சாரதியான பெண் மீது பாம்பை எறிந்துவிட்டு காரை கடத்திச் சென்ற யுவதி கைது!

0 1,470

சார­தி­யான பெண் மீது பாம்பை எறிந்­து­விட்டு, கார் ஒன்றை கடத்திச் சென்ற யுவதி, பொலிஸ் தடுப்­பு­களை மோதிய நிலையில் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

தென் கரோ­லினா மாநி­லத்தின் கிறீன்­விலே நகரில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.கிறீன்­விலே நகரைச் சேர்ந்த ஹில்­மேரி மொறினோ பேறியஸ் எனும் 29 வய­தான யுவ­தியே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார்.

SUV ரக வாக­ன­மொன்றின் சார­தி­யான பெண்­ணிடம் காரின் சாவியை தரு­மாறு யுவதி மொறினோ பேறியஸ் வலி­யு­றுத்தி அவரை தாக்­கினார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

அதன்பின், அப்பெண் மீது கரிய நிற­மான பாம்பை, மொறினோ பேறியஸ் எறிந்தார்.

அதன்பின் காருக்குள் பாம்பு கிடந்த நிலை­யி­லேயே அதை மொறினோ பெறியஸ் செலுத்திச் சென்றார்.

இதன்­போது, கிறீன்­விலே நகரில் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வி­ருந்த கண்­காட்சி கோலூன்றிப் பாய்தல் நிகழ்­வொன்­றுக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பாது­காப்புத் தடுப்­புகள் மீது காரை மோதினார் மொறினோ பேறியஸ்.

அதை­ய­டுத்து. ஹில்­மேரி மொறினோ பேறி­யஸை பொலிஸார் கைது செய்­தனர். அவரை 25,000 டொலர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனு­ம­தி­ய­ளித்­தது. இதே­வேளை, மேற்­படி பாம்பு விஷமற்றது எனவும், அதை அருகிலுள்ள பற்றைப் பகுதிக்குள் விடுவித்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!