கிரிக்கெட்டின் ஆதிகால வைரிகள் ஆஸி., இங்கிலாந்து மோதும் உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதி ஆட்டம் இன்று

0 82

(இங்­கி­லாந்­தி­லி­ருந்து நெவில் அன்­தனி)

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் ஆதி­கா­லந்­தொட்டு வைரி­க­ளாக இருந்­து­வரும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடை­யி­லான உலகக் கிண்ண இரண்­டா­வது அரை இறுதிப் போட்டி பேர்­மிங்ஹாம், எஜ்­பெஸ்டன் விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

நடப்பு சம்­பி­ய­னாக இங்­கி­லாந்தில் காலடி எடுத்து வைத்த ஆரொன் பின்ச் தலை­மை­யி­லான அவுஸ்­தி­ரே­லிய அணி இம்­முறை சம்­பி­ய­னா­வ­தற்கு அனு­கூ­ல­மான அணி­யாகத் தென்­ப­ட­வில்லை. எனினும், 12ஆவது உலகக் கிண்ண அத்­தி­யா­யத்தில் முத­லா­வது அணி­யாக அரை இறு­திக்குள் நுழைந்த அவுஸ்­தி­ரே­லியா, எட்­டா­வது தட­வை­யாக உலகக் கிண்ண அரை இறு­தியில் விளை­யாட தகு­தி­பெற்று சம்­பி­ய­னா­வ­தற்­கான வாயிலைத் திறந்­து­கொண்­டுள்­ளது.

1999, 2003, 2007 ஆகிய மூன்று தொடர்ச்­சி­யான உலகக் கிண்ண அத்­தி­யா­யங்கள் உட்­பட ஐந்து தட­வைகள் உலக சம்­பி­ய­னான அவுஸ்­தி­ரே­லியா சிறந்த வீரர்­களைக் கொண்ட அணி­யாகத் தென்­ப­டு­கின்­றது.  இந் நிலையில் அவுஸ்­தி­ரே­லி­யாவை உலக சம்­பி­னாக்­கிய அணித் தலை­வர்­க­ளான அலன் போர்டர் (1987), ஸ்டீவ் வோ (1999), ரிக்கி பொன்டிங் (2003, 2007), மைக்கல் க்ளார்க் (2015) ஆகி­யோ­ருடன் ஆரொன் பின்ச்சும் இணை­வ­தற்கு முயற்­சிக்­க­வுள்ளார்.

அவுஸ்­தி­ரே­லிய துடுப்­பாட்­டத்தில் டேவிட் வோர்னர் (3 சதங்கள், 3 அரைச் சதங்­க­ளுடன் 638 ஓட்­டங்கள்), ஆரொன் பின்ச் 2 சதங்கள், 3 அரைச் சதங்­க­ளுடன் 507 ஓட்­டங்கள்), அலெக்ஸ் கேரி (3 அரைச் சதங்­க­ளுடன் 329 ஓட்­டங்கள்), முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (294 ஓட்­டங்கள்) ஆகியோர் பிர­கா­சித்­துள்­ளனர்.

பந்­து­வீச்சில் மிச்செல் ஸ்டார்க் (24 விக்­கெட்கள், பெட் கமின்ஸ் (13 விக்­கெட்கள்) ஆகி­யோரே பிர­தான பங்­காற்­றி­யுள்­ளனர்.துடுப்­பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா உபாதை கார­ண­மாக குழாத்­தி­லி­ருந்து நீங்­கி­யுள்­ளமை அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு பேரி­டி­யாக அமைந்­துள்­ளது. அவ­ருக்குப் பதி­லாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் குழாத்தில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

உபா­தைக்­குள்­ளா­கி­யி­ருந்த வேகப்­பந்­து­வீச்­சாளர் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் இன்­றைய போட்­டியில் விளை­யாட பூரண உடற்­த­கு­தியைக் கொண்­டுள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய பயிற்­றுநர் ஜஸ்டின் லெங்கர் தெரி­வித்தார்.

வர­வேற்பு நாடான இங்­கி­லாந்தும் ஆறா­வது தட­வை­யாக உலகக் கிண்ண அரை இறு­தியில் பங்­கு­பற்றி வரு­கின்­றது. இம்­முறை எப்­ப­டி­யா­வது உலக சம்­பியன் பட்­டத்தை முதல் தட­வை­யாக சுவீ­க­ரிக்க வேண்டும் என்ற வைராக்­கி­யத்­துடன் ஒய்ன் மோர்கன் தலை­மை­யி­லான இங்­கி­லாந்து விளை­யாடி வரு­கின்­றது.

1992க்குப் பின்னர் அரை இறு­தியில் விளை­யாட தக­தி­பெற்­றுள்ள இங்­கி­லாந்து மூன்று தட­வைகள் (1979, 1987, 1992) இறுதிப் போட்­டியில் விளை­யாடி முறையே மேற்­கிந்­தியத் தீவுகள், அவுஸ்­தி­ரே­லியா, பாகிஸ்தான் ஆகிய அணி­க­ளிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்­றி­ருந்­தது.

இம்­முறை பாகிஸ்­தா­னி­டமும் இலங்­கை­யி­டமும் தோல்வி அடைந்து பின்னர் இந்­தி­யா­வையும் நியூ­ஸி­லாந்­தையும் கடைசிப் போட்­டி­களில் வெற்­றி­கொண்ட இங்­கி­லாந்து தட்­டுத்­த­டு­மாறி அரை இறுதி வாய்ப்பைப் பெற்­றுக்­கொண்­டது.

இம்­முறை அதிக வீரர்கள் சதங்கள் குவித்த அணி­யாக இங்­கி­லாந்து திகழ்­கின்­றது. ஜோ ரூட் (2 சதங்கள், 3 அரைச் சதங்­க­ளுடன் 500 ஓட்­டங்கள்), ஜொனி பெயார்ஸ்டோ (2 சதங்கள், 2 அரைச் சதங்­க­ளுடன் 462 ஓட்­டங்கள்), பென் ஸ்டோக்ஸ், 4 அரைச் சதங்­க­ளுடன் 381 ஓட்­டங்கள்), ஜேசன் ரோய் (ஒரு சதம், 3 அரைச் சதங்­க­ளுடன் 341 ஓட்­டங்கள்), ஒய்ன் மோர்கன் (ஒரு சதம், ஒரு அரைச் சதத்­துடன் 317 ஓட்­டங்கள்), ஜொஸ் பட்லர் (ஒரு சதம், ஒரு அரைச் சதத்­துடன் 253 ஓட்­டங்கள்) ஆகியோர் துடு­ப­பாட்­டத்தில் வெகு­வாக பிர­கா­சித்­துள்­ளனர்.

பந்­து­வீச்சில் ஜொவ்ரா ஆச்சர் (17 விக்­கெட்கள்), மார்க் வூட் (16 விக்­கெட்கள்), க்றிஸ் வோக்ஸ் (10 விக்­கெட்கள்) ஆகியோர் சிறப்­பாக செயற்­பட்­டுள்­ளனர்.

அவஸ்­தி­ரே­லி­யாவும் இங்­கி­லாந்தும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 148 தட­வைகள் சந்­தித்­துள்­ளன. அவற்றில் 82–61 என்ற ஆட்டக் கணக்கில் அவுஸ்­தி­ரே­லியா முன்­னிலை வகிக்­கின்­றது. 2 போட்­டிகள் சம­நி­லையில் முடி­வ­டைந்­துள்­ள­துடன் 3 போட்­டி­களில் முடிவு கிட்­ட­வில்லை.

உலகக் கிண்­ணத்தில் 8 தட­வைகள் மோதி­யுள்­ளன. அவற்றில் 6–2 என அவுஸ்­தி­ரே­லியா முன்னிலை வகிக்கின்றது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2015க்குப் பின்னர் நடைபெற்ற 11 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றுது.

எவ்வாறயினும் இன்றைய அரை இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றக்காக கடுமையாக முயற்சிக்கும் என்பதால் கடைசிவரை இப் போட்டி விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!