இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது: #CWC2019

0 2,297

(இங்கிலாந்திலிருந்து நெவில் அன்தனி)

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது,

மென்செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் நெற்றும் இன்றும் இரண்டு நாட்கள் நீடித்த அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியை நியூஸிலாந்து 18 ஓட்டங்களால் வென்றது

இப் போட்டியில் சுமாரான 240 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இரண்டாம் தொடரப்பட்ட ஆட்டத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா, முதல் பத்து ஓவர்களில் முன்வரிசை வீரர்களான ராகுல், ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி, தினேஷ் கார்த்திக் ஆகியோரை இழந்து மிக மோசமான நிலையை அடைந்தது. 

ரிஷாப் பான்ட், ஹார்திக் பாண்டியா ஆகியோர் இந்தியாவுக்கு கைகொடுக்கும் வகையில் துடுப்பெடுத்தாடினர். ஆனால் ஐந்தாவது விக்கெட்டில் 47 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் பான்ட் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பாண்டியாவும் வெளியேறினார்.

ஆனால், ரவீந்த்ர ஜடேஜாவின் அதிரடித் துடுப்பாட்டமும் மஹேந்திர சிங் தோனியின் நிதானத்துடனான துடுப்பாட்டமும் இந்தியாவை ஓரளவு கௌரவமான நிலைக்கு இட்டுச் சென்றது.

 ஜடேஜா 77 ஓட்டங்களையும் தோனி 50 ஓட்டங்களையும்  பெற்றனர்.

எனினும் 49,3 ஓவர்களில் 221 ஓட்டங்களுடன் இந்திய அணியின் சகல விக்கெட்களும் வீழ்ந்தன,

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!