உலகக் கிண்ண 2ஆவது அரை இறுதியில் இலங்கையர் இருவர் மத்தியஸ்தம்

0 1,849

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடையில் பேர்­மிங்­ஹாமில் இன்று நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண இரண்­டா­வது அரை இறுதிப் போட்­டியில் இலங்­கையர் இருவர் மத்­தி­யஸ்தம் வகிக்­க­வுள்­ளனர். இவர்கள் இரு­வரும் ஐ.சி.சி.யினால் பெயி­ர­டப்­பட்­டுள்ள பிர­சித்தமான மத்­தி­யஸ்­தர்கள் பட்­டி­யலில் இடம்­பெ­று­ப­வர்­க­ளாவர்.

குமார் தர்­ம­சேன

 

 இப் போட்­டியில் பொது மத்­தி­யஸ்­த­ராக இலங்­கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலை­வரும் றோயல் கல்­லூ­ரியின் முன்னாள் அணித் தலை­வ­ரு­மான ரஞ்சன் மடு­கல்லே நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

மடு­கல்லே 357 சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­க­ளிலும், 187 டெஸ்ட் போட்­டி­க­ளிலும், 99 உலக இரு­பது 20 போட்­டி­க­ளிலும் பொது மத்­தி­யஸ்­த­ராக செயற்­பட்­டுள்ளார்.

60 வய­தான ரஞ்சன் மடு­கல்லே 20 வரு­டங்­க­ளுக்கு மேல் பொது மத்­திஸ்­த­ராக செயற்­பட்டு வரு­வ­துடன் பொது மத்­தி­யஸ்­தர்கள் குழாத்தின் தலை­வ­ரா­கவும் செயற்­படுகின்றார்.

ரஞ்சன் மடு­கல்லே

 

1996இல் உலக சம்­பி­ய­னான இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்­பெற்ற குமார் சங்­கக்­கார கள மத்­தி­யஸ்­த­ராக இன்­றைய போட்­டிக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

நாலந்தா கல்­லூ­ரியின் முன்னாள் கிரிக்கெட் வீர­ரான குமார் தர்­ம­சேன 60 டெஸ்ட் போட்­டி­க­ளிலும் 101 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் 22 சர்­வ­தேச உலக இரு­பது 20 கிரிக்கெட் போடடிகளிலும் கள மத்தியஸ்தராக செயற்பட்டுள்ளார். இவர் உலகின் அதி சிறந்த மத்தியஸ்தருக்கான ஐ.சி.சி. விருதை வென்றவராவார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!