உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் பத்து இடங்களுக்குள் இலங்கை அணி இடம்பெறும் என ட்ரிக்ஸி நம்பிக்கை

0 125

(இங்­கி­லாந்­தி­லி­ருந்து நெவில் அன்­தனி)

இங்­கி­லாந்தின் லிவர்­பூலில் நடை­பெ­ற­வுள்ள 15ஆவது உலகக் கிண்ண வலை­பந்­தா­டட அத்­தி­யா­யத்தில் இலங்கை அணியை உலக தர­வ­ரி­சையில் பத்­தா­வது இடத்­துக்கு அல்­லது அதனை விட சிறந்த இடத்­துக்கு கொண்­டு­வ­ரு­வதே தங்­க­ளது ஒரே குறிக்கோள் என இலங்கை வலை­பந்­தாட்ட அணி முகா­மை­யாளர் ட்ரிக்ஸி நாண­யக்­கார தெரி­வித்தார்.

லிவர்பூல் எம் அண்ட் எஸ். வங்கி எரினா உள்­ளக அரங்கில் நாளை­முதல் 21ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண வலை­பந்­தாட்டப் போட்­டியில் 16 அணிகள் பங்­கு­பற்­று­வ­துடன் நடப்பு உலக சம்­பியன் அவுஸ்­தி­ரே­லியா, வட அயர்­லாந்து, ஸிம்­பாப்வே ஆகிய அணி­க­ளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்­பெ­று­கின்­றது.

சில வருட இடை­வெ­ளியின் பின்னர் கடந்த வருடம் ஆசிய கிண்­ணத்தை இலங்கை வென்­றதை நினைவு கூர்ந்த ட்ரிக்ஸி நாணயக்­கார இம்­முறை உலகக் கிண்ண வலை­பந்­தாட்டப் போட்­டியில் சிறந்த பெறு­பெ­று­களை இலங்கை அணி ஈட்டும் என நம்­பு­வ­தாக குறிப்­பிட்டார்.

உலகக் கிண்­ணத்­துக்கு முன்­னோ­டி­யாக கென்யா, பொட்ஸ்­வானா அணி­க­ளுடன் பயிற்சிப் போட்­டி­களில் விளை­யாடி ஆபி­ரிக்க நாடு­க­ளிடம் வலைபந்­தாட்ட அனு­ப­வத்தைப் பெற்­றுக்­கொண்­ட­தா­கவும் உலகக் கிண்ணப் போட்­டிக்கு முன்­ன­தாக லண்­டனில் ஏழு பயிற்சிப் போட்­டி­களில் விளை­யா­டிய இலங்கை அணி திற­மையை வெளிப்­ப­டுத்­தி­ய­தா­கவும் ட்ரிக்ஸி கூறினார்.

இம்­முறை ஏ குழுவில் ஸிம்­பாப்­வே­யையும் வட அயர்­லாந்­தையும் வெற்­றி­கொள்ள முடியும் என ட்ரிக்ஸி நம்­பிக்கை வெளி­யிட்டார்.

1995இல் பேர்­மிங்­ஹாமில் நடை­பெற்ற உலகக் கிண்ண வலை­பந்­தாட்டப் போட்­டியில் பேர்­முடா, வட அயர்­லாந்து, சிங்­கப்பூர் ஆகிய அணி­களை இலங்கை வெற்­றி­கொண்­ட­போது இலங்கை அணியின் பயிற்­று­ந­ராக ட்ரிக்ஸி நாண­யக்­கார செயற்­பட்டார்.

24 வரு­டங்­களின் பின்னர் இலங்கை அணியின் முகா­மை­யா­ள­ராக இப்­போது செயற்­ப­டு­கின்றார்.

உலகக் கிண்ண வலை­பந்­தாட்டப் போட்­டியை முன்­னிட்டு இலங்கை வீராங்­க­னைகள் அனை­வரும் சிறந்த மனோ­நி­லை­யு­டனும் தன்­னம்­பிக்­கை­யு­டனும் இருப்­ப­தாக தெரி­வித்த ட்ரிக்ஸி நாண­யக்­கார, இவ்­வ­ருடம் எப்­ப­டி­யா­வது முதல் பத்து இடங்­க­ளுக்குள் வர தமது அணி முயற்­சிக்கும் என்றார்.

மேலும் திலக்கா ஜின­தாச அளித்து வரும் சிறந்த பயிற்­சிகள் இலங்கை அணிக்கு சாத­க­மான பெறுபே­று­களை ஈட்­டிக்­கொ­டுக்கும் எனவும் அவர் கூறினார். இலங்கை வலை­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் தலைவியாக கடந்த மே மாதம்வரை பதவி வகித்த ட்ரிக்ஸி நாணயக்கார, சிநேகபூர்வ சர்வதேச போட்டிகள், சர்வதேச பயிற்சிப் போட்டிகளில் இலங்கையை பங்குபற்ற வைத்தமைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!