பிரித்தானிய கப்பலை கைப்பற்றும் ஈரான் படையினரின் முயற்சி முறியடிப்பு – பிரிட்டன் தெரிவிப்பு

Iranian boats 'tried to intercept British tanker'

0 1,390

பிரித்தானிய எண்ணெய்க் கப்பலொன்றை ஹோர்மூஸ் நீரிணையில் படகுகளில் வந்த ஈரானிய படையினர் இடைமறிக்க முயற்சி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பிரித்தானிய எண்ணெய்க் கப்பல்

எனினும் இந்த முயற்சி பிரித்தானிய கடற்படையினரின் HMS Montrose  எனும் போர்க்கப்பலினால் முறியடிக்கப்பட்டு ஈரானிய படகுகள் விரட்டப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்திச்சேவை கூறியுள்ளது.

பிரித்தானியாவின் HMS Montrose போர்க்கப்பல்

குறித்த பிரித்தானிய எண்ணெய்க் கப்பலை ஈரானிய நீர்ப்பரப்புக்கு அருகிலேயே நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது. எனினும் பிரித்தானிய போர்க்கப்பலின் எச்சரிக்கையை அடுத்து, ஈரானிய படையினரின் படகுகள் பின்வாங்கியுள்ளன.

கடந்த வாரம் ஜிப்ரால்டர் கடற்பிராந்தியத்தில் பிரித்தானிய கடற்படையினரால் ஈரானிலிருந்து புறப்பட்ட எண்ணெய்க் கப்பலொன்று கைப்பற்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!