பிரேஸிலுக்கான இஸ்ரேலியத் தூதுவர் யூதர்களுக்கு விலக்கப்பட்ட சிங்கிறால் உட்கொண்டதை மறைக்க இஸ்ரேலியத் தூதரகம் மேற்கொண்ட அரைகுறை முயற்சி!

Israeli embassy in Brazil mocked for censoring photo of ambassador eating lobster

0 1,826

பிரேஸிலுக்கான இஸ்ரேலியத் தூதுவர் சிங்கிறால் உட்கொண்டதை மறைப்பதற்கு பிரேஸிலிலுள்ள இஸ்ரேலியத் தூதரகம் மேற்கொண்ட அரைகுறை முயற்சி கிண்டல்களுக்கு இலக்காகியுள்ளது.

பிரேஸிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோபா அமெரிக்கா கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு முன்னர், பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவும், பிரேஸிலுக்கான இஸ்ரேலியத் தூதுவர் யோசி ஷெல்லியும் ஒன்றாக மதிய உணவு உட்கொண்டனர்.

இதன்போது பிடிக்கப்பட்ட படமொன்றை பிரேஸிலில் உள்ள இஸ்ரேலியத் தூதரகம் வெளியிட்டிருந்தது.

இப்படத்தில் இருவரின் உணவுத் தட்டுக்களின் சில பகுதிகள் கறுப்பு நிறத்தினால் மறைக்கப்பட்டிருந்தன.

ஆனால், மேற்படி உணவுத் தட்டுக்களில் சிங்கிறால் (lobster)  இருப்பதை மறைக்கும் முயற்சியாகவே படத்தில் கறுப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது என்பதை பலர் கண்டுபிடித்தனர். ஏனெனில் சிங்கிறால்களின் சில பாகங்கள் படத்தில் தெரிந்தன.

யூதர்களின் மத வழக்கப்படி, யூதர்களுக்கு தடுக்கப்பட்ட (non-kosher ) உணவுகளில் ஒன்றாக சிங்கிறால் உள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலியத் தூதுவர் யோசி ஷெல்லி சிங்கிறால் உட்கொண்டார் என்பதை மறைப்பதற்கு பிரேஸிலின் இஸ்ரேலியத் தூதுரகம் முயன்று தோல்வியுற்றதாக விமர்சிக்கப்படுகிறது. இதை சமூக வலைத்தளங்களில் பலர் கிண்டலடித்துள்ளனர்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!