நாளை பதில் பொலிஸ்மா அதிபரைச் சந்திக்கிறோம்: முஸ்லிம் எம்பிக்களின் சந்திப்பு நாளை இல்லை! ரிஷாத் பதியுதீன்

0 390

                                                                                                                                     (ஏ. எச்.சித்தீக் காரியப்பர்)
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் நாளை (10) புgதன்கிழமை நடைபெறவிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ‘மெட்ரோ நியூஸ்’ இணையத்துக்கு கருத்துத் தெரிவித்த அகில மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

‘குறித்த கூட்டம் நாளை புதன்கிழை நடைபெறவிருந்தது. இருப்பினும் ஒரு நாள் பிந்தியதாக நாளை மறுதினமே (11) இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.’

‘ தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் முஸ்லிம்களின் பாதுகாப்பு, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமூலம், மற்றும் மட்டக்களப்பு பல்கலைக் கழகம் (பெட்டிகலோ) தொடர்பிலேயே ஆராயவுள்ளோம்.’

‘இதேவேளை, எதிர்வரும் ஹஜ் தினத்தில் குர்பான் கொடுப்பதற்காக கால்நடைகளை அறுப்பது தொடர்பில் எழக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் நாளை (10) பதில் பொலிஸ் மா அதிபர் சி டீ விக்கிரமரத்தனவைச் சந்தித்துப் பேசவுள்ளோம்’ என்றும் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!