்வாய்ந்த அணியாகும். ஆனால் நொக் அவுட் சுற்றுக்கு தெரிவாகியுள்ள நான்கு அணிகளுக்கு இது மற்றொரு ஆரம்பமாகும். குறிப்பிட்ட நாளில் எதுவும் நிகழலாம்” என்றார்.

இள வயதில் விராத் கோஹ்லிக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகள் பற்றி நினைவுகூரமுடியுமா? எனக் கேட்கப்பட்ட போது,
“அவர் ஒரு சிறந்த வீரர். நாங்கள் இருவரும் பல சந்தர்ப்பங்களில் ஒரே பருவ வயதுகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடி வந்துள்ளோம். பின்னர் இளம் வயதிலேயே சர்வதேச அரங்கு, ஐபிஎல் என்பவற்றில் சந்தித்துள்ளோம். அவர ஒரு சுப்பர் ஸ்டாராக பரணமித்திருப்பதை பார்க்கக் கிடைத்துள்ளதை ஒரு வரப்பிரசாதமாக கருதுகின்றேன்” என்றார்.  

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!