‘பலகை வீட்டில் இருந்த ஸஹ்ரானுக்கு எவ்வாறு கோடிக் கணக்கில் பணம் கிடைத்தது?’ தயாசிறி ஜயசேகர கேள்வி

0 432

(ஆர்.யசி)

உயிர்த்த ஞாயிறு தினத்தில் பிரபல ஹோட்­டல்­களில் குண்டு வெடித்த போதும் தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் மாத்­திரம் ஏன் குண்­டுகள் வெடிக்­க­வில்லை. அப்­ப­டி­யென்றால் தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் இருந்­த­வர்கள் யார்? இது பாரிய சந்­தே­க­மாக உள்­ளது என நாடா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்க வர­வ­ழைக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர எம்.பி தெரி­வித்தார்.

ஸஹ்­ரானை யாரோ சிலர் இயக்­கி­யுள்­ளனர். இவர்கள் ஐ. எஸ் சார்ந்­த­வர்கள் அல்ல எனவும் சர்­வ­தேச சக்­தி­களின் தலை­யீ­டுகள் இருந்­துள்­ளன என்ற சந்­தேகம் உள்­ள­தா­கவும் அவர் கூறினார்.  ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்து விசா­ரணை நடத்த நிய­மிக்­கப்­பட்­டுள்ள நாடா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்க வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருந்த ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தயா­சிறி ஜய­சே­க­ர­விடம் நேற்று நடத்­தப்­பட்ட விசா­ர­ணையின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு சம்­பவம் தொடர்பில் நீங்கள் கூறிய விடயம் தொடர்­பா­கவே விளக்­க­ம­ளிக்க வேண்டும். ஆங்­கிலப் பத்­தி­ரிகை ஒன்­றுக்கும் தனியார் தொலைக்­காட்­சி­யிலும் ஈஸ்டர் தாக்­குதல் குறித்து உங்­க­ளுக்கு தெரிந்­தி­ருந்­தது என கூறி­யுள்­ளீர்கள்.
பதில்:- எனக்கு தெரியும் என நான் கூற­வில்லை.

தெரி­வுக்­குழு:- அந்தக் காணொ­ளியை நாம் தற்­போது காட்­டு­கின்றோம் பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் தீர்­மா­னிக்­கலாம். (தெரண தொலை­காட்­சியில் தயா­சிறி எம்.பி வழங்­கிய பேட்டி திரை­யி­டப்­பட்­டது)

கேள்வி:- உங்­க­ளிடம் தெளி­வு ­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். அர­சாங்­கத்தின் பக்­கமோ பாது­காப்பு தரப்­பி­டமோ குறை­பா­டுகள் இருக்­கின்­ற­தாக இருந்தால் அதனை நிவர்த்தி செய்­யவே நாம் இந்த விசா­ர­ணை­களை நடத்­து­கின்றோம்.
பதில்:- உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு நாம் ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­விக்க வேண்டும். இதனால் பல பாதிப்­புகள் ஏற்­பட்­டன. எனினும் இந்தத் தாக்­கு­த­லுக்கு பின்னர் நிலை­மை­களைக் கட்­டுப்­ப­டுத்த பேராயர் கர்­தினால் மற்றும் ஏனைய தலை­மைகள் எடுத்த முயற்­சி­களை நாம் மதிக்க வேண்டும்.

அத்­துடன் இந்தத் தாக்­கு­தலை நாடா­ளு­மன்­றத்தின் 225 பேரும் அறிந்­தி­ருந்­தனர் என கூறு­கின்ற கருத்து தவ­றா­னது. எனக்கு இது குறித்து தெரி­யாது. இந்த விடயம் தொடர்­பாக எனது பாது­காப்புப் பிரி­வினர் எனக்கு எத­னையும் கூற­வில்லை. இவ்­வா­றான விட­யங்­களை என்­னிடம் கேட்­கும்­போது நாம் சில கார­ணி­களைக் கூறுவோம். அவ்­வா­றான ஒரு ஊடக சந்­திப்பில் கூறிய விட­யங்­க­ளைத்தான் தெரி­வுக்­­கு­ழுவும் இன்று வின­வு­கின்­றது.

உண்­மையில் தாஜ் சமுத்­தி­ராவில் ஏன் குண்டு வெடிக்­க­வில்லை என்ற கேள்வி என்­னிடம் உள்­ளது. ஏன் ஏனைய இடங்­களில் வெடித்த குண்­டுகள் தாஜ் சமுத்­தி­ராவில் வெடிக்­க­வில்லை. ஏன் அந்த நபர் வெளியில் சென்று வேறு இடத்தில் வெடிக்க வைத்தார்.

ஏனைய மூன்று ஹோட்­டல்­களில் குண்டு வெடித்­த­போது தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் மாத்­திரம் வெடிக்­காமல் இருக்க என்ன காரணம் என்ற கேள்­வியை நான் எழுப்­பினேன். இது குறித்து தேடிப்­பார்க்க வேண்டும். தெரி­வுக்­குழு இதில் கவனம் செலுத்த வேண்டும். திட்­ட­மிட்டு இது செய்­யப்­பட்­டதா? ஹோட்­டலில் முக்­கிய நபர்கள் இருந்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது ஆகவே இது குறித்து ஆராய வேண்டும்.

கேள்வி:- உங்­க­ளுக்கு இது குறித்து விசே­ட­மாக ஏதேனும் தெரி­யுமா?
பதில்:- விசே­ட­மாக ஏதும் தெரி­யாது. பல பல விட­யங்­களைக் கூறு­கின்­றனர் அதில் உண்­மையும் இருக்­கலாம் பொய்யும் இருக்­கலாம், ஆக­வேதான் நான் இது குறித்து கேள்வி எழுப்­பினேன்.

கேள்வி:- உங்­களின் கருத்­துக்­களை கேட்­டதும் உங்­க­ளுக்கு தெரியும், யாரோ ஒருவர் மீது உங்­க­ளுக்கு சந்­தேகம் இருக்­கி­றது. ஆனால், ஏதோ ஒரு கார­ணிக்­காக நீங்கள் மூடி மறைக்­கின்­றீர்கள் என்றே விளங்­கு­கின்­றது. இது குறித்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டு­மென நீங்கள் நினை­க்கின்­றீர்­களா?.

பதில்:- ஆம் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும். மூன்று ஹோட்­டல்­களில் குண்டு வெடிக்­கிற நிலையில் தாஜ் சமுத்­தி­ராவில் குண்டு வெடிக்­கா­தி­ருக்­கவும் அந்த நபர் தெஹி­வ­ளையில் வெடிக்­க­வைக்­கவும் என்ன காரணம்?. ஏன் தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் குண்டு வெடிக்­க­வில்லை என்­பது எம் அனை­வ­ருக்கும் உள்ள பிரச்­சி­னை­யாகும். வேறு இடங்­க­ளிலும் இவ்­வாறு இடம்­பெற்­றி­ருந்தால் இதனைச் சாதா­ர­ண­மாக கருத முடியும். ஆனால் அவ்­வாறு நடக்­க­வில்­லையே.

கேள்வி:- அந்த குண்டு வெடிக்­கா­ததால் ஏதோ ஒரு கார­ணத்­துக்­காக வெடிக்க வைக்­கப்­ப­ட­வில்லை எனக் கரு­த­லாமா?
பதில்:- உங்­க­ளுக்கு அவ்­வாறு எண்­ணத்­தோன்றும். எனக்கு நான் கூறி­யதை போன்று எண்ணத் தோன்­று­கின்­றது. ஏன் வெடிக்­க­வில்லை என்ற சந்­தேகம் எனக்கு உள்­ளது.

கேள்வி:- நீங்கள் கூறு­வதைப் பார்த்தால் இந்த ஹோட்­டலில் எவ­ரா­வது முக்­கிய நபர் இருந்­தி­ருக்க வேண்டும். அதனால் வெடிக்­காது தடுக்­கப்­பட்­டுள்­ளது என்ற கற்­பனைக் கதைகள் மாதிரி உரு­வாகும்.
பதில்:- இது கட்­டுக்­கதை இல்­லையே. இது குறித்து சரி­யான விசா­ர­ணையை மேற்­கொள்­ளுங்கள். கடந்த கால தாக்­கு­தல்கள் தொடர்­பாக நீங்கள் சரி­யான தக­வல்­களை பெறலாம். நீங்கள் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்­தவர். அது உங்­க­ளுக்கு மிகவும் இல­கு­வா­ன­தாக அமையும் என நினைக்­கிறேன். கடந்த காலத்தில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­குதல் குறித்து தெரியும். இதன் உண்­மை­களை கண்­ட­றி­வது பெரிய விடயம் அல்ல. தாஜ் ஹோட்­டலில் இருந்­த­வர்கள் யார் என கண்­ட­றிந்தால் அடுத்த கட்ட விட­யங்கள் வெளி­வரும்.

கேள்வி:- நீங்கள் கூறு­வதை போல் பார்த்தல் எல். ரி.ரி.ஈ காலத்தில் தெஹி­வளை ரயிலில் வெடி­குண்டு இருந்­தது. வெயாங்­கொடை ரயிலில் வெடிக்­க­வில்லை. அப்­ப­டி­யென்றால் வெயாங்­கொடை ரயிலில் யாரோ இருந்­தார்கள் அதனால் வெடிக்­க­வில்லை என கூற­மு­டி­யாதே?
பதில்:- அவ்­வாறு இல்லை இன்­னொரு மாதிரி கூற முடியும். வெயாங்­கொடை ரயிலில் சென்ற நபர் வெடிக்க வைக்­காது சென்றார் என்று கரு­தலாம். அது மாதி­ரியே இதுவும்.

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் தாஜ் ஹோட்­டலில் இருந்­த­வ­ருக்கு ஏதேனும் கருத்து பரி­மாற்­றல்கள் இடம்­பெற்­றது என்றால் அவர் தொலை­பே­சியில் பேசி­ய­தையோ அல்­லது வேறு விதத்தில் எதை­யா­வது பார்க்க வேண்­டுமே. ஆனால் அவ்­வாறு எதுவும் இல்­லையே. அப்­படி இருக்­கையில் எவ்­வாறு அவ்­வாறு கரு­து­வது?
பதில்:- நான் அவ்­வாறு கூற­வில்­லையே. நீங்கள் தான் இவ்­வா­றான கார­ணி­களை கூறு­கின்­றீர்கள். நான் கூறு­வது என்­ன­வென்றால் ஏன் அவர் ஹோட்­டலில் இருந்து வெளி­யே­றினார், அன்று ஹோட்­டலில் இருந்­தது யார்? காலை உணவு உட்­கொள்ள வந்­த­வர்கள் யார்?

இரவு தங்­கி­யி­ருந்த நபர்கள் யார்? இந்த விட­யங்­களைக் கண்­ட­றிய வேண்டும். தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் இருந்­த­வர்கள் யார் என்ற கார­ணியை கண்­ட­றிந்தால் பல உண்­மைகள் வெளி­வரும். உண்­மை­யி­லேயே குண்டு வெடிக்­காத கார­ணத்­தினால் தான் அவர் வெளி­யே­றி­னாரா இல்லை வேறு கார­ணமாக் என ஒரு முடி­வுக்கு வர முடியும்.

கேள்வி:- . இந்தக் கூற்றை வெளி­யி­டு­வ­தற்கு நீங்கள் ஏதா­வது தக­வலை பெற்­றி­ருந்­தீர்­களா ? ஏனென்றால் எம்­மிடம் இந்தக் கார­ணிகள் ஏதும் இல்லை. உங்­க­ளுக்கு தெரி­யு­மாக இருந்தால் அது உத­வி­யாக இருக்கும்.?
பதில்:- நான் நம்­பு­வது என்­ன­வென்றால் ஸஹ்­ரானை யாரோ ஒரு குழு பயன்­ப­டுத்­தி­யுள்­ளது. அவர் தற்­கொ­லை­தா­ரி­யாக இருந்தால் அவ­ருக்கு எங்­கி­ருது இந்த அழுத்தம் வந்­தது யார் வழி­ந­டத்­தி­யது என்­ப­தனைக் கண்­ட­றிய வேண்டும்.

ஓர் அர­சி­யல்­வா­தி­யாக இந்த நோக்­கத்தில் நான் பார்க்­கின்றேன். இன்று நாட்டில் நடக்கும் அர­சியல் நிலை­மை­களில் பல்­வேறு நாடு­களின் தலை­யீ­டுகள் இதில் உள்­ளன. பல நாடுகள் இந்த நாட்டில் ஆட்­சியை வீழ்த்த ஆக்­கி­ர­மிக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. ஆகவே அர­சாங்­கத்தை மாற்­றவோ நாச­மாக்­கவோ ஜனா­தி­ப­தியை நாச­மாக்­கவோ அல்­லது வேறு அதி­கா­ரங்­களை கைப்­பற்­றவோ நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதில் சர்­வ­தேச தலை­யீ­டுகள் உள்­ளன என்றே நான் கரு­து­கிறேன்.

கேள்வி:- கத்­தோ­லிக்க தேவா­ல­யங்கள் மற்றும் இந்­திய உயர் ஸ்தானிகர் அலு­வ­ல­கத்­துக்கும் ஆல­யங்­க­ளுக்கும் தாக்­குதல் நடத்­தப்­ப­ட­வி­ருப்­ப­தாக கூறப்­பட்­டது. இதில் கத்­தோ­லிக்க தேவா­ல­யங்கள் தாக்­கப்­பட்­டன. ஆனால் இந்­திய உயர் ஸ்தானி­க­ரா­லயம் தாக்­கப்­ப­ட­வில்லை. இதில் ஏதேனும் தொடர்­புகள் இருக்கும் என நினை­கி­றீர்­களா?
பதில்:- அவ்­வாறு என்னால் எத­னையும் கூற முடி­யாது. தற்­கொ­லை­தாரி ஒருவர் ஒரு இடத்தில் மட்டும் ஏன் தற்­கொலைத் தாக்­குதுல் நடத்­த­வில்லை என்ற கேள்­வியே எனக்கு இருந்­தது. வேறு விட­யங்கள் எனக்கு தெரி­ய­வில்லை.

கேள்வி:- இலங்­கையில் இந்த தாக்­கு­தலின் பின்னால் ஐ.எஸ் உள்­ள­தாக நிரூ­பிக்­கப்ட்­டுள்­ளது. இந்த நிலையில் வேறு தரப்பைக் குற்றம் கூற முடி­யுமா? இதனை திசை திருப்பும் வகையில் அமை­யாதா? இப்­போதே இது ஐ,எஸ் என்று உறு­தி­யாக தெரி­கின்­றது, அவ்­வா­றி­ருக்­கையில் ஏன் கதையை மாற்­ற­வேண்டும்?
பதில்:- நான் திசை திருப்­ப­வில்லை, இந்தத் தாக்­கு­தலின் பின்­ன­ணியில் ஐ.எஸ் இருப்­ப­தாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. பிர­த­மரின் உரையைப் பாருங்கள், அமைச்சர் கிரி­யெல்ல கூறிய கார­ணி­களை பாருங்கள். அவர்கள் ஆரம்­பத்தில் இதனை ஏற்­று­கொள்­ள­வில்லை.

கேள்வி:. அர­சி­யல்­வா­திகள் பல பல கதை­களை கூறி­னார்கள் ஆனால் ஐ,எஸ். என உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டது.
பதில் :- இந்தத் தாக்­கு­தலில் ஐ.எஸ் தொடர்­பு­பட்­ட­தனை யார் உங்­க­ளுக்கு கூறி­னார்கள் . எந்த அறிக்­கையில் இது கூறப்­பட்­டுள்­ளது? அதனை வெளிப்­ப­டுத்­துங்கள் நான் நம்­பு­கின்றேன். ஐ,.எஸ் தான் என உறு­தி­யாக கூறுங்கள் அப்­போது நான் நம்­பு­கின்றேன். இன்றும் இது குறித்து விசா­ர­ணைகள் சரி­யான நடக்­க­வில்லை என பேராயர் கர்­தினால் கூறு­கின்றார். வத்­தி­கானில் சென்று அழு­கின்றார்.

கேள்வி : அப்­ப­டி­யென்றால் தெரி­வுக்­குழு விசா­ர­ணைகள் சரி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஏனைய விசா­ர­ணை­களில் நம்­பிக்­கை­யில்ல என்றா நீங்கள் கூறு­கின்­றீர்கள்?
பதில்:- நான் அவ்­வாறு கூற­வில்லை, நீங்கள் தான் கூறு­கின்­றீர்கள். விசா­ர­ணைகள் கைதுகள் இடம்­பெற்­றுள்­ளன. கர்­தினால் வத்­தி­கானில் அழு­து­கொண்டு கருத்து கூற நேர்ந்­தது குறித்தே நான் கூறினேன், எதிர்­கா­லத்தில் தாக்­குதல் நடக்கும் என மக்கள் நினைக்­கின்­றனர்.

இரண்டு வரு­டங்­களில் இந்தப் பிரச்­சி­னையை முடிக்­கலாம் என கூறி­னீர்கள் ஆனால் அது முடி­யாது. இதனால் பொரு­ளா­தாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே இதில் நம்­பிக்­கை­யில்லை என்றே கூறினேன்.

கேள்வி:- நானும் அதைத்தான் கூறு­கின்றேன். கண்­டிப்­பாக இன்­னொரு தாக்­குதல் நடக்கும் என்றே நான் கூறு­கின்றேன். அப்­ப­டி­யென்றால் நீங்­களும் எனது நிலைப்பாட்டில் தான் உள்ளீர்கள் என?
பதில்:- இல்லை நான் உங்களின் நிலைப்பாட்டில் இல்லை. இன்று உலகில் அனைத்து பகுதிகளிலும் பயங்கரவாதம் உள்ளது. ஆகவ தான் பாதுகாபு வேண்டும் என்று கூறுகின்றேன்.

இன்று சர்வதேச நாடுகளில் இந்த அச்சுறுத்தல் சகல பகுதிகளில் உள்ளன. யார் இயக்குவது எனத் தெரியாது. நாம் அன்றாட அரசியல் விளையாட்டில் உள்ளோம், இதனை அரசியலாக்க வேண்டாம், ஜனாதிபதியையும் மற்றவர்களையும் சாட்டி அரசியல் செய்ய வேண்டாம். நாம் பலமாக தேசிய பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்றே கூறுகின்றேன்.

கேள்வி:- இங்கு உங்களை அழைத்தது அரசியல் பிரசாரம் செய்வதற்காக அல்ல. மற்றவர்களின் நிலைப்பாட்டை தவிர நீங்கள் என்ன நினைக்கின்றீர் என கூறுங்கள். எந்த சர்வதேச நாடுகளின் தலையீடுகள் உள்ளது என கூறுங்கள்.
பதில்:- இந்த நாட்டில் உள்ள நிலையில் என்னால் சர்­வ­தேச நாடு­களின் மீது குற்றம் சுமத்த முடி­யாது. இந்த நாட்டில் நிலை­மை­களை பாருங்கள், தெற்கில் துறை­முக போராட்டம், திரு­கோ­ண­மலை சிக்­கல்கள், சர்­வ­தேச உடன்­ப­டிக்­கைகள் என அனைத்­தையும் பாருங்கள். இதில் பல நெருக்­க­டிகள் உள்­ளது. ஏனைய நாடு­களை விட எமது நாட்டில் மக்கள் அச்­சு­றுத்­தலில் உள்­ளனர். அத­னையே நான் சரி­யாக கண்­ட­றிய வேண்டும் என கூறு­கின்றேன்.

கேள்வி:- திரை மறைவில் ஒரு சக்தி இருப்­ப­தாக கூறு­கின்­றீர்கள் இது வரை வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­களில் ஒருவர் துருக்கி சென்றார். ஆனால் அவர் சிரி­யா­வுக்கு சென்­றாரா என்று உறு­தி­யா­க­வில்லை. அதேபோல் இந்த தாக்­கு­தலை ஐ.எஸ் ஏற்­று­கொள்ள வேண்டும் என இலங்­கையில் இருந்து ஒருவர் கூறிய பின்­னரே அவர்கள் பொறுப்­பேற்­றனர். அவர்­க­ளுக்கு அது­வரை தெரி­யாது என இந்­திய ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழு­தி­யுள்ளார். இது குறித்து நீங்கள் என்ன கூறு­கின்­றீர்கள்?
பதில்:- இந்த விட­யங்கள் குறித்து எனக்கும் தெரி­யாது நானும் தேடு­கின்றேன். ஆரம்­பத்தில் சில தக­வல்கள் கிடைத்­தது. தெற்­கா­சியா இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தலில் சிக்­கி­யுள்­ளது என தெரியும் ஆனால் இலங்­கையில் எவரும் தற்­கொலை தாரி­யாக மாறு­வார்கள் என நினைத்­துப்­பார்க்­க­வில்லை.

இந்த விட­யத்தில் எத­னையும் உடனே கூற முடி­யாது. இதனால் தான் இது வேறு சக்­தியின் அழுத்தம் என நான் கூறு­கின்றேன். ஆனால் இலங்­கையில் முஸ்­லிம்கள் அடிப்­ப­டை­வாத பக்கம் தள்­ளப்­ப­டு­கின்­றனர் என்று தெரி­கின்­றது. சில விட­யங்­களில் கவனம் செலுத்த வேண்டும். இல்­லை­யென்றால் பாரிய பிரச்­சினை வரும்.

கேள்வி:- தாஜ் சமுத்­திரா விடயம் மற்றும் நீங்கள் கூறிய கார­ணி­களை கூற முடி­யாதா?
பதில்;- முடி­யாது

கேள்வி:- சர்­வ­தேச நாடு­களின் தொடர்பு குறித்தும் தெளி­வான பதில் ஒன்று கூற முடி­யாது?
பதில் :- முடி­யாது.

கேள்வி:- நீங்கள் அன்று கூறி­னீர்கள் தெளி­வாக கூற முடியும் என. இப்­போது தெளி­வாக கூற முடி­யாது என கூறு­கின்­றீர்கள்?
பதில்;- இவர்தான் என தெளி­வாக கூற முடி­யாது. யாரையும் என்னால் கூற முடி­யாது. எனக்கு தகவல் பல வரு­கின்­றது. ஆனால் ஆதாரம் இல்­லாது எத­னையும் கூற முடி­யாது என்றே நான் கூறு­கின்றேன். நான் கூறிய முழு­மை­யான விட­யங்­களை கேட்­டு­விட்டு பின்னர் கேள்வி கேட்க வேண்டும். நான் கூறிய கார­ணி­களை முழு­மை­யாக கேட்­காது ஒரு கார­ணியை வைத்­துக்­கொண்டு ஊட­கங்­களில் வெளி­வந்­துள்­ளது.

கேள்வி :நீங்கள் இரு­வரின் பெயரை கூறி­யுள்­ளீ­ரகள்.ஏன் இருவர் என கூறி­னீர்கள்?
பதில்:- யார் இருவர்

கேள்வி:- இல்லை இருவர் குறித்து அவ்­வப்­போது கூறி­னீர்கள்?
பதில்:- இல்லை நான் இருவர் குறித்து கூற­வில்லை. அந்த தாக்­கு­தலின் பின்­னணி குறித்தும் ஏன் தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் குண்டு வெடிக்­க­வில்லை என்­றுதான் கூறினேன். யார் யார் என என்னால் கூற முடி­யாது நாம் பெயர் விப­ரங்­களை கூற முடி­யாது ஹோட்டல் விப­ரங்­களை பெறும் போது அது குறித்த தக­வல்­களை உரிய அதி­கா­ரி­க­ளிடம் பெற­மு­டியும். உங்­க­ளுக்கு விசா­ர­ணைக்கு அது தேவை எனில் அதனை பெற்­றுக்­கொள்­ளுங்கள்.

கேள்வி:- வெளி­நாட்டு சக்தி என இந்த விட­யத்தில் கூறி­னீர்கள். அவ்­வா­றான நிலை உள்­ளதா
பதில்:- அப்­படி நான் கூற­வில்லை, இன்று வெளி­நாட்டு சக்­திகள் இந்த நாட்டில் இயங்கும் செயற்­பா­டுகள் குறித்தே நான் கூறினேன். இப்­போது என்னால் இது குறித்து ஒன்றும் கூற முடி­யாது. பின்னர் என்னை மீண்டும் குற்றப் புல­னாய்வு பிரிவில் விசா­ரிப்­பார்கள். அது பர­வா­யில்லை.

கேள்வி:- ஊட­கங்கள் இல்­லாது ஏதா­வது கூற விரும்­பு­கின்­றீர்­களா?
பதில்:- இல்லை

கேள்வி;- உங்­க­ளுக்கு தெரிந்த விட­யங்­களை தெரிந்­து­கொள்­ளவே உங்­களை நாம் வர­வ­ழைத்தோம். ஆகவே நீங்கள் கூறு­வதே நல்­லது?
பதில்;- மத்­திய வங்­கியில் மற்றும் ஏனைய வங்­கி­களில் அவர்­க­ளுக்கு வந்த பணம் குறித்து ஆரா­யுங்கள் அப்­போது தெரியும் சர்­வ­தேச தொடர்பு என்ன என்­பது.

தெரி­வுக்­குழு:- நீங்கள் கூறிய கார­ணிகள் குறித்து நாம் மத்­திய வங்­கி­யிடம் மீண்டும் கேட்போம். நீங்கள் கூறு­வதால் நாம் மீண்டும் கேட்­கிறோம்.
பதில்:- ஸஹ்­ரா­னுக்கு சர்­வ­தேச பணம் நீண்­ட­கா­ல­மாக வந்­துள்­ளது. அது எவ்­வாறு வந்­தது. யார் அனுப்­பி­யது என ஆரா­யுங்கள்.

கேள்வி:- ஸஹ்­ரா­னுக்கு சர்­வ­தேச பணம் வந்­தது என்­பது உங்­க­ளுக்கு உறு­தி­யாக தெரி­யுமா?
பதில்:- ஆம் அது தெரியும் தானே

கேள்வி;- ஸஹ்­ரா­னுக்கு எவ்­வ­ளவு பணம் வந்­தது யார் மூல­மாக வந்­தது என்ற எந்த கார­ணி­களும் எமக்கு தெரி­யாது. அதுதான் கேட்­கின்றோம்.
பதில்:- இந்த பொலிஸ் விசா­ர­ணை­களில் பல கார­ணிகள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. பலகை வீட்டில் இருந்த நபர் எவ்­வாறு இவ்­வ­ளவு கோடி பணம் கிடைத்­தது. பள்­ளி­வாசல் எவ்­வாறு புன­ர­மைக்­கப்­பட்­டது. அவர்­களின் தொடர்­பா­டலை பாருங்கள் அனைத்­துமே பல கோடி பணங்­களை கொண்­டுள்­ளது. அதுதான் கூறினேன்.

கேள்வி:- உங்­களை அழைத்­த­மைக்­கான நோக்கம் ஊடாக உங்­க­ளிடம் சில தக­வல்கள் இருப்­ப­தனை அறிய முடி­கி­றது. ஆனால் அதனை முழு­மை­யாக கூற முடி­யாத நிலைக்கு சென்­று­விட்­டீர்கள்.
பதில்:- எனது கூற்று தொடர்­பாக பல கருத்­துக்­களை நிலைப்­பா­டு­களை நீங்கள் எடுக்­கலாம். ஆனால் அது தொடர்­பான பல கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் நீங்கள் விசா­ரித்து விடை காண­மு­டியும்.

கேள்வி:- குரு­ணாகல் கைதில் தங்­களால் ஒருவர் விடு­விக்­கப்­பட்ட விடயம் என்ன?
பதில்:- அன்று எனது பகு­தியில் சில கடைகள் தாக்­கப்­பட்­டன. பலர் ஒன்­று­கூடி இருந்­தனர். அங்கு நாமல் குமார என்ற நபரும் இருந்தார். அவர் என்­னமோ திட்டம் தீட்­டு­கின்றார் என தெரிந்­து­கொண்டேன்.

நான் யாரையும் விடு­விக்க வில்லை. முன்­ன­ரேயே அவர்­களை விடு­விக்க முடி­வுகள் எடுக்­கப்­பட்­டன. இதன் பின்னர் மே 12 இல் குளி­யாப்­பிட்­டி­யவில் தாக்­குதல் நடந்­தது. அதன் பின்னர் பலர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். அன்­றி­ரவு பள்ளி வாசலும் தாக்­கப்­பட்­டது. நான் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் கதைத்தேன்.

நான் தலை­யி­டா­விடில் பொலிஸ் நிலையம் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருக்கும். அதனை தாக்க முயற்­சித்­தார்கள். அதன் பின்னர் நான் எனது வாக­னத்தை இங்­கி­ரிய பொலிஸ் நிலை­யத்தில் இருந்து எடுத்து விடு­த­லை­யா­ன­வர்­களை பாது­காப்­பாக கொண்டு சென்றேன். மக்கள் தாக்­கு­தலை நடத்­து­வார்கள் என அச்சம் ஏற்­பட்­டது. நான் அன்று மதிய உணவை உண்­ட­போது தமது கடைகள் மீது தாக்­குதல் நடத்­து­வ­தாக இருவர் கூறினர்.

அங்கு சென்ற போது என் மீதும் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது. அங்கு இரு கடை­களை தீ வைப்­ப­தி­லி­ருந்து தடுத்தேன். இது தான் நடந்­தது. கடை­களை தாக்கும் வரை நான் காத்­தி­ருக்­க­வில்லை. இவ்­வாறே நானும் வாக்கு மூலம் கொடுத்தேன். சிங்­கள- முஸ்லிம் கல­வ­ரத்தை தடுக்க நான் முயற்­சித்தேன்..தாக்­கு­தலின் 3 கிழ­மைக்கு பின்னர். தான் நடந்­தது. முஸ்லிம் கிரா­மங்­களை சோதனை செய்­யு­மாறு கோரினேன். 21 தாக்­கு­தலின் பின்னர்.

சிங்­கள கிரா­மங்­களில் வாழும் மக்கள் தூங்­காத நிலை இருந்­தது. இந்த நிலை கார­ண­மாக பொலிசார் சோத­னை­களை மேற்­கொள்­ள­வில்லை. சில பகு­தி­களில் பிரச்­சி­னைகள் ஏற்­ப­ட­வில்லை. இன்­னொரு விட­யத்­துக்­காக நான் இந்த கேள்­வி­யினை முன்­வைக்­கின்றேன்.

இந்த தாக்­கு­தலில் மூன்று வாரங்­க­ளுக்கு பின்னர் இந்த தாக்­கு­தலை தடுக்கும் நோக்­கு­ட­னேயே இந்த விசா­ர­னை­களை நடத்­து­கின்றோம். முஸ்லிம் மக்கள் தொடர்­பாக அச்சம் காணப்­பட்­டது. ஆயு­தங்கள் காணப்­பட்­டது மீட்­கப்­பட்­டது. இந்த பின்­ன­ணியில் சில பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.. முஸ்­லிம்கள் மத்­தியில் பயங்­க­ர­வா­திகள் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. தாக்­கு­த­லா­ளிகள் எவ்­வாறு வந்­தார்கள் என தெரி­யாது.

கேள்வி:- நீங்கள் ஒரு முக்­கிய கட்­சியின் பிர­முகர் கடந்த ஞாயிறு கண்டி கூட்டம் ஒன்றில் இந்த நாடு சிங்­கள நாடு என கூறப்­பட்­டது. இரு வர்ணம் அகற்­றப்­பட்ட கொடி கொண்­டு­வ­ரப்­பட்­டது இது குறித்த தங்­களின் நிலைப்­பாடு என்ன?.
பதில்:- : தமிழ் தரப்­பினர் தமது தலைவர் பிர­பா­கரன் என கூறு­கின்­றனர். சிங்­கள அடிப்­படை வாதிகள் சிங்­கள தரப்பு வாதங்­களை முன்­வைக்­கின்­றனர். இவ்­வா­றான விட­யங்­களால் மக்கள் அடிப்­படை வாதங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார்கள். அவர்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை உள்­ளது. இது சிங்­கள நாடு என அந்த தரப்­பினர் நினைக்­கின்­றனர்.

முஸ்லிம் அமைச்­சர்கள், உறுப்­பி­னர்கள் இணைந்து முஸ்லிம் அர­சையும் தமி­ழர்கள் இணைந்து தமிழ் அர­சையும் அமைக்க முடி­யுமா. சிங்­கள மக்கள் பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­கின்­றனர். இந்த நிலையில் நாட்டை பாது­காக்க இலங்­கை­யர்கள் என்ற வகையில் ஒன்­று­பட வேண்டும்.

கேள்வி:- வெளி­நாடு சக்­தி­களின் ஈடு­பா­டி­ருந்தால் இந்த விட­யத்தில் அதனை உறு­திப்­ப­டுத்த முடி­யாத நிலை உள்­ளது. ஜனா­தி­ப­தியை கொலை செய்­வ­தற்கு வெளி­நாடு சக்­தி­களின் சதி இருப்­ப­தாக கூறப்­பட்­டது. இந்த இரண்­டுக்கும் தொடர்­பி­ருப்­ப­தாக கூற­மு­டி­யுமா?
கேள்வி:- அவ்­வாறு கூற­மு­டி­யாது. இது வேறு பிரச்­சினை நான் அவ்­வாறு கூற முற்­ப­ட­வில்லை. இந்த விடயம் தேசிய பாது­காப்பு சம்­பந்­த­மான பிரச்­சி­னை­யாகும்

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் சகல பாது­காப்பு கூட்­டங்­க­லிலும் கலந்து கொண்­டீர்­களா?
பதில் :- இல்லை

கேள்வி:- எப்­போது கலந்­து­கொண்­டீர்கள்?
பதில்:- தாக்­குதல் ஆண்டு கூடிய கூட்­டத்தில்.

கேள்வி:- அன்றா அடுத்த நாளா?
பதில்:- அடுத்த நாள்.

கேள்வி:– யார் உங்­களை அழைத்­தது?
பதில்:- ஜனா­தி­பதி

கேள்வி:- தேசிய பாது­காப்பு கூட்­டங்­களில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்ள கூடாது. எத்­தனை எதிர்க்­கட்சி எம்­பிக்கள் அதில் பங்­கேற்­றனர்.
பதில் :- இவர்கள் தான் இருக்க வேண்டும் என சட்டம் இல்லை. தனக்கு தேவை­யா­ன­வர்­களை ஜனா­தி­பதி அழைப்பார். அவ­ருக்கு நம்­பி­கை­யுள்ள நபர்­களை அவர் அழைத்தார். அதில் எம்­மையும் அழைத்தார் என்றே நினைக்­கிறேன்.

கேள்வி:- பாது­காப்பு குழுக் கூட்­டங்­களில் நினைக்கும் நபர்­களை அழைக்க முடி­யாது. இது அர­சாங்கம் மட்­டுமே ஆராய வேண்­டிய விடயம். எதிர்­கட்­சிக்கு இது சொல்­லக்­கூ­டா­தது?
பதில்:- எங்­கா­வது அவ்­வாறு கூறப்­பட்­டுள்­ளதா, ஏதா­வது புத்­த­கத்தில் அது உள்­ளதா, இருந்தால் கூறுங்கள் நான் ஏற்­று­கொள்­கிறேன்.

கேள்வி:- வர்த்­த­மா­னியில் உள்­ளது. பின்னர் இது மாற்­றப்­பட்­டது. ஆனால் அதிலும் ஆளும் கட்­சியின் உறுப்­பி­னர்­களை தான் வர­வ­ழைக்க முடியும். எதிர்க்கட்சி உறுப்பினர்களை அழைக்க முடியாது?
பதில்:- நாம் இன்று எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜனாதிபதியுடன் உள்ளோம். ஆகவே, நாம் ஜனாதிபதியுடன் பேசி தீர்மானம் எடுக்கின்றோம். ஆனால் பாதுகாப்பு கூட்டங்களின் காரணிகளை ஒருநாளும் நாம் அரசியலுக்காக பாவிக்கவில்லை.

கேள்வி:- ஜனாதிபதிக்கு கட்சி உறுப்பினர்களுடன் பேச வேண்டும் என்றால் வேறு இடத்தில் பேச வேண்டும். ஜனாதிபதி இதனை தெரிந்துகொள்ள வேண்டும்?
பதில்;- ஜனாதிபதிக்கு நீங்கள் கற்பிக்க முடியாது. எங்காவது அப்படி இருந்தால் கூறுங்கள்.

கேள்வி;- பேரவை விடயங்களை அடிப்படையாக கொண்டு நீங்கள் சில விடயங்களை வெளிப்படுத்தினார்களா?
பதில்: இல்லை நான் அதனை வெளிப்படுத்தவில்லை.

கேள்வி:- பேட்டியில் வழங்கிய தகவல்கள் அனைத்தும் நீங்கள் அறிந்த விடயங்களாக இருக்கின்றனவா?
பதில் : ஆம் நான் அதனை அறிந்தே கூறினேன்.

கேள்வி: நீங்கள் இரு­வரின் பெயரை கூறி­யுள்­ளீ­ரகள்.ஏன் இருவர் என கூறி­னீர்கள்?
பதில்:- யார் இருவர்

கேள்வி:- இல்லை இருவர் குறித்து அவ்­வப்­போது கூறி­னீர்கள்?
பதில்:- இல்லை நான் இருவர் குறித்து கூற­வில்லை. அந்த தாக்­கு­தலின் பின்­னணி குறித்தும் ஏன் தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் குண்டு வெடிக்­க­வில்லை என்­றுதான் கூறினேன். யார் யார் என என்னால் கூற முடி­யாது நாம் பெயர் விப­ரங்­களை கூற முடி­யாது ஹோட்டல் விப­ரங்­களை பெறும் போது அது குறித்த தக­வல்­களை உரிய அதி­கா­ரி­க­ளிடம் பெற­மு­டியும். உங்­க­ளுக்கு விசா­ர­ணைக்கு அது தேவை எனில் அதனை பெற்­றுக்­கொள்­ளுங்கள்.

கேள்வி:- வெளி­நாட்டு சக்தி என இந்த விட­யத்தில் கூறி­னீர்கள். அவ்­வா­றான நிலை உள்­ளதா
பதில்:- அப்­படி நான் கூற­வில்லை, இன்று வெளி­நாட்டு சக்­திகள் இந்த நாட்டில் இயங்கும் செயற்­பா­டுகள் குறித்தே நான் கூறினேன். இப்­போது என்னால் இது குறித்து ஒன்றும் கூற முடி­யாது. பின்னர் என்னை மீண்டும் குற்றப் புல­னாய்வு பிரிவில் விசா­ரிப்­பார்கள். அது பர­வா­யில்லை.

கேள்வி:- ஊட­கங்கள் இல்­லாது ஏதா­வது கூற விரும்­பு­கின்­றீர்­களா?
பதில்:- இல்லை

கேள்வி: உங்­க­ளுக்கு தெரிந்த விட­யங்­களை தெரிந்­து­கொள்­ளவே உங்­களை நாம் வர­வ­ழைத்தோம். ஆகவே நீங்கள் கூறு­வதே நல்­லது?
பதில்: மத்­திய வங்­கியில் மற்றும் ஏனைய வங்­கி­களில் அவர்­க­ளுக்கு வந்த பணம் குறித்து ஆரா­யுங்கள் அப்­போது தெரியும் சர்­வ­தேச தொடர்பு என்ன என்­பது.

தெரி­வுக்­குழு:- நீங்கள் கூறிய கார­ணிகள் குறித்து நாம் மத்­திய வங்­கி­யிடம் மீண்டும் கேட்போம். நீங்கள் கூறு­வதால் நாம் மீண்டும் கேட்­கிறோம்.
பதில்:- ஸஹ்­ரா­னுக்கு சர்­வ­தேச பணம் நீண்­ட­கா­ல­மாக வந்­துள்­ளது. அது எவ்­வாறு வந்­தது. யார் அனுப்­பி­யது என ஆரா­யுங்கள்.

கேள்வி:- ஸஹ்­ரா­னுக்கு சர்­வ­தேச பணம் வந்­தது என்­பது உங்­க­ளுக்கு உறு­தி­யாக தெரி­யுமா?
பதில்:- ஆம் அது தெரியும் தானே

கேள்வி: ஸஹ்­ரா­னுக்கு எவ்­வ­ளவு பணம் வந்­தது யார் மூல­மாக வந்­தது என்ற எந்த கார­ணி­களும் எமக்கு தெரி­யாது. அதுதான் கேட்­கின்றோம்.
பதில்:- இந்த பொலிஸ் விசா­ர­ணை­களில் பல கார­ணிகள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. பலகை வீட்டில் இருந்த நபர் எவ்­வாறு இவ்­வ­ளவு கோடி பணம் கிடைத்­தது. பள்­ளி­வாசல் எவ்­வாறு புன­ர­மைக்­கப்­பட்­டது. அவர்­களின் தொடர்­பா­டலை பாருங்கள் அனைத்­துமே பல கோடி பணங்­களை கொண்­டுள்­ளது. அதுதான் கூறினேன்.

கேள்வி:- உங்­களை அழைத்­த­மைக்­கான நோக்கம் ஊடாக உங்­க­ளிடம் சில தக­வல்கள் இருப்­ப­தனை அறிய முடி­கி­றது. ஆனால் அதனை முழு­மை­யாக கூற முடி­யாத நிலைக்கு சென்­று­விட்­டீர்கள்.
பதில்:- எனது கூற்று தொடர்­பாக பல கருத்­துக்­களை நிலைப்­பா­டு­களை நீங்கள் எடுக்­கலாம். ஆனால் அது தொடர்­பான பல கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் நீங்கள் விசா­ரித்து விடை காண­மு­டியும்.

கேள்வி:- குரு­ணாகல் கைதில் தங்­களால் ஒருவர் விடு­விக்­கப்­பட்ட விடயம் என்ன?
பதில்:- அன்று எனது பகு­தியில் சில கடைகள் தாக்­கப்­பட்­டன. பலர் ஒன்­று­கூடி இருந்­தனர்.

அங்கு நாமல் குமார என்ற நபரும் இருந்தார். அவர் என்­னமோ திட்டம் தீட்­டு­கின்றார் என தெரிந்­து­கொண்டேன். நான் யாரையும் விடு­விக்க வில்லை. முன்­ன­ரேயே அவர்­களை விடு­விக்க முடி­வுகள் எடுக்­கப்­பட்­டன.

இதன் பின்னர் மே 12 இல் குளி­யாப்­பிட்­டி­யவில் தாக்­குதல் நடந்­தது. அதன் பின்னர் பலர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். அன்­றி­ரவு பள்ளி வாசலும் தாக்­கப்­பட்­டது.

நான் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் கதைத்தேன். நான் தலை­யி­டா­விடில் பொலிஸ் நிலையம் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருக்கும்.

அதனை தாக்க முயற்­சித்­தார்கள். அதன் பின்னர் நான் எனது வாக­னத்தை இங்­கி­ரிய பொலிஸ் நிலை­யத்தில் இருந்து எடுத்து விடு­த­லை­யா­ன­வர்­களை பாது­காப்­பாக கொண்டு சென்றேன்.

மக்கள் தாக்­கு­தலை நடத்­து­வார்கள் என அச்சம் ஏற்­பட்­டது. நான் அன்று மதிய உணவை உண்­ட­போது தமது கடைகள் மீது தாக்­குதல் நடத்­து­வ­தாக இருவர் கூறினர்.

அங்கு சென்ற போது என் மீதும் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது. அங்கு இரு கடை­களை தீ வைப்­ப­தி­லி­ருந்து தடுத்தேன். இது தான் நடந்­தது. கடை­களை தாக்கும் வரை நான் காத்­தி­ருக்­க­வில்லை. இவ்­வாறே நானும் வாக்கு மூலம் கொடுத்தேன். சிங்­கள- முஸ்லிம் கல­வ­ரத்தை தடுக்க நான் முயற்­சித்தேன்..தாக்­கு­தலின் 3 கிழ­மைக்கு பின்னர். தான் நடந்­தது. முஸ்லிம் கிரா­மங்­களை சோதனை செய்­யு­மாறு கோரினேன்.

21 தாக்­கு­தலின் பின்னர். சிங்­கள கிரா­மங்­களில் வாழும் மக்கள் தூங்­காத நிலை இருந்­தது. இந்த நிலை கார­ண­மாக பொலிசார் சோத­னை­களை மேற்­கொள்­ள­வில்லை. சில பகு­தி­களில் பிரச்­சி­னைகள் ஏற்­ப­ட­வில்லை.  இன்­னொரு விட­யத்­துக்­காக நான் இந்த கேள்­வி­யினை முன்­வைக்­கின்றேன். இந்த தாக்­கு­தலில் மூன்று வாரங்­க­ளுக்கு பின்னர் இந்த தாக்­கு­தலை தடுக்கும் நோக்­கு­ட­னேயே இந்த விசா­ர­னை­களை நடத்­து­கின்றோம். முஸ்லிம் மக்கள் தொடர்­பாக அச்சம் காணப்­பட்­டது.

ஆயு­தங்கள் காணப்­பட்­டது மீட்­கப்­பட்­டது. இந்த பின்­ன­ணியில் சில பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.. முஸ்­லிம்கள் மத்­தியில் பயங்­க­ர­வா­திகள் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. தாக்­கு­த­லா­ளிகள் எவ்­வாறு வந்­தார்கள் என தெரி­யாது.

கேள்வி:- நீங்கள் ஒரு முக்­கிய கட்­சியின் பிர­முகர் கடந்த ஞாயிறு கண்டி கூட்டம் ஒன்றில் இந்த நாடு சிங்­கள நாடு என கூறப்­பட்­டது. இரு வர்ணம் அகற்­றப்­பட்ட கொடி கொண்­டு­வ­ரப்­பட்­டது இது குறித்த தங்­களின் நிலைப்­பாடு என்ன?.
பதில்:- : தமிழ் தரப்­பினர் தமது தலைவர் பிர­பா­கரன் என கூறு­கின்­றனர். சிங்­கள அடிப்­படை வாதிகள் சிங்­கள தரப்பு வாதங்­களை முன்­வைக்­கின்­றனர். இவ்­வா­றான விட­யங்­களால் மக்கள் அடிப்­படை வாதங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார்கள். அவர்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை உள்­ளது. இது சிங்­கள நாடு என அந்த தரப்­பினர் நினைக்­கின்­றனர்.

முஸ்லிம் அமைச்­சர்கள், உறுப்­பி­னர்கள் இணைந்து முஸ்லிம் அர­சையும் தமி­ழர்கள் இணைந்து தமிழ் அர­சையும் அமைக்க முடி­யுமா. சிங்­கள மக்கள் பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­கின்­றனர். இந்த நிலையில் நாட்டை பாது­காக்க இலங்­கை­யர்கள் என்ற வகையில் ஒன்­று­பட வேண்டும்.

கேள்வி:- வெளி­நாடு சக்­தி­களின் ஈடு­பா­டி­ருந்தால் இந்த விட­யத்தில் அதனை உறு­திப்­ப­டுத்த முடி­யாத நிலை உள்­ளது. ஜனா­தி­ப­தியை கொலை செய்­வ­தற்கு வெளி­நாடு சக்­தி­களின் சதி இருப்­ப­தாக கூறப்­பட்­டது. இந்த இரண்­டுக்கும் தொடர்­பி­ருப்­ப­தாக கூற­மு­டி­யுமா?
கேள்வி:- அவ்­வாறு கூற­மு­டி­யாது. இது வேறு பிரச்­சினை நான் அவ்­வாறு கூற முற்­ப­ட­வில்லை. இந்த விடயம் தேசிய பாது­காப்பு சம்­பந்­த­மான பிரச்­சி­னை­யாகும்

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் சகல பாது­காப்பு கூட்­டங்­க­லிலும் கலந்து கொண்­டீர்­களா?
பதில் :- இல்லை

கேள்வி:- எப்­போது கலந்­து­கொண்­டீர்கள்?
பதில்:- தாக்­குதல் ஆண்டு கூடிய கூட்­டத்தில்.

கேள்வி:- அன்றா அடுத்த நாளா?
பதில்:- அடுத்த நாள்.

கேள்வி:- யார் உங்­களை அழைத்­தது?
பதில்:- ஜனா­தி­பதி

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!