வரலாற்றில் இன்று: ஜூலை 10 : 1991-தென் ஆபிரிக்கா மீண்டும் ஐ.சி.சி. அங்கத்துவம் பெற்றது

0 112

1212: லண்டன் நகரின் பெரும்­ப­குதி தீயினால் அழிந்­தது.

1778: பிரிட்­ட­னுக்கு எதி­ராக பிரான்ஸின் 16 ஆம் லூயி மன்­னனால் யுத்தப் பிர­க­டனம் செய்­யப்­பட்­டது.

1821: ஸ்பெய்­னி­ட­மி­ருந்து வாங்­கப்­பட்ட புளோ­ரிடா பிராந்­தி­யத்தை அமெ­ரிக்கா பொறுப்­பேற்­றது.

1913: அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் 56.7 பாகை செல்­சியஸ் வெப்­ப­நிலை பதி­வா­கி­யது. ஐக்­கிய அமெ­ரிக்க வர­லாற்றில் பதி­வு­செய்­யப்­பட்ட மிக அதி­க­மான வெப்­ப­நிலை இது.

1921: வட அயர்­லாந்தின் பெல் பாஸ்ட் நகரில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 16 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1938: ஹோவார்ட் ஹியூஸ் என்­பவர் 91 மணித்­தி­யா­லங்­களில் விமா­னத்தில் உலகை சுற்­றி­வந்து சாதனை படைத்தார்.

1942: சோவியத் யூனி­ய­னுக்கும் நெதர்­லாந்­துக்கும் இடையில் ராஜ­தந்­திர உறவு ஆரம்­ப­மா­கி­யது.

1947: பாகிஸ்­தானின் முதல் ஆளுநர் நாய­க­மாக முஹமட் அலி ஜின்­னாவை பிரித்­தா­னிய பிர­தமர் கிளெமென்ட் அட்லி சிபா­ரிசு செய்தார்.

1962: உலகின் முத­லா­வது தொலைத்­தொ­டர்பு செய்­ம­தி­யான டெல் ஸ்டார், நாசா­வினால் விண்­வெ­ளிக்கு ஏவப்­பட்­டது.

1973: பஹா­ம­ஸுக்கு பூரண சுதந்­திரம் வழங்­கப்­பட்­டது.

1991: தென் ஆபி­ரிக்­காவில் நிற­வெறி ஆட்சி முடி­வுற்­ற­தை­ய­டுத்து அந்­நாடு மீண்டும் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் (ஐ.சி.சி) அங்­கத்­துவம் பெற்­றது.

1992: பனா­மாவின் முன்னாள் ஆட்­சி­யாளர் மனுவெல் நொரி­கா­வுக்கு போதைப் பொருள் கடத்தல் விவ­காரம் தொடர்­பாக அமெ­ரிக்க நீதி­மன்­றத்­தினால் 40 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

2000: நைஜீ­ரி­யாவில் எரி­வாயு குழா­யொன்றில் வெடிப்பு ஏற்­பட்­டதால் 250 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2003: ஹொங்­கொங்கில் இடம்­பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் உயி­ரி­ழந்­தனர். ஹொங்கொங் வர­லாற்றில் மிக மோச­மான வாகன விபத்து இது.

2011: ரஷ்ய பய­ணிகள் கப்­ப­ லொன்று வோல்கா நதியில் கவிழ்ந்­ததால் 122 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2017: 3 வரு­டங்­க­ளாக ஐ.எஸ்.ஸின் பிடியிலிருந்த ஈராக்கின் மொசூல் நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதாக ஈராக்கிய பிரதமர் ஹைதர் அலி அபாதி பிரகடனப்படுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!