லிபியாவில் அரசுக்கு எதிரான படையினரின் முகாம்களில் இருந்து அமெரிக்க தயாரிப்பு ஏவுகணைகள் கைப்பற்றப்பட்டன

Libya conflict: French missiles found on pro-Haftar base

0 152

லிபிய அரசுக்கு எதிரான இராணுவத் தளபதியின் நிலைகளில் இருந்து தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த ஏவுகணை விவகாரத்தில் ஐ.நாவின் ஆயுதத் தடையை மீறியுள்ளதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை பிரான்ஸ் மறுத்துள்ளது.

பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள குறித்த அமெரிக்கத் தயாரிப்பான ஜவெலின் ஏவுகணைகளை எந்தவொரு குழுவுக்கும் அனுப்பும் நோக்கம் இருக்கவில்லை எனவும் அவை அழிக்கப்படவிருந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

லிபிய தலைநகர் திரிபோலிக்கு தெற்கேயுள்ள முகாம் ஒன்றில் குறித்த ஏவுகணைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவை லிபிய அரசுக்கு எதிரான இராணுவத் தளபதி கலிஃபா ஹப்தருக்கு ஆதரவான படையினரால் பயன்படுத்தப்பட்ட முகாமிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

தளபதி கலிஃபா ஹப்தருக்கு ஆதரவான படையினர் திரிபோலி நகரைக் கைப்பற்றும் நோக்குடன் தற்போது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட லிபிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரிபோலி நகரைக் கைப்பற்ற இராணுவத் தளபதி கலிஃபா ஹப்தருக்கு ஆதரவான படையினரால் கடந்த ஏப்ரல் மாதம் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட லிபிய அரச படையினர் தளபதி கலிஃபா ஹப்தரின் கட்டுப்பாட்டில் இருந்த முகாம்களைக் கைப்பற்றியபோது நான்கு ஏவுகணைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக தற்போது அமெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!