இசையமைப்பாளராகும் பாடகர் சித்ஸ்ரீராம்

0 85

மணிரத்னம் படத்தில் பாடகர் சித்ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மணிரத்னம் இயக்கிய ஆரம்பகால படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில், ‘ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்தார்.

அப்போது தொடங்கி இப்போதுவரை தான் இயக்கும் அனைத்து படங்களுக்குமே ஏ.ஆர்.ரஹ்மானையே இசையமைக்க வைத்து வருகிறார் மணிரத்னம். 

அதேசமயம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மற்ற டைரக்டர்கள் இயக்கத்தில் தான் தயாரிக்கும் படங்களுக்கு வேறு இசையமைப்பாளர்களை பயன்படுத்தி வரும் மணிரத்னம், தற்போது

தனது உதவியாளர் தனசேகரன் இயக்கி வரும், ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராமை இசையமைப்பாளராக்கியிருக்கிறார்.

“என்னோடு நீ இருந்தால்…(ஐ), எனை மாற்றும் காதலே…(நானும் ரௌடி தான்), குறும்பா குறும்பா…(டிக் டிக் டிக்), கண்ணான கண்ணே…(விஸ்வாசம்) போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் இவர்.

இவர் ஏ.ஆ.ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியவர்.

விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி சேர்ந்து நடிக்கும் இந்த படத்திற்கு மணிரத்னம் கதை-வசனம் எழுதியிருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!