ரிஷாத்துக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!

0 208

                                                                                                                               (எம்.மனோசித்ரா)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சதொச விற்பனை நிலையத்தின் மூலம் பல்வேறு ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து எதிர்க்கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அழுத்கமகே,  டி.வி.சானக  ஆகியோர்  இன்று (11) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளனர்.

முறைப்பாடளிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக, ‘ரிஷாத் பதியுதீன் மாத்திரல்ல. தற்போது அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற 30 அமைச்சர்களில் 20 பேர் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இவை தொடர்பிலும் வெகு விரைவில் வெளிப்படுத்துவோம்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!