மொரட்டுவை பல்கலையில் தீப் பரவல்: உபகரணங்கள் நாசம்!

0 716

                                                                                                                                      (செ.தேன்மொழி)
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்காட்சி நிகழ்வொன்றுக்காக  நேற்று (10) புதன்கிழமை மாணவர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவினாலே இந்தத்  தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  

இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீப்பரவலினால் சில கற்றல் உபகரணங்கள் நாசமடைந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo