ஞானசார தேரர் மாத்திரமல்ல எந்தத் தேரரும் சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது! -வியாழேந்திரன்

0 423

                                                                                                                            (எம்.மனோசித்ரா)
“பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இலங்கை சிங்களவர்களுக்கு உரித்தான நாடு என்று தெரிவித்த கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது.“ தமிழ் மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் இதனை வன்மையாகக் கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஞானசார தேரர் மாத்திரமல்ல. வேறு எந்தத் தேரராகவிருந்தாலும் சிறுபான்மையினருக்கு எதிராகக் கருத்துக்களை முன்வைப்பதையும், செயற்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஞானசார தேரர் கூறுகிறார் என்பதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாகி விட முடியாது. அதே போன்று இலங்கை தனியொரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானது என்று கூறுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தியவர்களும், அவரை சிறையில் சென்று பார்வையிட்டவர்களுமே அவர் தற்போது சிறுபான்மையினருக்கு எதிராக இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

சிறுபான்மையினப் பிரதிநிதிகளான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஞானசார தேரரை சிறையில் சென்று பார்வையிட்டார். அத்தோடு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் அவரை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இவற்றின் விளைவை தான் அவர்கள் இன்று எதிர் கொண்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!