அழுத்தத்தை சரியாக கையாளும் அணி வெற்றிபெறும்  -விராத் கோஹ்லி

0 1,168

(மென்செஸ்டர் ஓல்ட் ட்ரபொர்டிலிருந்து நெவில் அன்தனி)

உலகக் கிண்ண அரை இறுதியில் எந்த அணி அழுத்தத்தை சரியாக கையாள்கின்றதோ அந்த அணி வெற்றிபெறும் என இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்தார். கோஹ்லி தலைமையிலான இந்தியா, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்தை முதலாவது அரை இறுதியில் மென்செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் நாளை எதிர்த்தாடவுள்ளது.

இதற்கு முன்னோடியாக இன்று முற்பகல் (இங்கலாந்து நேரப்படி) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோது விராத் கோஹ்லி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மலேசியாவின் தலைநகரான கொலாலம்பூரில் 2008இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியை தனது தலைமையிலான இந்திய அணி வெற்றிகொண்டதை நினைவுகூர்ந்த விராத் கோஹ்லி, அது ஒரு சிறந்த தருணம் என்றார்.

நியூஸிலாந்துடனான நாளைய அரை இறுதி;ப் போட்டியை இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்வதாக விராத் கோஹ்லி குறிப்பிட்டார். எமது அணி மிகுந்த நம்பிக்கையுடன் இப் போட்டியை எதர்கொள்கின்றது. சகல அணிகளும் லீக் சுற்றில் கடும் உழைப்புடன் விளையாடி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.

குறிப்பிட்ட நாளில் யார் திறமையாக விளையாடுகின்றார்களோ அவர்கள் வெற்றிபெறுவார்கள். எனவே இப் போட்டியை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளோம்.  இந்த உலகக் கிண்ண அத்தியாயம் மிக நீளமானது. (லீக் சுற்றில் ஒவ்வொரு அணிக்கும் 9 போட்டிகள்) அனைத்து அணிகளும் கடும் உழைப்புடனும் முயற்சியுடனும் விளையாடின.

அரை இறுதி  தகுதியைப் பெற்றதையிட்டு நாங்கள் மகிழ்வுறுகின்றோம். இப்போது எமக்கு ஒரு சந்தர்ப்பம் வந்துள்ளது. அதனையிட்டு எல்லோரும் உணர்ச்சிவசத்துடன் உள்ளனர்|| என்றார். நொக் அவுட் போட்டிக்கான வீரர்களின் மனோ நிலை எவ்வாறு இருக்கின்றது எனக் கேட்டபோது,

சற்று மாறுபட்டதாகத்தான் அமைந்துள்ளது. உண்மையாகவும் நேர்மையாகவும் கூறுவதென்றால், நொக் அவுட்டுக்கு தகுதிகாண்பதாக இருந்தால் லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றியாகத் தேவை என்பதை சகலரும் அறிவீர்கள். எனவே சற்று ஆசுவாசத்துடன்  சில விடயங்ளை முயற்சிக்கலாம்.

ஆனால் நொக் அவுட் என்று வந்துவிட்டால் கடும் சவால் ஏற்படும். ஆகையால் திடமாக, துல்லியமாக செயற்படவேண்டும். 
இத்தகைய போட்டிகளில் இரண்டு அணிகளுக்கும் போதுமான அனுபவம் இருக்கின்றது. நியூஸிலாந்து கடந்த உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தது.

அவ்வணிக்கு நொக் அவுட் போட்டியை எவ்வாறு எதிர்கொள்வதென்பது நன்கு தெரியும். இம்முறையும் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். எனவே அவ்வணி தரம்வாய்ந்தது|| என கோஹ்லி பதிலளித்தார். நியூஸிலாந்தின் பந்துவீச்சு, இந்திய பந்துவீச்சு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கோஹ்லி, 

என்னைப் பொறுத்த மட்டில் சிறந்த பந்துவீச்சுடனேயே நாங்கள் விளையாடுகின்றோம். சுற்றுப் போட்டியில் அதி சிறந்த பந்துவீச்சாக இல்லாவிட்டாலும் எமது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். நியூஸிலாந்தின் பந்துவீச்சு சம அளவில் இருக்கின்றது. அவர்களது வேகப்பந்துவீச்சாளர்கள் திறமைசாலிகள்.

அவர்களை நாங்கள் மிகச் சரியாக எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடவேண்டும். நியூஸிலாந்துடன் நாங்கள் பல போட்டிகளில் விளையாடியுள்ளோம். அவர்கள் தரமிக்க அணியினர். குறிப்பாக அதி சிறந்த பந்துவீச்சு அவர்களிடம இருக்கின்றது என்றார்.

2008இல் 19 வயதின் உலகக் கிண்ண அரை இறுதி, 2019இல் சிரேஷ்ட உலகக் கிண்ண அரை இறுதி, மலேசியாவில் 2008இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்தும் விராத் கோஹ்லி தலைமையிலான இந்தியாவும் விளையாடியிருந்ததுடன் அப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவையும் வீழ்ததி சம்பியானகியிருந்தது.

11 வருடங்களுக்கு நடைபெற்ற அந்த சம்பவத்தை நினைவுபடுத்தி கேள்வி எழுப்பப்பட்டபோது, ஷஷபதினொரு வருடங்கள் கழித்து அதே தலைமைகளின் கீழ் ஐ.சி.சி. உலகக் கிணண அரை இறுதியில் இரண்டு அணிகளும் விளையாடுவது பெரிய விடயம்|| என இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்தார்.

2008 இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இறுதிப் போட்டியில் விளையாடிய அதே அணி வீரர்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தல் உலகக் கிண்ண அரை இறுதியில் சந்திப்பார்கள் என யாரும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள் எனவும் விராத் கோஹ்லி தெரிவித்தார். அப்போட்டியில் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை விராத் கோஹ்லி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது,

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!