தோனி சிறப்பாக விளையாடினார்; ஓய்வு குறித்து எதுவும் கூறவில்லை: விராத் கோஹ்லி தெரிவிப்பு

0 2,137

“இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஹேந்திர சிங் தோனி தனது ஓய்வு குறித்து எங்களுடன் எதுவும் பேசவில்லை” என இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்களால் நியூஸிலாந்திடம் தோல்வியுற்று வெளியேறியது.

இப்போட்டிக்குப் பின்னர் இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி பேசுகையில், ‘ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணிக்கு மிக சிறப்பாக இருந்தது. பந்துவீச்சு, களத்தடுப்பு இரண்டிலும் சிறப்பான நிலையில் இருந்தோம்.

ஓட்ட இலக்கை இலக்கை நாங்கள் எட்டுவோம் என்று நினைத்தோம். ஆனால் முதல் அரைமணி நேரம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. நியூஸி லாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள், நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் அவர்கள்தான்.

தோனியும், ஜடேஜாவும் சிறந்த கூட்டு அமைத்து விளையாடினார்கள். ஒரு கட்டத்தில போட்டி மீண்டும் எங்கள் கைக்கு வந்ததாகவே உணர்ந்தோம். சில தவறான ஷொட்களை நாங்கள் தேர்ந்தெடுத்து விட்டோம். அதுதவிர நாங்களும் தரமான பங்களிப்பை கொடுத்துள்ளோம்.

தொடரின் நாங்கள் பெற்ற அனைத்து வெற்றியையும் கடைசி 45 நிமிடங்கள் சிதைத்துவிட்டது. போட்டியில் இருந்து ஏதாவது ஒரு அணி வெளியேற தான் வேண்டும்.

நியூஸிலாந்து அணிக்கு அந்த தகுதி உள்ளது. அவர்கள் பதற்றமின்றி தைரியத்துடன் எங்களை எதிர்கொண்டு ஆடினார்கள். இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்’ என்றார்.

“ஒய்வு குறி;தது தோனி எதுவும் கூறவில்லை”

மஹேந்திர சிங் தோனி குறித்து விராத் கோஹ்லி கூறுகையில், ‘இன்றைய போட்டியில் தோனி மிகவும் சிறப்பாக ஆடினார். அவர் களமிறங்கிய இடம் மிக மிக அழுத்தம் நிறைந்தது. அவருக்கு பின்னால் இந்திய அணியில் துடுப்பெடுத்தாடுவத்றகு புவனேஷ்வர் குமார் மட்டும்தான் இருந்தார். அந்த நிலையிலும் தோனி சிறப்பாக ஆடினார்.

அவர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார். மிக மோசமான கட்டத்தில் அவரை இறக்குவதே எங்களின் திட்டமாக இருந்தது. அவர் அதை இன்று செய்தார். அவர் மெதுவாக ஆடியது எங்களுக்கு கடைசி நேரத்தில் உதவியது.

ஆனால் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் மீண்டு வந்தது எங்களுக்கு எதிராக முடிந்தது.
ஓய்வு குறித்து எதுவும் பேசவில்லை தோனி எங்களிடம் எதுவும் பேசவில்லை. போட்டி முடிந்து நாங்கள் இன்னும் எதுவும் பேசவில்லை. அவர் தன்னுடைய எதிர்காலம் குறித்தும், ஓய்வு திட்டங்கள் குறித்தும் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. அதை பற்றி அவர்தான் முடிவெடுப்பார்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!