குறைத்து மதிப்பிடப்பட்ட இலங்கை 6ம் இடத்தைப் பெற்றமை திருப்தி -திமுத் கருணாரட்ன

0 63

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உலகக் கிண்ணப் போட்­டிக்கு செல்­லும்­போது நாம் ஆப்­கா­னிஸ்தான் அணி­யு­டன்­கூட வெற்றி பெற மாட்டோம் என சிலர் குறைத்து மதிப்­பிட்­டி­ருந்­தனர். எனினும், உலகக் கிண்­ணத்தில் நாம் சிறப்­பாக செயற்­பட்டு ஆறாம் இட­த்தைப் பெற்­றமை  திருப்தி அளிக்­கி­றது என இலங்கை அணித் தலைவர் திமுத் கரு­ணா­ரட்ன தெரி­வித்தார்.

(படப்பிடிப்பு எஸ்.எம். சுரேந்திரன்)

 

உலகக் கிண்ணப் போட்­டியில் பங்­கு­பற்றி லீக் சுற்­றுடன் வெளி­யே­றிய இலங்கை அணி நேற்று முன்தினம் நாடு திரும்­பிய பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தில் ஊடக சந்­திப்பு நடை­பெற்­றது.இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடு­களில் நடை­பெற்று வரும் 12ஆவது உலகக் கிண்ண அத்­தி­யா­யத்தில் 3 வெற்­றிகள், 4 தோல்­விகள் மற்றும் 2 முடிவு எட்­டப்­ப­டாத போட்­டி­க­ளுடன் 8 புள்­ளி­களைப் பெற்ற இலங்கை அணி ஆறாம் இடத்தைப் பெற்­றது.

ஊடக சந்­திப்பில் கலந்­து­கொண்டு பேசிய திமுத் கரு­ணா­ரட்ன, ”எமது அணியின் சிரேஷ்ட வீரர்கள் எனக்கு முழு ஒத்­து­ழைப்­பையும் வழங்­கினர். உலகக் கிண்ணப் போட்­டியில் எமது திட்­டத்­துக்கு ஏற்ப சரி­யாக விளை­யா­டினோம். துடுப்­பாட்டம், பந்­து­வீச்சில் மிகச் சிறப்­பாக செயற்­பட்டோம் என கூற­வ­ர­வில்லை.

மேலும், உலகக் கிண்­ணத்தில் சிறப்­பான போட்­டித்­தன்­மையை ஏற்­ப­டுத்­தினோம் என நம்­பு­கின்றேன். உலகக் கிண்ணத் தொட­ருக்கு செல்­லும்­போது நாம் ஆப்­கா­னிஸ்தான் அணி­யுடன் கூட வெற்றி பெற­மாட்டோம் என சிலர் கூறி­யி­ருந்­தனர். எனினும், நாம் பல­மிக்க இங்­கி­லாந்து, மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­களை வெற்­றி­கொண்டோம்.

”ஏஞ்­சலோ  மெத்­தியூஸ், லசித் மாலிங்க ஆகிய சிரேஷ்ட வீரர்கள் எனக்கு சிறந்த ஒத்­து­ழைப்பை வழங்­கினர்.. அவர்­களின் அனு­பவம் எனக்கும் அணிக்கும் பேரு­த­வி­யாக இருந்­தது. ஏனெனில், உலகக் கிண்ணத் தொட­ருக்கு 2 மாதங்கள் இருக்­கும்­போ­து­தான் ஒரு நாள் அணிக்­கான தலை­மைத்­துவம் எனக்குத் தரப்­பட்­டது.

ஒருநாள் போட்­டி­களில் போதிய அனு­பவம் இல்­லாத எனக்கு சிரேஷ்ட வீரர்­க­ளான மாலிங்­கவும் மெத்­தி­யூஸும் தங்­க­ளது அனு­ப­வத்­து­ட­னான ஆலோ­ச­னை­களை வழங்­கி­யமை பக்­க­ப­ல­மாக  அமைந்­தது” என  திமுத் கரு­ணா­ரட்ன குறிப்­பிட்டார். இலங்கை அணி ஆக்­ரோஷ ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தத் தவ­றி­யதால் வெற்­றிகள் நழு­விப்­போ­ன­தாக இலங்கை கிரிக்கெட் அணி முகா­மை­யா­ளரும் சுற்­றுப்­ப­யண தேர்­வா­ள­ரு­மான அசந்த டி மெல்  குறிப்­பிட்டார்.

|”போட்டி என்று வந்­து­விட்டால் எதி­ர­ணி­யி­னரை ஆட்டங் காணச்­செய்ய வேண்டும். ஒரு சில போட்­டி­களில் நாம் ஆக்­ரோஷ ஆட்­டத்­தி­றனை வெளிப்­ப­டுத்த தவ­றி­விட்டோம். அவுஸ்­தி­ரே­லிய அணிக்­கெ­தி­ரான போட்­டியில் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்கள் 115 ஓட்­டங்­களைப் பகி­ர்ந்து எதி­ர­ணியை ஆட்­டங்­காணச் செய்­தி­ருந்­தனர். வெற்றி எமது பக்­க­மாக இருந்­த­போ­திலும் மத்­தி­ய­வ­ரிசை துடுப்­பாட்ட வீரர்கள் அழுத்­தத்தைத் தங்­கள்மேல் திணி­த்­துக்­கொண்­டதால் பாத­க­மாக அமைந்­தது” என்றார்.

ஆரம்பப் போட்­டி­களில் அவிஷ்க பெர்னாண்டோவை இணைக்­கா­த­தற்கு காரணம் என்­ன­வெனக் கேட்­ட­போது, ”பயிற்சிப் போட்­டி­யொன்றில் அவிஷ்க உபா­தைக்­குள்­ளா­னதால், ஆரம்பப் போட்­டி­களில் இணைத்­துக்­கொள்­ள­வில்லை. அவிஷ்­கவை ஆரம்ப வீர­ரா­கவே குழாத்தில் இணைத்­தி­ருந்தோம்.

அவர் உபா­தைக்­குள்­ளா­னதால் குசல் பெரே­ரா­வை ஆரம்ப வீர­ராக கள­மி­றக்க நேரிட்­டது. எமது மத்­திய வரிசை வீரர்கள் சற்று மந்­த­மாக விளை­யா­டி­ய­துடன், விக்­கெட்­க­ளையும் தாரை வார்த்­தனர். இந்­நி­லையில் உபா­தை­யி­லி­ருந்து பூர­ண­மாக குண­ம­டைந்த அவிஷ்­கவை 3ஆம் இலக்க வீர­ராக விளை­யா­டச்­செய்தோம். அவர் தனக்கு கிடைத்த ஒவ்­வொரு வாய்ப்­பையும் மிகச் சரி­யாகப் பயன்­ப­டுத்தி அணிக்கு; பெரும் பங்­காற்­றி­யி­ருந்தார்” எனவும் அஷன்த டி மெல் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!