வரலாற்றில் இன்று: ஜூலை 9 : 2011-தென் சூடான் சுதந்திரம் பெற்றது

0 105

869: ஜப்­பானின் வட­ப­கு­தியில் 8.6 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டது.

1540: பிரித்­தா­னிய மன்னர் 8 ஆம் ஹென்றி, தனது நான்­கா­வது மனைவி ஆன் உட­னான திரு­ம­ணத்தை ரத்துச் செய்தார்.

1790: ரஷ்­யா­வு­ட­னான போரில் மூன்­றி­லொரு பங்கு ரஷ்ய கப்­பல்­களை சுவீடன் கைப்­பற்­றி­யது.

1810: ஒல்­லாந்தை பிரான்­ஸுடன் ஒரு பாக­மாக நெப்­போ­லியன் இணைத்தான்.

1816: ஸ்பானிய ஆட்­சி­ய­ிலி­ருந்து பிரி­வ­தாக ஆர்­ஜென்­டீன சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.

1868: அமெ­ரிக்­காவில் கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்கு பூரண பிர­ஜா­வு­ரிமை அளிக்கும் 14 ஆவது திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது.

1875: ஒட்­டோமான் இராஜ்­ஜி­யத்­துக்கு எதி­ராக ஹேர்­ஸி­கோ­வினா கிளர்ச்சி ஆரம்­ப­மா­கி­யது.

1877: முத­லா­வது விம்­பிள்டன் டென்னிஸ் சுற்­றுப்­போட்டி ஆரம்­ப­மா­கி­யது.

1900: அவுஸ்­தி­ரே­லியா கண்­டத்­தி­லுள்ள பல்­வேறு குடி­யேற்றப் பிராந்­தி­யங்­களை ஒன்­றி­ணைத்து அவுஸ்­தி­ரே­லியா எனும் சமஷ்டி அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான அரச ஆணையை பிரித்­தா­னிய அரசி விக்­டோ­ரியா வழங்­கினார்.

1918: அமெ­ரிக்­காவின் டென்­னஸி மாநி­லத்தில் இரு ரயில்கள் மோதிக்­கொண்­டதால் 101 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 107 பேர் காய­ம­டைந்­தனர். அமெ­ரிக்க வர­லாற்றில் மிக மோச­மான ரயில் விபத்து இது­வாகும்.

1922: அமெ­ரிக்க நீச்சல் வீரர் ஜொனி வீஸ்­முல்லர் 100 மீற்றர் ப்றீ ஸ்டைல் நீச்சல் போட்­டியை 58.6 விநா­டி­க­ளில நிறை­வு­செய்து புதிய உலக சாதனை படைத்தார். இவர்­பின்னர் திரைப்­ப­டங்­களில் டார்ஸன் வேடத்தில் நடித்து உலகப் புகழ்­பெற்றார்.

1932: பிரேஸில் மத்­திய அர­சாங்­கத்­துக்கு எத­ிராக சாவோ போலோ மாநிலம் கிளர்ச்­சியில் ஈடு­பட்­டது.

1958: அமெ­ரிக்­காவின் அலெஸ்கா மாநி­லத்தில் 534 மீற்றர் உய­ர­மான சுனாமி அலை அடித்­தது. வர­லாற்றில் பதி­வு­செய்­யப்­பட்ட மிக உய­ர­மான சுனாமி அலை இது­வாகும்.

1982: அமெ­ரிக்­காவின் லூசி­யானா மாநி­லத்தில் இடம்­பெற்ற விமான விபத்தில் விமா­னத்­தி­லி­ருந்த 145 பேரும் தரை­யி­லி­ருந்த 8 பேரும் உயி­ரி­ழந்­தனர்.

1986: நியூ­ஸி­லாந்து நாடா­ளு­மன்றம் ஒரு­பா­லின சேர்க்­கையை சட்­ட­பூர்­வ­மாக்­கி­யது.

2006: ரஷ்­யாவின் சைபீ­ரி­யாவில் விமா­ன­மொன்று ஓடு­பா­தை­யி­லி­ருந்து விலகி விபத்­துக்­குள்­ளா­னதால், விமா­னத்­தி­லி­ருந்த 200 பேரில் 122 பேர் உயிரிழந்தனர்.

2011: சூடானிடமிருந்து தென் சூடான் சுதந்திரம் பெற்றது.

2018: கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா சுட்டுக்கொல்லப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!