பயிற்றுநர் றோட்ஸை பங்களாதேஷ் பதவிநீக்கியது

0 79

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் பங்­க­ளாதேஷ் அணி பிர­கா­சிக்கத் தவ­றி­யதை அடுத்து ஸ்டீவ் றோட்ஸை, அணி பயற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை விலக்­கி­யுள்­ளது.

பங்­க­ளாதேஷ் அணி இம் மாத இறு­தியில் இலங்கை வருகை தர­வுள்ள நிலையில் புதிய பயிற்­றுநர் ஒரு­வரை பங்­க­ளாதேஷ் நிய­மிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. பரஸ்­பர ஒப்­பு­த­லுக்கு அமைய றோட்ஸை பதவி நீக்கம் செய்யத் தீர்­மா­னித்­த­தா­கவும் பதவி நீக்கம் உடன் அமு­லுக்கு வரு­வ­தா­கவும் செவ்­வா­யன்று பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபையின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி நிஸா­முதின் சௌதரி தெரி­வித்தார்.

உலகக் கிண்ணப் போட்­டிகள் முடிவில் பங்­க­ளாதேஷ் அணி நாடு திரும்­பிய மறுநாள் இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.
12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்­தி­யா­யத்தில் பங்­க­ளாதேஷ் அணி எட்­டா­வது இடத்தைப் பெற்­றது.

இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து ஆகிய அணி­க­ளுக்கு ஓர­ளவு சவா­லாக விளங்­கிய பங்­க­ளா­தேஷின் வெற்­றிகள் தென் ஆபி­ரிக்கா, மேற்­கிந்­தியத் தீவுகள், ஆப்­கா­னிஸ்தான் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக அமைந்­தது.

பங்­க­ளா­தேஷின் பயிற்­று­ந­ராக கடந்த வருடம் ஜூன் மாதம் பத­வி­யேற்ற ஸ்டீவ் றோட்ஸ், உலகக் கிண்­ணத்­துக்கு முன்னர் அயர்­லாந்தில் நடை­பெற்ற மும்­முனைத் தொடரில் பங்­க­ளா­தேஷை சம்­பி­ய­னாக வழி­ந­டத்­தி­யி­ருந்தார். அந்த மும்­முனைத் தொடரில் அயர்­லா­ந்து, மேற்­கிந்­தியத் தீவுகள் ஆகிய அணி­களும் விளை­யா­டின.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் அடுத்த வரு டம் நடை­பெ­ற­வுள்ள உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்டிவரை ஸ்டீவ் ரோட்ஸை பங்களாதேஷ் ஒப்பந்தம் செய்திருந்தபோதிலும் நடப்பு உல கக் கிண்ணத்துடன் அவரது பதவி பறி போயுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!