இளம்பெண் ஒருவருக்கு தகவல் அனுப்பி சர்ச்சையில் சிக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி!

0 2,349

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அடிக்கடி பெண்கள் பிரச்சினையில் மாட்டிக்கொள்வது வழக்கம். அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினைகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது. முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது என அவரது மனைவி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் முகமது, ஷமி ட்விட்டரில் ஒரு இளம் பெண்ணுக்கு தகவல் அனுப்பியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரது குறித்த தகவலுக்கு அந்த பெண் நேற்று (09) ட்விட்டரில் அவருக்கு ஒரு பதில் டுவிட் செய்துள்ளார். அதில் அந்த பெண் 1.4 மில்லியன் பேர் தன்னைப் பின்பற்றி வருகின்றனர். ஒரு கிரிக்கெட் வீரர் ஏன் எனக்கு தொடர்ந்து தகவல் அனுப்பி வருகிறார் என்று ட்விட் செய்துள்ளார்.

இவரின் இந்த ட்விட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த பெண் செய்த ட்விட்டால் தான் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் முகமது ஷமி இந்திய அணியில் இடம் பெறவில்லை எனவும் சில ரசிகர்கள் முகமது ஷமி தொடர்பில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம்பெறாதது பல கேள்விகளை எழுப்பியது. இதுகுறித்து முகமது ஷமியின் பயிற்சியாளர் பத்ருதீன் சித்திக் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

முகமது ஷமி இடம் பெறாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. 14 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒருவரை எப்படி ஆடும் லெவனில் இருந்து நீக்கம் செய்ய முடியும். அவரிடம் இதை விட வேறு எதனை எதிர்பார்க்கிறீர்கள்?. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஷமி விளையாடவில்லை.

அவருக்கு ஓய்வு அளித்து விட்டு அரையிறுதியில் களம் இறக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. முதல் 6 பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாட வேண்டும். இல்லாவிட்டால் நாம் தோற்கத்தான் நேரிடும்.

முகமது ஷமிக்கு உலகக்கோப்பை தொடரில் ஆரம்பத்திலேயே வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் வழங்கப்பட்ட வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்தார் என பத்ருதீன் கூறினார்.

நன்றி -தினந்தந்தி  ட்விட்டரில் ஒரு இளம்பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பி சர்ச்சையில் சிக்கிய முகமது ஷமி

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!